Search
  • Follow NativePlanet
Share
» »கருப்பட்டி, கடுக்காயால் கட்டப்பட்ட மருது பாண்டியன் கோட்டை! இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?

கருப்பட்டி, கடுக்காயால் கட்டப்பட்ட மருது பாண்டியன் கோட்டை! இப்ப எப்படி இருக்கு தெரியுமா ?

நாட்டின் உதந்திர போராட்டத்தில், தமிழகத்தின் தலைச் சிறந்த போர் வீரர்களாக இருந்த மருது சகோதரர்களால் கருப்பட்டி, கடுக்காய், முட்டை கொண்டு கட்டப்பட்ட கோட்டை எங்கு உள்ளது தெரியுமா ?

மருது சகோதரர்களுடைய தியாகமும், வீரமும், நாட்டை அடிமையாக வைத்திருந்து ஆங்கிலேயர்களிக் ஆதிக்கத்திற்கு எதிரான அவர்களது செய்த போராட்டமும், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழனுடைய பங்களிப்புகளாக இன்றும் தமிழர்கள் கொண்டாடப்படி வேண்டிய ஒன்று. ஆங்கிலேயரை இந்நாட்டில் இருந்து விரட்ட 1785 முதல் 1801 வரை ஆயுதம் தாங்கி போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயர்க்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுமங்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்றபோது ஆங்கிலேயரின் அதிருப்திக்கு உள்ளாகி இறுதியில் கொள்ளப்பட்டனர். நாட்டிற்கே மாபெரும் துயரத்தை, இழப்பை உண்டாக்கிய இவர்களது இறப்பு இவர்கள் கட்டிய கோட்டையிலேயே நடந்ததாக வரலாறு. அது எங்கே, அக்கோட்டையின் சிறப்புகள் என்ன என்று பார்க்கலாம் வாங்க.

சிவகங்கை

சிவகங்கை

சிவகங்கை

மருது பாண்டியர்கள் என்றாலே அது சிவகங்கைக்கு உட்பட்ட பகுதிகள் தான். இம்மாவட்டத்தை மையமாகக் கொண்டே தங்கது போராட்டங்ளைத் தொடர்ந்தனர் மருது சகோதரர்கள். இவர்களது போர் பயிற்சிக்கும், பாதுகாப்பிற்கும் தனியே ஒரு கோட்டையும் எழுப்பப்பட்டது. அதுவும் எளிதில் தகர்க்க முடியாத வலிமை மிகுந்த கோட்டை. மதுரையில் உள்ள திருமலை நாயக்கர் மகாலைப்போலவே இக்கோட்டையின் தூண்களும் அவ்வளவு கடிணம் வாய்ந்தவை.

Nileshantony92

சங்கரபதி கோட்டை

சங்கரபதி கோட்டை


சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து தேவகோட்டை செல்லும் சாலையில் உள்ளது சங்கரபதி காடு. இங்கு தான் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் 200 ஆண்டுகளைக் கடந்த பழமைவாய்ந்த சங்கரபதி கோட்டை உள்ளது. ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட மருது சகோதரர்கள், இக்கோட்டையில் வைத்துதான் வீரர்களுக்கு பயிற்சி அளித்தனர். போரின் போது பாதுகாத்துக் கொள்ள சங்கரபதி காட்டில் 15 ஏக்கர் பரப்பளவில் குளத்தை வெட்டி அதில் பயிற்சி எடுத்துள்ளனர்.

கருப்பட்டி, கடுக்காய் சுவர்

கருப்பட்டி, கடுக்காய் சுவர்


மதுரையில் புகழ்பெற்ற திருமலை நாயக்கர் மஹாலைப் போலவே சங்கரபதி கோட்டையின் தூண்களும் வலிமை வாய்ந்தவை. இதற்குக் காரணம், அக்காலத்திலேயே சுடாத செங்கற்கள், கடுக்காய், கருப்பட்டி, முட்டை ஆகியவற்றை கலவையாகக் கொண்டு கோட்டைச் சுவர்களும், தூண்களும கட்டப்பட்டதுதான். இரு நூற்றாண்டுகளைக் கடந்தும் இன்றும் இக்கோட்டை தன் கம்பீரத்தை இழக்காமல் நிற்பதற்கு இத்தொழில்நுட்பமே காரணம்.

சுரங்கப் பாதை

சுரங்கப் பாதை

ஆங்கிலேயர்களின் திடீர் தாக்குதலில் இருந்து தப்பிக்க சங்கரபதி கோட்டையில் இருந்து காளீஸ்வரர் கோவில், திருமயம் கோட்டை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல சுரங்கப் பாதையினையும் அமைத்துள்ளனர் மருது சகோதரர்கள். வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பியான ஊமைத்துரை இச்சுரங்கத்தில் தான் மறைந்திருந்ததாக சான்றுகள் உள்ளன.

Inbamkumar86

யானைப் படைகள்

யானைப் படைகள்


சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிடுவதற்காக மாபெரும் படையைத் திரட்டினர். அவற்றில் யானை படைகளுக்கும், குதிரைப் படைகளுக்கும் சங்கரபதி கோட்டையில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சான்றுகள் இன்றும் கோட்டைச் சுவர்களின் கல்வெட்டுக்களில் காண முடியும்.

பெயர்க் காரணம்

பெயர்க் காரணம்

இராமநாதபுரம் சீமையை ஆண்டு வந்த மன்னர் சேதுபதிக்கு விருப்பமான தலமாக இக்கோட்டை இருந்து வந்துள்ளது. அப்போதுதான் இவருக்கு 200 குதிரைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அந்த குதிரைகளை பராமரிக்க திறமையான ஆள் தேடிய சேதுபதிக்கு சிவகங்கை சமஸ்தானத்தோடு நெருங்கிய நட்புகொண்ட ஹைதர் அலி தன் தளபதியான சங்கரபதியை அணுப்பி வைத்துள்ளார். சங்கரபதியும் இக்கோட்டையில் தங்கி குதிரைகளுக்கு போர்பயிற்சி வழங்கினார். இதனாலேயே இந்தவனப்பகுதியும், கோட்டையும், சங்கரபதி கோட்டை என்று பெயர் பெற்றுள்ளது.

wikipedia

சீதனமாக வழங்கப்பட்ட கோட்டை

சீதனமாக வழங்கப்பட்ட கோட்டை


மாமன்னர் சேதுபதி தன்னுடைய புதல்வியான வேலுநாச்சியாரை, சிவகங்கை சீமை மன்னர் முத்துவடுகநாதருக்கு திருமணம் செய்து கொடுத்து, தனது விருப்பமான கோட்டையான சங்கரபதிக் கோட்டையை சீதனமாகக் கொடுத்தார். வேலுநாச்சியாரின் படை தளபதிகளாக சின்னமருதுவும், பெரியமருதுவும் இருந்தனர். வெள்ளைக்காரனுக்கு அடிபணியாத மன்னராக ஹைதர் அலி இருந்ததால் வேலுநாச்சியாரும் ஹைதர் அலியும் இணைந்து வெள்ளைக்காரர்களைத் தாக்க திட்டமிட்டார்கள்.

பெண் தற்கொலைப் போராளி

பெண் தற்கொலைப் போராளி


ஒரு சமயம், ஆங்கிலேயர்கள் தொடர்ந்து சங்கரபதி கோட்டையை தாக்க முற்பட்டனர். அப்போதுதான் வேலுநாச்சியாரின் உதவியாளராக இருந்த குயிலி என்னும் பணிப் பெண் வெள்ளைக்கார்களின் ஆயுதக்கிடங்கை அழிக்க தன் உடல் முழுதும் எண்ணையை ஊற்றி ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கில் குதித்து அனைத்து போர்க்கருவிகளையும் அழித்து தன்னையும் அழித்துக்கொண்டார் குயிலி. இவரே முதல் பெண் தற்கொலை போராளி என்றால் மிகையாகாது.

அழிக்கப்படும் வரலாற்றுக் கோட்டை

அழிக்கப்படும் வரலாற்றுக் கோட்டை

இவ்வளவு வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கோட்டை தற்போது சங்கரபதி காடுகளில் வளர்ந்து நிற்கும் முள்புதர்களால் சிதலமடைந்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இக்கோட்டை சீரமைக்க நிதி ஒதுக்கி, சுற்றுலாத் தலமாக அறிவித்திருந்த நிலையில் இன்றும் அதற்கான வேலைகள் துவங்கப்படால் சங்கரபதி கோட்டை அழியும் தருவாயில் உள்ளது. உடனே இதனை சீரமைத்து நம் சுதந்திர கால வரலாற்றை அனைத்து மக்களையும் அறியச் செய்ய வேண்டும்.

Inbamkumar86

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+