» »கொஞ்சம் உழைப்பு! கொஞ்சம் லக்! இந்த ராசிக்காரங்களோட அசுர வளர்ச்சிய பாக்கலாம்!

கொஞ்சம் உழைப்பு! கொஞ்சம் லக்! இந்த ராசிக்காரங்களோட அசுர வளர்ச்சிய பாக்கலாம்!

Written By:

வைகாசி மாசம் வரப்போகுது. இறை நம்பிக்கை உள்ளவங்களுக்கு நல்லா தெரியும் இந்த மாசம் உழைப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்னு. அதுலயும் மனசுல எந்த வித கெட்ட எண்ணங்களும் இல்லாதவங்களுக்கு கடவுள் அள்ளி கொடுப்பார். குறிப்பிட்ட ராசிக்காரங்களோட நட்சத்திர மற்றும் ராசி பலன்களைப் பொறுத்து அவங்களுக்கு கொஞ்சம் லக் இருந்தா மட்டும்போதும், இந்த கோயில்களுக்கெல்லாம் சென்றுவந்தால், இந்த ஒரு வருடத்துல ஓஹோனு முன்னேற்றம் காண்பாங்க. அடுத்த வைகாசிக்கு அவங்க ரேஞ்சே வேறனு சினிமா டயலாக் மாதிரி கூட சொல்லலாம். ஆனா வெறுமனே வீட்டிலிருந்து அதிர்ஷ்டம் வர வரைக்கும் வெய்ட் பண்ணுவோம்னு இருந்தா எதுவும் நடக்காது. உங்கள் பணிகளை நீங்கள் செய்துகொண்டே இருங்கள். நேரம் கிடைக்கும்போது இந்த கோயில்களுக்கு போய் வாருங்கள். அப்பறம் என்ன நீங்க வேற லெவல். வாங்க எந்தெந்த ராசிக்காரங்க எந்தெந்த கோயில்களுக்கு போகலாம்னு பாக்கலாமா?

ஸ்ரீ ராமசுவாமி ஆலயம்

ஸ்ரீ ராமசுவாமி ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராமசுவாமி ஆலயம் மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமனின் ஆலயமாகும். நாயக்க மன்னர்களின் பிரதம மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சிதரின் முயற்சியால் இக்கோவில் கட்டப்பட்டது. நாயக்கமன்னர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவை வணங்கிவந்தவர்கள். பெருமாளுக்கு ஆலயம் எடுப்பதைப் பெருமையாகக் கருதியவர்கள். இக்கோவிலின் பாணி அக்காலத்தில் பின்பற்றப்பட்ட நாயக்கர் காலக் கட்டிடக் கலையைச் சேர்ந்ததாகும். அழகிய கைவேலைப்பாடுகள் இக்கோவிலின் முழுமையும் தென்படுகின்றன.

பா.ஜம்புலிங்கம்

 கும்பகோணம்

கும்பகோணம்


ஸ்ரீ ராமசுவாமி ஆலயத்துக்கும் அதற்குமுன் பல நூற்றாண்டுக்குமுன் கட்டப்பட்ட ஸ்ரீ சக்கரபாணி ஆலயத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் நீண்ட பிரகாரம் கட்டி அதனை வணிகப் பயன்பாட்டுக்கென அனுமதித்தார் கோவிந்த தீட்சிதர். இக்கோவிலின் சுவர்களில், ராமாயணத்தில் வரும் அனைத்து காட்சிகளும் ஓவிங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. இவை மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தீட்டப்பட்டுள்ளன.
பா.ஜம்புலிங்கம்

 ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்

ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம்


கும்பகோணத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கும்பேஸ்வரர் ஆலயம் ஒரு சிவாலயமாகும். இக்கோவிலில் தான் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் மாசிமக விழாவும் 12 ஆண்டுகளுக்கொருமுறைக் கொண்டாடப்படும் மகாமகப் பெருவிழாவும் கொண்டாடப்படுகின்றன. இக்கோவில் 1300 ஆண்டுகள் பழமையானதென நம்பப்படுகிறது. இடைக்காலச் சோழர்கள் இந்நகரத்தை ஆண்டபொழுதிலிருந்து இக்கோவில் உள்ளது. 7 ஆம் நூற்றண்டில் வாழ்ந்த சைவநாயன்மார்களது பாடல்களிலும் பதிகங்களிலும் இக்கோவிலைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோவிலில் 15 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரை நாயக்கர்களால் பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Arian Zwegers

சிவாலயம்

சிவாலயம்


இன்று கும்பகோணம் நகரத்திலேயே மிகப்பெரிய சிவாலயமாக விளங்குவது இக்கோவிலே. இதன் ராஜகோபுரம் 125 அடி உயரத்தில், 9 நிலைகளைக் கொண்டதாக கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. இக்கோவிலுக்குள் அடுத்தடுத்து அமைந்துள்ள 3 வட்டமான சுற்றுச்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இக்கோவிலில் சிவபெருமான் ஆதி கும்பேஸ்வரர் என்னும் பெயருடன் வழிபடப்படுகிறார். இக்கோவிலின் நடுமையத்தில் அமைந்துள்ள இறைவனது சன்னிதியில் ஆதிகும்பேஸ்வரரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.

Ssriram mt

 ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில்

ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில்


திருவட்டாறில் இருக்கும் ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் கோவில் 108 திவ்யதரிசனங்களுள் ஒன்று. இதன் காரணமாக பக்தர்கள் தொடர்ந்து இவ்விடத்திற்கு வருகை தருகின்றனர். கோதை, பாரலீ மற்றும் தாமிரபரணி ஆகிய மூன்று நதிகளுக்கு நடுவே எழில்மிகும் நிலப்பரப்பில் இக்கோவில் அமைந்து இருக்கிறது. இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவபெருமானும், ஆதிகேசவபெருமாளும் ஆவர்.

Infocaster

திருவட்டாறு

திருவட்டாறு

புராணத்தின்படி ஆதிகேசவ ஸ்வாமி ஒரு கடுமையான போரில் கேசி என்கிற அரக்கனை கொன்றார். அரக்கனின் மனைவி ஆதிகேசவ ஸ்வாமியை அழிக்கும்படி கங்கை நதியிடம் வேண்டிக்கொண்டார். ஆனால், ஸ்வாமிகளை அவரால் வீழ்த்த முடியவில்லை. பெரிய முகப்பு மற்றும் கதவு தூண்கள், மற்றும் மேற்கூரை ஆகியவை கேரள கட்டிடக்கலை முறையில் மரத்தால் கட்டப்பட்டு இருக்கின்றன. மரம் நேர்த்தியாக செதுக்கப்பட்டு பல்வேறு தேவர்களையும், தேவிகளையும் பல்வேறு நிலைகளில் பிரதிபலிக்கின்றன. தூண்களிலும், மேற்கூரையிலும் இந்து இதிகாசங்களில் வரும் முக்கிய காட்சிகள் அழகாக செதுக்கப்பட்டு இருக்கின்றன.
Infocaster

திருநள்ளாறு

திருநள்ளாறு


இந்தியாவிலேயே சனி பகவானுக்கென்று இருக்கும் ஸ்தலங்களில் முதன்மையான, சிறப்பான ஸ்தலம் திருநள்ளாறு. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து வழிபடும் சக்தி வாய்ந்த சனி கிரக ஸ்தலம் திருநள்ளாறு. சிவபெருமானை மூலவராக கொண்டு இருக்கும் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில், சனி பகவானின் திருவுருவச் சிலை மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில், காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் அமைந்துள்ளது.

Aravind Sivaraj

 ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவில்

ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவில்

தியாகராஜரின், ஏழு விசேஷ ஸ்தலங்களில், திருநள்ளாறும் ஒன்றாகும். சோழ சாம்ராஜ்யத்தினர் இந்த கோயிலை கட்டியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். சனி பகவான், நம் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள பல வகையான இன்னல்களையும் தருபவர். ஆகையால், திருநள்ளாறு வந்து அங்கிருக்கும் சிவபெருமானை வணங்கினால், சனி பகவானின் இன்னல்களிலிருந்து விடுபடலாம்.

Rsmn

ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம்

ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் ஒரு பெருமாள் கோவிலாகும். கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது . எனவே கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து பேருந்து மூலமாகவோ, ஆட்டோ மூலமாகவோ இக்கோவிலை சென்றடையலாம். 108 திவ்ய தேசங்கள் எனப் படும் 108 வைணவ ஆலயங்களில் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயமும் ஒன்று.

Adam63

மிகப்பழமையான கோயில்

மிகப்பழமையான கோயில்

12 ஆழ்வார்கள் தமது பாடல்களில் இக்கோவிலைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள பெருமாளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இக்கோவில் மிகப்பழமையானதோடு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே உள்ள மகாவிஷ்ணுவின் ஒரே ஆலயம் இதுவாகும். ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் இதன் ஆன்மீக முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 147 அடி உயரமுள்ள மிகப் பிரம்மாண்டமான இராஜ கோபுரத்துடன் இக்கோவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவின் சிலையானது ஆதிசேஷன் தலைமீது படம் எடுத்துக் கொண்டு நிற்க, பெருமாளானவர் ஒரு ரதத்தின் மீது அனந்தசயன நிலையில் இருப்பதுபோன்ற சிலையாகும். இங்குள்ள தாயாரின் பெயர் கோமளவல்லித் தாயாராகும்.

Ssriram mt

அறப்பலீஷ்வரர் கோவில்

அறப்பலீஷ்வரர் கோவில்


அறப்பலீஷ்வரர் கோவில், வல்வில் ஓரி என்னும் மன்னனால் கிபி 1 அல்லது 2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. பெரியகோவிலூரில் அமைந்திருக்கும் இக்கோவிலில் இருந்து ஆகாயகங்கை அருவி விழும் அழகிய இயற்கை காட்சியை காணலாம். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்களில் பல சோழர் காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Karthickbala

கல்லறைத் தோட்டம்

கல்லறைத் தோட்டம்


மேலும் இங்கே தொல்பொருள் ஆராய்ச்சியின் போது பழங்கால கல்லறைத் தோட்டம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அறப்பலீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்படும் சிவலிங்கம் ஒரு விவசாயி நிலத்தை உழும் போது எதேச்சையாகக் கண்டுபிடிக்கப்பட்டதாகும். கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் ஏரால் அடிபட்ட அந்த லிங்கத்தில் இருந்து ரத்தம் கசிந்ததாகவும் அந்த காயம் இன்றளவும் அந்த லிங்கத்தில் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

Karthickbala

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை


மதுரை மாநகரிலிருந்து 48 கி.மீ தூரத்தில் இந்த அருப்புக்கோட்டை நகரம் அமைந்துள்ளது. மல்லிகைப்பூ தோட்டங்கள், பழமையான கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களுக்கு இந்நகரம் புகழ் பெற்றுள்ளது. நல்லிர் முஹைதீன் ஆண்டவர் மஸ்ஜித், வாழவந்தபுரம் ஜும்மா பள்ளிவாசல், தௌகீத் ஜமாத் பள்ளிவாசல், ஸ்ரீ அருள்மிகு சொக்கநாதர் ஸ்வாமி கோயில், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில், சி.எஸ்.ஐ தேவாலயம் போன்ற முக்கியமான ஆன்மீக அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.

 ஆன்மீக சுற்றுலா

ஆன்மீக சுற்றுலா

ஒரு யாத்திரை தலமாக மட்டுமல்லாது முக்கியமான தொழில் நகரமாகவும் இந்த அருப்புக்கோட்டை திகழ்கிறது. மதுரையை மற்ற நகரங்களுடன் இணைக்கும் நகரமாகவும் இது அமைந்திருக்கிறது. மதுரைக்கு பயணம் செய்யும் பயணிகள் அருப்புக்கோட்டைக்கும் ஒரு நடை செல்வது பயணத்தை பூர்த்தி செய்வதாக அமையும்.

 அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில்

கோயம்புத்தூரிலிருந்து ஈரோட்டிற்கு செல்லும் வழியில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அவிநாசி என்ற ஊரில், அமைந்துள்ளது அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில். பாண்டிய மன்னர்கள் ஆட்சிக்காலத்தில், 15 ஆவது நூற்றாண்டில் சுந்தர பாண்டியன் என்னும் மன்னரால் இக்கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் குறித்து புராணக்கதை ஒன்று உண்டு. அப்புராணக்கதைப்படி ஒருமுறை இரண்டு பாலகர்கள் இங்கு உள்ள ஏரியில் குளிக்க வந்த பொழுது அங்கு வசித்த ஒரு முதலை ஒரு பாலகனை விழுங்கி விட்டதாம்.

Cnu

 சுந்தரமூர்த்தி நாயனார்

சுந்தரமூர்த்தி நாயனார்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உயிரோடு இருந்த பாலகனுக்கு உபநயன விழா நடந்த பொழுது இறந்த பாலகனின் பெற்றோர் மிகத் துயரத்தோடு இருந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் அந்த இடத்தைக்கடக்கும் பொழுது இத்துயரக் கதையைக் கேட்டறிந்து இறந்த பாலகனை அவனது பெற்றோருக்கு திரும்ப உயிருடன் அளிக்கும் படி சிவபெருமானை நோக்கி மனமுருகி பதிகம் பாடினாராம். அப்பொழுது வறண்டு கிடந்த அந்த ஏரியில் தண்ணீர் நிரம்பி அந்த முதலையும் தோன்றி அதன் வாயிலிருந்து இறந்த பாலகனை உயிரோடு எடுத்துத் தந்ததாம் . இந்தக் கோவிலைத் திருப்பூருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் தரிசிக்க வேண்டும். இக்கோவிலில் உள்ள தேர் தென்னிந்தியாவிலுள்ள மிகப்பெரிய தேர்களுள் ஒன்றாகும்.

Rsrikanth05

ஒப்பிலியப்பன் கோவில்

ஒப்பிலியப்பன் கோவில்

திருநாகேஸ்வரத்திலிருந்து 1/2 கிலோமீட்டர் தூரத்திலும், கும்பகோணத்திலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது ஒப்பிலியப்பன் கோவில். பெருமாளின் 108 திவ்யதேசங்களுள் இக்கோவிலும் ஒன்றாகும். பூமாதேவி அவதரித்த தலம் இதுவாகும். இங்கு வழிபடும் முதன்மை கடவுள் மகாவிஷ்ணு ஆவார். மகாவிஷ்ணு இங்கு ஒப்பிலியப்பன் என்னுப் பெயரில் வணங்கப்படுகிறார். அவர் இங்கு தனது தேவியான பூமாதேவியுடன் காட்சி அளிக்கிறார். இக்கோவில் 2000 ஆண்டுகள் பழமையானதாகும். நாகநாதசுவாமி ஆலயம் இக்கோவிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்யங்கள் உப்பு இன்றியே சமைக்கப்படுகின்றன.

Ssriram mt

உப்பு சாப்பிடா பெருமாள்

உப்பு சாப்பிடா பெருமாள்


யாராவது வேண்டுமேன்றே உப்பு சேர்த்த உணவுப்பொருள்களைப் பெருமாளுக்குப் படைத்தால் அது குற்றமாகவும் பாவமாகவும் கருதப்படும். இக்கோவிலுக்கு வந்து பெருமாளையும் பூமாதேவியையும் வணங்கினால், அவர்களது குடும்பத்தில் கணவன் மனைவியர் இருவருக்கிடையில், சகிப்புத்தன்மை பெருகி இருவரிடையேயும் அன்னியோன்யம் அதிகரித்து மணவாழ்வில் இன்பம் வளருமாம். தமிழ் மாதங்களான ஐப்பசி(அக்டோபர்-நவம்பர்), புரட்டாசி(செப்டம்பர்-அக்டோபர்), பங்குனி( மார்ச்-ஏப்ரல்)யில் கொண்டாடப்படும் பிரம்மோற்சவம் முக்கியமான திருவிழாவாகும்.

Ssriram mt

மாசாணியம்மன்

மாசாணியம்மன்

மாசாணியம்மனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோயிலில், மூலக்கடவுளின் திருவுருவம் பாம்பின் உடலைக் கொண்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் வழிபடுவோரின் பிரர்த்தனைகள், சுமார் மூன்று வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று நம்பப்படுவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள், அம்மனுக்கு உகந்த நாட்களாதலால், இவ்விரு நாட்களிலும், பக்தர்கள் வருகை, இங்கு மிக அதிகமாக இருக்கும்.

wiki

 மாசாணியம்மனின் ஓவியம்

மாசாணியம்மனின் ஓவியம்


கோயிலின் மத்தியப் பகுதியில், பல வண்ணங்களில் பிரதிபலிக்கக்கூடிய வகையில் தீட்டப்பட்டுள்ள மாசாணியம்மனின் ஓவியம் ஒன்றைக் காணலாம். மாசாணியம்மன் கோயில், "நானன்" என்ற மன்னனுக்குச் சொந்தமான மரத்திலிருந்து மாம்பழம் ஒன்றை பறித்துத் தின்ற ஒரு பெண்ணின் பெயரில் அமைக்கப்பட்ட கோயில் என்று சான்றோர்கள் கூறுகின்றனர். அப்பெண்ணின் செயலைக் கண்டு கோபமுற்ற மன்னன், அவளுக்கு மரண தண்டனை விதித்தான். பின்னாளில், "மாசாணி" என்ற பெயரில் உள்ளூர்வாசிகள், அப்பெண்ணை வழிபட ஆரம்பித்தார்கள். ராமபிரான், சீதையைத் தேடிய சமயம், இக்கோயிலுக்கு வருகை தந்து, தியானம் செய்தார் என்றும் சான்றோர்கள் கூறுகின்றனர்.

JayakanthanG.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்