Search
  • Follow NativePlanet
Share
» »சீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படுகிறது – மொதுமக்களுக்கு தரிசனம் கிடையாது!

சீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மூடப்படுகிறது – மொதுமக்களுக்கு தரிசனம் கிடையாது!

மகாராஷ்டிராவில் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா கோவில் இந்தியாவின் முக்கிய கோவில்களில் ஒன்று என்பது நம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம். மும்பைக்கு அருகே அமைந்துள்ள இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிப்பட்டு சாய்பாபாவின் ஆசி பெற்று செல்கின்றனர். எல்லா மதத்தினரும் இந்த கோவிலும் வருகை தரலாம் என்பது கூடுதல் விசேஷம். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு மிகவும் பிடித்த இந்த சீரடி சாய்பாபா கோவில் காலவரையின்றி மே 1 முதல் மூடப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். எதனால் கோவில் மூடப்படுகிறது, எப்போது மீண்டும் திறக்கப்படும் என்ற தகவல்கள் கீழே!

Shirdi

காலவரையின்றி மூடப்படும் சீரடி சாய்பாபா கோவில்

இந்தியாவில் அமைந்துள்ள மிக முக்கிய ஸ்தலங்களில் ஒன்றான சீரடி சாய்பாபா கோவில் மே 1 2023 முதல் காலவரையின்றி மூடப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த சீரடி சாய்பாபா கோவிலை அதன் அறக்கட்டளை மூடுகிறது. இதுவரை, இந்த கோவில் ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சன்ஸ்தான் அறக்கட்டளை சீரடி சாய்பாபா கோவிலை காலவரையின்றி மூடுகிறது.

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம்

சன்ஸ்தான் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படும் ஸ்ரீ சாய்பாபா கோவிலை மாநில போலீசார் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் கோவில் பாதுகாப்பில் குறை உள்ளது, அதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படையை பாதுகாப்பு பனியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு கோவில் அறக்கட்டளை சாய்பாபா கோயிலின் மிகப்பெரிய பாதுகாப்பை நிர்வகிப்பதற்கான முறையான ஏற்பாடுகள் மற்றும் பயிற்சிகள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையிடம் இல்லை என கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து கோவிலை மூட முடிவு செய்துள்ளது.

Shirdi

ஆதரவு கொடுக்கும் உள்ளூர் மக்கள்

சீரடி விமான நிலையத்தில் 2018 ஆம் ஆண்டு முதல் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை செயல்பட்டு வருகிறது. அவர்கள் விமான நிலைய பாதுகாப்பை கையாள அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். தற்போது சீரடி கோவிலிலும் CISF படையை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கோவிலை மூட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. உண்மையில் கோவிலின் இந்த முடிவுக்கு உள்ளூர் மக்கள் ஆதரவாக உள்ளனர்.

எப்போது திறக்கப்படும் என்பது தெரியாது

பல அறிக்கைகளின்படி, கோவில் மூடிகிடப்பது என்பது நீண்ட காலத்திற்கு தொடரப் போகிறது, இது சீரடியில் உள்ள பலர் சுற்றுலாத் துறையை நம்பியிருப்பதால் உள்ளூர் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் ஹோட்டல்கள், கடைகள் போன்றவை மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும், ஆயிரக்கணக்கனோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது கவலையளிக்கிறது. எனவே வரும் நாட்களில் நீங்கள் கோவிலுக்குச் செல்ல திட்டமிட்டால், சாய்பாபா கோவிலுக்குச் செல்வதற்கான உங்கள் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்.

Shirdi

வழக்கம் போல் பூஜைகள்

இருப்பினும், ஸ்ரீ சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளை (SSST) தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடக அறிக்கைகளை மறுத்து, "அனைத்து ஆரத்திகளும் அனைத்து மத மரபுகளும் 01 மே 2023 திங்கட்கிழமை முதல் தொடரும், ஸ்ரீ சாய் பிரசாதாலயா, அனைத்து பக்த நிவாஸ் இடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற சன்ஸ்தானில் உள்ள அனைத்து வசதிகளும் எப்போதும் போல் தொடர்ந்து செயல்படும் என்று கோவில் அறக்கட்டளை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

More News

Read more about: shirdi maharashtra
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+