Search
  • Follow NativePlanet
Share
» »பெண்களுக்கு தடை நீக்கம்! மேலாடையின்றி ஈர உடையுடன் பக்தர்கள் வழிபடும் கோவில்!

பெண்களுக்கு தடை நீக்கம்! மேலாடையின்றி ஈர உடையுடன் பக்தர்கள் வழிபடும் கோவில்!

பெண்களுக்கு அனுமதி! மேலாடையின்றி ஈர உடையுடன் கோவிலுக்குள் செல்லும் பக்தர்கள்!

By Udhay

சபரி மலை போல, பெண்களுக்கு நீண்ட நாட்களாக தடை விதிக்கப்பட்டிருந்த கோவில் ஒன்றில், பெண்கள் அமைப்பினரின் போராட்டத்துக்கு பிறகு தடை நீக்கப்பட்டு பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். அந்த கோவில் குறித்தும், அதன் விநோத வழிபாடுகள் குறித்தும் இந்த பதிவில் காண்போம்.

இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்!இந்த ஆண்டு குருப்பெயர்ச்சியில் திடீர் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரராகும் ராசிகள்!

எங்குள்ளது?

எங்குள்ளது?


சீரடியிலிருந்து 73 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் சனி கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் பெயர், ஷனி ஷிங்கனாப்பூர் தமிழில் சனி சிங்கனாப்பூர் ஆகும். இந்த கோவில் பெயருக்கு ஏற்ற சனி பகவானுக்கு அர்பணிக்கப்பட்டது.

 பெண்களுக்கு அனுமதி

பெண்களுக்கு அனுமதி

400 ஆண்டுகளாக இந்த கோவிலுக்குள் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அதன்பிறகு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராடி அனுமதி பெற்றனர். பின்னர் கோவில் நிர்வாகமே அதற்கு தடை நீக்கியது. இதுபோல தற்போது சபரிமலையில் நடந்துகொண்டிருக்கிறது.

இந்த ஊரிலுள்ள வீடுகளில் கதவுகள் இல்லை

இந்த ஊரிலுள்ள வீடுகளில் கதவுகள் இல்லை

ஒரு வியப்பான தகவல் என்னவெனில் இந்த கோயில் இருக்கும் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு கதவுகளே கிடையாது. இங்குள்ள மக்கள் அவர்கள் வீடு மற்றும் உடைமைகளை தீமைகளிலிருந்தும், திருட்டிலிருந்தும், கடவுள் ஷானேஸ்வரா காத்திடுவார் என்று ஐதீகமாக நம்புவதே இதன் பின்னணியில் உள்ள காரணமாகும்.

கண் பார்வை பறிபோகும் அபாயம்

கண் பார்வை பறிபோகும் அபாயம்

திருட்டில் ஈடுபடும் மனிதருக்கு ஷானேஸ்வரரின் சக்தியால் அன்றைய தினமே கண் பார்வை பறிபோய் குருடாகி விடுவார்கள் என்று இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது.

ஆண்கள் மட்டுமே

ஆண்கள் மட்டுமே

இந்த கோயிலில் ஷனி கடவுளின் விக்கிரகம் கருங்கல்லால் வடிக்கப்பட்டு மிகப்பெரிதாய் காட்சியளிக்கிறது. ஆண் பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் சென்று இந்த தெய்வத்தை தரிசித்து தொழுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது பெண்களும் விருப்பப்பட்டு இந்த கோவிலுக்கு செல்கின்றனர்.

மேலாடை இன்றி செல்லும் பக்தர்கள்

மேலாடை இன்றி செல்லும் பக்தர்கள்

ஆண் பக்தர்கள் முதலில் இங்குள்ள பொதுக்குளியல் இடத்தில் குளித்துவிட்டு அதன் பின்னர் மேலாடை இல்லாமல் ஈர வேட்டியுடன் தான் சனி கடவுளை வணங்க வேண்டும் என்ற ஐதீக மரபு இங்கு கடைப்பிடிக்கப் படுகிறது.

நடைதிறந்திருக்கும் நேரம்

நடைதிறந்திருக்கும் நேரம்

சீரடி வரும் எல்ல யாத்ரீக பக்தர்களும் சனி கடவுளையும் மறக்காமல் தரிசித்து செல்கின்றனர். இந்த கோயில் காலை 5 மணியிலிருந்து 10 மணி வரை பக்தர்களுக்கு திறந்துள்ளது.

சூலம் நந்தியுடன் சிவனும் அருகில் சனியும்

சூலம் நந்தியுடன் சிவனும் அருகில் சனியும்


சிவன் மற்றும் அனுமன் சிலைகளுக்கு முன்பு, சனி பகவான் கோயில் கட்டிடம் இன்றி திறந்த வெளியில் ஐந்தரை அடி உயர சுயம்பு வடிவில் கருங்கல்லில் அருள் புரிகிறார். கருங்கல்லில் சிவ பெருமானின் சூலாயுதமும், நந்தியும் காணப்படுகிறது.

லட்சக்கணக்கில் பக்தர்கள்

லட்சக்கணக்கில் பக்தர்கள்



சனிபகவானை வழிபட இக்கோயிலுக்கு வாரம்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் ஒரே நாளில் இங்கு மூன்று இலட்சம் பக்தர்கள் வரை கூடுகிறார்கள். சனிக்கிழமையில் வரும் அமாவாசை நாளில், சனி பகவானுக்கு நல்லெண்னெய், பூ மற்றும் கறுப்பு உளுந்து படைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

எப்படி அடைவது

எப்படி அடைவது


ஷீரடி நகரிலிருந்து 60 கி. மீ., தொலைவிலும், அகமது நகரிலிருந்து 35 கி. மீட்டர் தொலைவிலும், அவுரங்காபாத்திலிருந்து 84 கி. மீ., தொலைவிலும், பூனாவிலிருந்து 160 கி. மீ., தொலைவிலும், மும்பை நகரிலிருந்து 265 கி. மீ., தொலைவில் அமைந்துள்ளது. அருகில் உள்ள விமான நிலையம் அவுரங்கபாத் விமான நிலையம் 90 கி. மீ., தொலைவில் உள்ளது. ஸ்ரீராம்பூர் இரயில் நிலையம் அருகில் உள்ளது.

All photos taken from

PC: Wikicommons

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X