» »லக்னோவில் தரமான மற்றும் மலிவான விலையில் ஷாப்பிங்க் செல்ல சிறந்த இடங்கள்!!

லக்னோவில் தரமான மற்றும் மலிவான விலையில் ஷாப்பிங்க் செல்ல சிறந்த இடங்கள்!!

By: BalaKarthik

உத்தர பிரதேசத்தின் தலைநகரமான லக்னோ, இந்தியாவின் பெரிய மாநிலமாகும். இவ்விடமானது மாநிலத்தின் கலாச்சார தலைநகரத்திற்கு பெயர் பெற்று விளங்க, அதோடு இணைந்து அரசியல் மற்றும் வடஇந்தியாவின் கலாச்சார மையமாகவும் விளங்குகிறது. இந்த நகரமானது அழகிய சுற்றுலா ஈர்ப்புக்கு மட்டும் பிரத்திப்பெற்று காணாமல் அதீத வரலாறு மற்றும் அசாதாரண ஷாப்பிங்க் சந்தைகளுமெனவும் காணப்படுகிறது.

இந்த நகரமானது சிகங்கரி மற்றும் டேஹ்ஷீப் ஆடைகளுக்கு புகழ்பெற்று விளங்குகிறது. ஒருகாலத்தில் மிகவும் சக்திவாய்ந்த நவாப்பால் இவ்விடம் ஆளப்பட, ஷாப்பிங்க் பிரியர்களுக்கு உன்னதமான சொர்க்கமாக இவ்விடமானது அமைகிறது. நீங்கள் அனைத்து விதமானவற்றையும் இங்கே பெற்றிட, இறக்குமதி பொருட்களிலிருந்து உள்ளூர் பொருட்கள் வரை நம்மால் வாங்கவும் முடிந்திட, ஷாப்பிங்க் என வரும்போது பல தேர்வுகளையும் நம்மால் தேட முடிகிறது. அவ்வாறு பாரம்பரியமிக்க, ஷாப்பிங்க் செல்ல ஏதுவான சில சந்தைகளைப் பற்றி நாம் இப்போது பார்க்கலாம்.

அமினாபாத்:

அமினாபாத்:

நகரத்தில் காணப்படும் பழமையான சந்தைகளுள் ஒன்றாக அமைவதோடு நவாப் காலத்திலே காணப்பட்ட ஒரு சந்தை இது எனவும் தெரியவருகிறது. இங்கே வருபவர்கள் எண்ணற்ற மாளிகைகளை கடந்து செல்வதோடு, ஆடைகள், அணிகலன்கள், என உணவு உட்பட பலவற்றையும் வாங்கியும் மகிழ்கின்றனர்.

இந்த பகுதியானது வியாழக்கிழமை தெரு சந்தையாக அமைவதோடு கடைக்காரர்கள் பொருட்களை தூக்கி எறியும் விலைக்கு நடைப்பாதைகளில் கூவி விற்கின்றனர். நீங்கள் ஷாப்பிங்க் என்ற ஒன்றை சலிக்கும் அளவுக்கு மலிவான விலையில் பொருட்கள் கிடைக்க, உங்களுடைய ஆற்றலை அதிகரிக்கும் வகையில் டுன்டே காபாபும், பிரியாணியும் கிடைக்கிறது.

PC: Pranaykuma12

ஆலம்பாக்:

ஆலம்பாக்:

நகரத்தின் பெரும் பிரசித்திப்பெற்ற சந்தைகளுள் ஒன்றான ஆலம்பாக்கில் காய்கறிகள், பழங்கள், மின்னணு பொருட்கள், இனிப்புகள் என பலவும் கிடைக்கிறது. இவ்விடமானது வரலாற்றை தாங்கிக்கொண்டு நிற்க, அரண்மனை மற்றும் மசூதிகளுக்கு பெயர் பெற்று விளங்கிட, அதோடு இணைந்து கட்டிடங்களும் காணப்பட, எண்ணற்ற காட்சியகங்களில் அனைவருக்கும் தெரிந்த நிறுவன பொருட்களும், உள்ளூர் வியாபாரிகளின் பொருட்களும் காணப்படுகிறது.

PC: Unknown

சௌக்:

சௌக்:

லக்னோவிற்கு வரும் நாம் இந்த பகுதியை காணாமல் நம் பயணமானது முழுமையடைவதில்லை என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியிருக்க, பழமையான இச்சந்தையில் ரெடிமேட் ஆடைகள், சிகங்கரி, துணிகள் என பல பொருட்களும் காணப்பட, பல்வேறு விதமான பொருட்களான ஒப்பனை பொருட்களிலிருந்து கலைப்பொருட்கள் வரை என பலவும் கிடைக்கிறது. இந்த பகுதியானது ஷாப்பிங்க் அதே நேரத்தில் உணவுகளுக்கும் பெயர்பெற்று காணப்பட, சிகங்கரி பணிகளால் ஆன சிறந்த ஆடைகளையும் வாங்க சிறந்த இடமாகவும் இது அமைகிறது.

PC: आशीष भटनागर

ஹஷ்ரத்கஞ்ச்:

ஹஷ்ரத்கஞ்ச்:


இந்த சந்தை பகுதி ஸ்பெஷலாக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட, நடைமுறை இந்தியர்களும், நாய்களும் இந்த சந்தையில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படாமல், உயர்ந்த வகை மக்களையே அனுமதிக்கின்றனர். தற்போது, இந்த சந்தையானது பிரீயமம் ஷாப்பிங்க் இலக்காக காணப்பட, எண்ணற்ற காட்சியகங்கள், உணவகங்கள், சினிமா அரங்கங்கள் எனவும் பல காணப்படுவதோடு இங்கே வரும் ஒவ்வொருவரையும் இவ்விடம் வெகுவாக கவர்கிறது.

PC: Mohit

ஜன்பத் சந்தை:

ஜன்பத் சந்தை:

ஹஷ்ரத்கஞ்சின் ஒரு அங்கமாக இவ்விடம் கருதப்பட, வித்தியாசமாகவும் காணப்படுகிறது. இந்த ஜன்பத் சந்தையில், சிறிய கடைகளும், மையங்களும் காணப்பட பாக்கெட்டை பத்திரப்படுத்தும் விலைகளுக்கு பொருட்கள் கிடைக்கும் என்பதும் தெரியவருகிறது. நீங்கள் இலாபகரமான முறையில் வாதிட, விதவிதமான பொருட்களான ஆடைகளிலிருந்து, கம்பளி துணிகள், தோல் பெல்ட், காலணிகள், என பவற்றையும் பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்கி செல்ல முடிகிறது. ஹஷ்ரத்கஞ்சில் காணப்படும் சந்தையை காட்டிலும் இங்கே தூக்கி எறியும் விலைக்கு நம்மால் பொருட்களை வாங்கவும் முடிகிறது.

PC: tommy

லட்டௌச் சாலை:

லட்டௌச் சாலை:

மின்னணு பொருட்கள் வாங்குவதற்கான பிஸியான சந்தைகளுள் ஒன்றாக இது காணப்பட, இங்கே மின்னணு பொருட்களை நம்மால் விற்கவும் முடிகிறது. உங்களுக்கு பேரம் பேசும் திறனானது இருக்குமெனில், சந்தையில் காணப்படும் பல சிறந்த பொருட்களையும் ஒப்பந்தமிட்டு நம்மால் வாங்கவும் முடியும் என்பதால், அசல் விலையை காட்டிலும் விற்பவரிடம் பாதி விலைக்கே நம்மால் பொருட்களை வாங்கவும் முடியும். தற்போது விற்கப்படும் காட்ஜெட்களை வாங்க விரும்புகிறீர்களா? சந்தேகமே வேண்டாம், உங்களுடைய பேரம் பேசும் திறமையை கூர்மையாக்கிக்கொண்டு நேராக இந்த சந்தைக்கு விரைந்து செல்லுங்கள்.

PC: Bernard Gagnon