Search
  • Follow NativePlanet
Share
» »சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் வதம் செய்த முருகன் வழியில் இப்படி ஒரு பயணம்

சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் வதம் செய்த முருகன் வழியில் இப்படி ஒரு பயணம்

சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் வதம் செய்த முருகன் வழியில் இப்படி ஒரு பயணம்

சிக்கலில் வேல் வாங்கி வந்து, திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்தார் முருகன் என்பது நம்பிக்கை. இந்த முருகப் பெருமான் பயணத்திலேயே நாமும் சிக்கலிலிருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்து வழியில் என்னெவெல்லாம் இருக்குதுனு பாக்கலாமா?

சிக்கல் எனும் பகுதி முருகப் பெருமானின் கோவிலுக்காக புகழ் பெற்றது. சிக்கல் சண்முகர் கோவில் என்றால் தமிழகத்தில் அறியாதவர்கள் இருக்கமாட்டார்கள். மேலும் இங்கு பல சுற்றுலாத் தளங்களும் காணப்படுகின்றன. இங்கிருந்து முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு கடற்கரை வழியாக ஒரு பயணம் சென்று பார்க்கலாமா? வழியில் காணப்படும் இடங்கள், சுற்றுலா குறித்த தகவல்களுடன் இந்த கட்டுரையை முழுவதும் படிக்கலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

திட்டமிடல்

திட்டமிடல்

எந்தவொரு பயணத்துக்கு முன்பும் திட்டமிடுதல் மிகவும் அவசியமானதாகும். அதன்படி, சிக்கலில் இருந்து திருச்செந்தூருக்கு திட்டமிட்டு பயணிக்கவேண்டும். முதலில் பயணத்துக்கு தேவையானவற்றை எடுத்துக்கொண்டு, நாம் எந்த வகை வாகனத்தில் பயணிக்கப்போகிறோம் என்பதையும் முடிவு செய்துகொள்வோம்.

பேருந்து மற்றும் வாடகை வாகனங்களே இந்த பயணத்துக்கு சிறந்தது. மேலும் ரயில் குறித்த தகவல்களையும் தேடிக் கொள்வோம். வாருங்கள் பயணத்தைத் தொடங்கலாம்.

ரயில் பயணம்

ரயில் பயணம்

நீங்கள் ரயில் பயணத்தை விரும்பினால், தஞ்சாவூர், மதுரை, திருநெல்வேலி வழியாக திருச்செந்தூரை வந்தடையும் திட்டமே சாத்தியம். மேலும் இது கூடுதல் நேரமும் எடுக்கும். நேரடி ரயில்கள் குறித்த தகவல்கள் பெரிய அளவில் இல்லை. சிக்கலிலிருந்து மதுரை, மதுரையிலிருந்து திருச்செந்தூர் எனும்படியாக நம் ரயில் பயணம் அமையும்.

Sathiyam2k

முதல் வழி

முதல் வழி

நீங்கள் ரயிலில்தான் பயணிக்க விரும்பினால், சிக்கலிலிருந்து மயிலாடுதுறைக்கு பயணம் செய்யவேண்டும். சிக்கலிலிருந்து மயிலாடுதுறை 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருந்து மதுரைக்கு 5 மணி நேரத்தில் சென்றடையமுடியும். பின் மதுரையிலிருந்து திருச்செந்தூரை எளிதாக அடையலாம்.

இரண்டாவது வழி

இரண்டாவது வழி


ரயில் பயணத்தை கைவிட்டுவிட்டு, பேருந்தில் பயணிப்பது. மீண்டும் பழையபடி, சிக்கலிலிருந்து நாகப்பட்டினம், நாகப்பட்டினத்திலிருந்து திருச்சி, திருச்சியிலிருந்து திருச்செந்தூர் என பயணத்தை தொடரவேண்டும். தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல் இருக்கிறதா? கொஞ்சம் பொறுங்கள். வாடகை வாகனத்தில் அல்லது பைக்கில் பயணித்தால் எளிதாக இந்த இரு இடங்களை இணைக்கமுடியும். ஆம். சிக்கல் - பட்டுக்கோட்டை - தொண்டி - சாயல்குடி - தூத்துக்குடி - திருச்செந்தூர் என இந்த பயணம் கடற்கரை வழியாக அமையும்.

சிக்கல் - திருச்செந்தூர்

சிக்கல் - திருச்செந்தூர்

இந்த பயணத்தில் வழியில் இருக்கும் கடற்கரை சுற்றுலாத் தளங்கள், கோவில்கள் மற்றும் மற்ற இடங்களைப் பற்றியும் காண்போம். வாருங்கள் பயணத்தை தொடர்வோம்.

எஸ்ஸார்

சிக்கிலிலிருந்து திருச்செந்தூர் பயண தொலைவு

சிக்கிலிலிருந்து திருச்செந்தூர் பயண தொலைவு

சிக்கல் எனும் ஊரிலிருந்து திருச்செந்தூருக்கு பயணம் செய்ய ஆகும் தொலைவு கிட்டத்தட்ட 382 கிமீ ஆகும். இது கடற்கரை வழிப் பயணம் ஆகும்.

மொத்த பயணமும் 7 மணி நேரத்தில் தொடங்கி நிறைவடையும் வகையில் அமையும்.

Rahuljeswin

வழியில் காணவேண்டிய இடங்கள்

வழியில் காணவேண்டிய இடங்கள்

சிக்கல் அருகே அமைந்துள்ள கடற்கரை நாகப்பட்டினம் ஆகும். இதைத் தொடர்ந்து பொய்கைநல்லூர் எனும் ஊர் அமைந்துள்ளது. பொய்கை என்பது முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த இடமாகும். இங்கு நிறைய முருகன் கோவில்களும் இருக்கின்றன.

அடுத்ததாக வரும் புனித தளம் வேளாங்கன்னி ஆகும். இது கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள சிறப்புக்குரிய இடம். இங்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து மத மக்களும் வந்து சுற்றுலாவை சிறப்பிக்கின்றனர்.

செல்லும் வழியிலேயே கொற்கை, தலைஞாயிறு, திருவிடைமருதூர் போன்ற புனித தளங்களும் இருக்கின்றன. அடுத்து உதயமார்த்தாண்டபுரம் எனும் வரலாற்று சிறப்புக்குரிய ஊர் அமைந்துள்ளது. இங்கு நிறைய கோவில்கள் பழங்காலத்தில் கட்டப்பட்டவையாகும். இங்குள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் பிரபலம்.

அடுத்து அதிராம்பட்டினம் தாண்டி, மாங்குரோவ் சதுப்பு நிலக் காடுகள் பல வருகின்றன. இது மிகவும் அழகிய சுற்றுலாப் பகுதி ஆகும். இதன்பிறகு நாம் கடற்கரையை பார்த்துக்கொண்டே பயணிக்கமுடியும்.

அடுத்து மனோரா கடற்கரை, அம்மாப்பட்டணம் கடற்கரை ஆகியவை வரும். இதன் அருகே நிறைய கோவில்கள் அமைந்துள்ளன.

 திருச்செந்தூரை அடைவோம்

திருச்செந்தூரை அடைவோம்

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு மணி நேரத்துக்கும் குறைவான தூரத்திலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருச்செந்தூரை நெருங்குவதற்கு முன்பாக பழைய காயல் பகுதியில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயம் ஆகும். இதையொட்டியே தாமிரபரணி ஆறு கடலில் கலக்கிறது.

பயணத்தின் இறுதியில் திருச்செந்தூர் வளைவு உங்களை வரவேற்கும். திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று , அருகில் சுற்றிப் பொழுது போக்கித் திரும்புங்கள்.

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X