» »பெசன்ட் நகர் பீச் தெரியும்! ஆனா கார்ல் இசுமிட் யாரு ?

பெசன்ட் நகர் பீச் தெரியும்! ஆனா கார்ல் இசுமிட் யாரு ?

Written By: Staff

எலியட்ஸ் கடற்கரை அல்லது எல்லோருக்கும் தெரிந்த பெசன்ட் நகர் கடற்கரை, கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம் ஆகியவற்றின் சிறப்புகளை பார்க்கலாம்.

கடற்கரை நடைபாதை

கடற்கரை நடைபாதை

மெரினா உலகின் இரண்டாவது பெரிய கடற்கரையாய் இருக்கலாம்; ஆனால், இளைஞர்களின் விருப்பமான கடற்கரை பெசன்ட் நகரில் இருக்கும் எலியட்ஸ் கடற்கரைதான்.

Photo Courtesy :KARTY JazZ

எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரை

எட்வர்ட் எலியட்ஸ் கடற்கரை

அப்போதைய சென்னை கவர்னர், எட்வர்ட் எலியட்ஸ் நினைவாக எலியட்ஸ் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. சென்னையில் இருப்பவர்களுக்கே எலியட்ஸ் கடற்கரை என்றால் ஒரு நிமிடம் யோசிப்பார்கள்; பெசன்ட் நகர் கடற்கரை என்றால்தான் சட்டெனப் புரிந்துகொள்வார்கள்.

Photo Courtesy :KARTY JazZ

கப்பலைப் பார்த்தபடி அலைகளில் விளையாடும் இளைஞர் கூட்டம்

கப்பலைப் பார்த்தபடி அலைகளில் விளையாடும் இளைஞர் கூட்டம்

வார இறுதியில், இரு சக்கர வாகனங்களை நிறுத்த இடம் இல்லாத அளவிற்கு கூட்டம் இருக்கும்.

கடற்கரையை ஒட்டியுள்ள நடைபாதையில் வழி நெடுக உட்கார்ந்திருக்கும் ஜோடிகள், இளைஞர் பட்டாளம், நடை பயிற்சி செய்பவர்கள், சாலை எதிரே இந்த இளைஞர் கூட்டத்திற்காகவே இருக்கும் ஏராளமான உணவகங்கள், காஃபி ஷாப்புகள் என்று முற்றிலும் ஒரு இளைஞர் பிரதேசமாய் விளங்குகிறது பெசன்ட் நகர் கடற்கரை.

Photo Courtesy :Vinoth Chandar

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

இக்கடற்கரையில் ஒர் புகழ்பெற்ற வரலாற்று அடையாளம் : கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம். இந்த நினைவுச் சின்னத்திற்குப் பின் ஒரு சோக கதை இருக்கிறது.

Photo Courtesy :Destination8infinity

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

1930'இல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு ஆங்கிலயேப் பெண்ணை தன் உயிரைக் கொடுத்து காப்பாற்றினார் கார்ல் இசுமிட் எனும் ஐரோப்பாவின் மாலுமி. ஆனால், அந்த்ப் பெண்ணோ எதுவும் நடக்காதது போல் அடுத்த நாளே ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார். இதையறிந்து கடுப்பான கவர்னர், கார்ல் இசுமிட் பேரில் ஒரு நினைவு சின்னத்தை நிறுவினார்.

Photo Courtesy :Chiranjeevi Ranga

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

எத்தனையோ தமிழ்ப் படங்களில் வந்திருக்கிறது - குறிப்பாக, ஓஹோ மேகம் வந்ததோ பாடல் வெகு பிரசித்தம் - இந்த கார்ல் இசுமிட் மெமோரியல் என்னும் நினைவுச் சின்னம்.

Photo Courtesy :Pratap Venkatesan

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

கார்ல் இசுமிட் நினைவுச் சின்னம்

வலைதளம் எழுதுவோர் தங்களின் சந்திப்பிற்கு ஒரு முக்கிய இடமாய் தேர்ந்தெடுப்பது இந்த மெமோரியலைத்தான்.

அதே போல, இரவு நேரத்தில், சில்ஹவுட் (Silhouette) உத்தியில்போட்டோ எடுக்க‌ விரும்பும் நபர்களும் இந்த நினைவுச் சின்னத்திற்கு விரும்பி வருவார்கள்.

Photo Courtesy :Kannan Muthuraman

இரவு நேர‌ பெசன்ட் நகர் கடற்கரை

இரவு நேர‌ பெசன்ட் நகர் கடற்கரை

Photo Courtesy : Planemad