Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் இந்த கிராமத்தில் மிக சாதரணமாக சிங்கங்கள் சுற்றித் திரியுமாம் – சிங்ககளோடு வசிக்கும் கிராம மக்கள்!

இந்தியாவின் இந்த கிராமத்தில் மிக சாதரணமாக சிங்கங்கள் சுற்றித் திரியுமாம் – சிங்ககளோடு வசிக்கும் கிராம மக்கள்!

நாம் நம் ஊர்களின் சாலைகளில் ஆடுகள், மாடுகள், பன்றிகள், பூனைகள் சுற்றி வருவதை பார்த்திருப்போம். ஆனால் குஜராத் மாநிலத்தின் சாசன் கிர் என்ற இந்த கிராமத்தில் மிக சாதரணமாக சிங்கங்கள் உலா வருகின்றன. அவற்றைக் கண்டும் காணாதது போல அந்த கிராம மக்கள் தங்கள் அன்றாட வேலைகளைப் பார்த்து வருகின்றனர். மிகவும் வினோதமாக இருக்கிறது அல்லவா? என்ன காரணம் என்று பார்ப்போம் வாருங்கள்!

Sasan gir

குஜராத்தின் சாசன் கிர் கிராமம்

சாசன் கிர் கிராமம் குஜராத் மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற கிர் தேசியப் பூங்காவிற்கும் பழமையான நகரமான ஜூனாகத் நகருக்கும் இடையே உள்ள பகுதியில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆசிய சிங்கம் என்றழைக்கப்படும் இந்திய சிங்கங்கள் அதிக அளவு வாழ்கின்றன. அதற்கு காரணம் இந்தியாவின் மிக முக்கிய தேசிய பூங்காங்களில் ஒன்றான கிர் தேசியப் பூங்கா. இந்த கிராமம் தேசிய பூங்காவிற்கு அருகாமையில் அமைந்திருப்பதால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பல சிங்கங்களை அடிக்கடி பார்க்கின்றனர்.

sasangircover

சிங்கங்களுடன் சகஜமாக வாழும் கிராம மக்கள்

இது பலருக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கலாம். நம் ஊர் ஆடுகள், மாடுகள், பூனைகள் சாலையில் செல்லும் போது எப்படி நாம் கண்டு கொள்ளாமல் இருக்கிறோமோ, அதே போல அந்த ஊர் மக்கள் சிங்கங்களைக் கண்டு கொள்வது இல்லை. சிங்கங்களின் பெருமூச்சு என்பது சசான் கிராம மக்களுக்கு ஒரு பொதுவான நிகழ்வுதான். எனவே, அவற்றிடமிருந்து பாதுகாப்பான தூரத்தை பராமரிக்க முயற்சி செய்கிறார்கள். சிங்கங்களை பார்க்கும் போது அவர்கள் அவற்றிற்கு எந்த தொந்தரவும் ஏற்படுத்தாத வகையில் அமைதியாக சென்று விடுகின்றனர். அவையும் கிராம மக்களுக்கு எந்த தொல்லையும் கொடுப்பது இல்லையாம்.

sasangir

500க்கும் மேற்பட்ட சிங்கங்கள்

இந்த கிராமமே இந்தியாவில் ஆசிய சிங்கத்தின் கடைசி வாழ்விடமாக நம்பப்படுகிறது. கிர் தேசிய பூங்காவில் 500 மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கங்கள் உள்ளன. அந்த 500 சிங்கங்களுக்கும் இட்ன்ஹா கிராமம் மிக முக்கியமான இடம். எனவே, இது அழிந்துவரும் விலங்கு இனங்களுக்கான உரையாடலின் இன்றியமையாத பகுதி என்று கூறப்படுகிறது.

tribalcommunityinsasangir

பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடல்

அது மட்டுமின்றி, சாசன் கிர் கிராமம் மல்தாரி சமூகத்தின் வளமான கலாச்சாரத்தை ஆராய உங்களுக்கு வாய்ப்பளிக்கும். இந்த கிராமத்தில் சித்தி சமூகத்தினர் வசிப்பதாக அறியப்படுகிறது. அவர்கள் நம் நாட்டில் மிகவும் தனித்துவமான சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். மல்தாரி சமூகம் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் பாண்டு பழங்குடியினரிடமிருந்து வந்ததாக நம்பப்படுகிறது. பழங்குடியின மக்களின் வீடுகள், கலாச்சாரம், உணவு, வாழ்வாதாரம் மற்றும் அவர்களுடன் கலந்துரையாடல் என ருசிகர வேலைகளில் நீங்கள் ஈடுபடலாம்.

somnathtemple1

வேறு என்னவெல்லாம் செய்யலாம்

இந்த கிராமம் மிகவும் அமைதியாக அழகாக இருப்பதுடன் அருகாமையில் பல அழகான சுற்றுலாத் தலங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் இங்கே வருகை தரும் போது கீழ்க்கண்ட இடங்களைப் பார்வையிட வேண்டும்.

1. உபர்கொட் கோட்டை - மௌரிய காலத்து பழங்காலக் கோட்டை

2. கிர் தேசியப் பூங்கா - 1400 சதுர கிமீ அளவில் பரந்து விரிந்த பல விலங்குகளைக் கொண்டுள்ள பூங்கா

3. மகாபத் மக்பாரா - நேர்த்தியான வடிவமைப்புடன் கட்டப்பட்டஅழகிய பேலஸ்

4. சோம்நாத் கோவில் - 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான புகழ்பெற்ற கோவில்

5. காமலேஷ்வரர் அணை - பல பறவைகளையும் முதலைகளும் கொண்டு அழகிய சூழலில் உள்ள அணை

6. தர்பார் ஹால் மியூஸியம் - முகலாயர் காலத்துப் பொக்கிஷங்களைக் கொண்ட இடம்

எப்படி செல்வது?

சாசன் கிர் கிராமத்தை பல போக்குவரத்து முறைகள் மூலம் எளிதில் அணுகலாம். சாசன் கிர் கிராமத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் 165 கிமீ தொலைவில் உள்ள ராஜ்கோட்டில் அமைந்துள்ளது. ஜூனாகத் ரயில் நிலையம் நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது மற்றும் இது சாசன் கிர் கிராமத்திற்கு மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். மேலும் ஜூனாகத்தில் இருந்து சாசன் கிருக்கு அரசு பேருந்துகள் தனியார் ஸ்லீப்பர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நீங்கள் கிர் தேசிய பூங்காவிற்கு ஒரு பயணத்தைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், உங்கள் பயணத் திட்டத்தில் சாசன் கிராமத்தை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். இந்த சிங்க கிராமத்திற்கு நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

More News

    Read more about: sasan gir gujarat
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+