Search
  • Follow NativePlanet
Share
» »சிக்கிம்மின் அந்த மூன்று சிகரங்கள்

சிக்கிம்மின் அந்த மூன்று சிகரங்கள்

By Udhaya

புத்துணர்ச்சிதான் முக்கியம் என்றால் ஒரு சுற்றுலா போதும் உங்கள் மனக் கசப்புகளை பிழிந்து வெளியெடுத்து நல்ல உணர்வுகளை, மகிழ்வுகளை உள்புகுத்தி விடும். அதுவும் கோடையில், விடுமுறையை அனுபவிக்க, வெய்யிலின் உக்கரத்திலிருந்து வெளியேறி நல்ல இடத்தில் இரண்டு மூன்று நாட்கள் சுற்றுலாவை அனுபவிக்க சிறந்த இடங்கள் இந்தியாவில் நிறைய இருக்கின்றன. அவைகளுக்கு ஒரு சுற்றுலா போய்ட்டுவரலாம் என்று தோன்றியவுடன் நினைவுக்கு வந்தது இந்த சிக்கிம் மாநிலம். இங்குள்ள சிகரங்களில் இந்த மூன்றையும் பற்றி உங்களுக்கு கட்டாயம் கூற வேண்டும் என தோன்றியது. வாருங்களேன் ஒரு எட்டு போய்ட்டு வந்துடுவோம்.

 மவுண்ட் சினியோல்ச்சு

மவுண்ட் சினியோல்ச்சு

சிக்கிம் பிரதேசத்திலுள்ள மிக உயர்ந்த மலைகளில் ஒன்றான இந்த மவுண்ட் சினியோல்ச்சு கடல் மட்டத்திலிருந்து 6888 மீ உயரத்தில் அமைந்துள்ளது. கஞ்சன்ஜங்கா மலைக்கு அருகிலுள்ள கிரீன் லேக் ஏரியா எனும் இடத்துக்கு அருகில் இந்த மலை அமைந்திருக்கிறது. பனிமூடிக்காணப்படும் இந்த மவுண்ட் சினியோல்ச்சு சிகரம் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்த்து வருகிறது. இது எழுத்தாளர்களுக்கு மிகவும் பிடித்த இடமாகவும் இருந்து வருகிறது. பிரபலமான மலையேறியும் எழுத்தாளருமான டக்ளாஸ் ஃப்ரெஷ்ஃபீல்ட் தனது புத்தகங்களில் இந்த மவுண்ட் சினியோல்ச்சு சிகரம் பற்றி இப்படி குறிப்பிட்டுள்ளார் - "இயற்கையின் மலைப்படைப்புகளில் இந்த பனிமலையின் அழகு போன்று வேறெங்குமில்லை".

Nichalp

மவுண்ட் பண்டிம்

மவுண்ட் பண்டிம்

சிக்கிம் பிரதேசத்தில் உள்ள மவுண்ட் பண்டிம் எனும் இந்த உயர்ந்த சிகரம் கடல் மட்டத்திலிருந்து 22010 அடி உயரத்தில் பனி மூடிய மலைகளுக்கு நடுவே அமைந்துள்ளது. ட்ஜோங்க்ரி டாப் என்ற இடத்திலிருந்து இந்த மலையின் கம்பீர அழகை கண்டு ரசிக்கலாம். ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இங்கு மலையேற்றப்பயணங்கள் ஏற்பாடு செய்து தரப்படுகின்றன. டெல்லியில் உள்ள இண்டியன் மவுண்டனீரிங் ஃபவுண்டேஷன் எனும் மையத்தில் இந்த பயணத்துக்கான விண்ணபத்தை அளித்து அனுமதி பெற வேண்டியுள்ளது.

kalyan3

 மவுண்ட் பௌஹுன்ரி

மவுண்ட் பௌஹுன்ரி

மவுண்ட் பௌஹுன்ரி எனும் இந்த உயர்ந்த மலை சிக்கிம் மற்றும் திபெத்திய எல்லைப்பகுதியில் கிழக்கு இமயமலைப்பகுதியில் வீற்றிருக்கிறது. இது கஞ்சன்ஜங்காவிலிருந்து 75 கி.மீ தூரத்தில், கடல் மட்டத்திலிருந்து 7128 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இந்த மலை குறித்த சுவாரசிமான தகவலும் உள்ளது. ஸ்காட்டிஷ் மலையேறியான அலெக்ஸாண்டர் மிட்செல் கெல்லார் என்பவர் இரண்டு ஷெர்பா இன உதவியாளர்களுடன் 1911ம் ஆண்டு இம்மலைச்சிகரத்தை தொட்டுள்ளார். ஆனால், 80 ஆண்டுகளுக்கு பிறகுதான் இது 1911 மற்றும் 1930 ஆண்டுகளில் மனிதமுயற்சியால் ஏறப்பட்ட மிக உயர்ந்த மலையேற்றம் என்பது

wiki

அருகிலுள்ள சுற்றுலா தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலா தளங்கள்

கஞ்சன்ஜங்கா இரட்டை நீர்வீழ்ச்சி

பெலிங் எனும் இடத்திலிருந்து அரை மணி நேர வாகனப்பயணத்தில் இந்த கஞ்சன்ஜங்கா இரட்டை நீர்வீழ்ச்சியை பயணிகள் சென்றடையலாம். பிரம்மாண்டமான கிரானைட் பாறைகளின் வழியே நீர் விழுந்து சிதறும் காட்சியை விட்டு கண்களை அகற்ற முடியாத அளவுக்கு இந்த நீர்வீழ்ச்சியின் அழகு பிரமிக்க வைக்கிறது. யுக்சோம் எனும் இடம் நோக்கி செல்லும் வழியில் சுற்றுலாப்பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.

கஞ்சன்ஜங்கா தேசியப்பூங்கா

கஞ்சன்ஜங்கா நேஷனல் பார்க் எனும் இந்த தேசியப் பூங்கா 1977ம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தின் மிகப்பெரிய தேசியப் பூங்காவான இது 850 ச.கி.மீ பரப்பளவில் வடக்கு சிக்கிம் மாவட்டத்தில் பரந்துள்ளது. இது வடக்கில் டெண்ட் பீக் சிகரத்தையும் கிழக்கில் மவுண்ட் லமோ ஆங்க்டென் பீடபூமி மலையையும் எல்லைகளாக கொண்டுள்ளது. இதன் தெற்குப் பகுதியில் மவுண்ட் நார்சிங் மற்றும் மவுண்ட் பாண்டிங் போன்ற மலைகளும் மேற்குப் பகுதியில் கஞ்சன் ஜங்கா மலையும் அமைந்துள்ளன. இந்த பூங்காவின் சுற்றுச்சூழல் எவ்விதத்திலும் மனித இடையூறுகளால் பாதிக்கப்படாமல் உள்ளதால் பல்வேறு உயிரினங்களுக்கான பாதுகாப்பான வாழ்விடமாக திகழ்கிறது. அருகி வரும் உயிரினங்களான பனிச் சிறுத்தை, ஏசியாட்டிக் கருப்புக் கரடி, ஹிமாலயன் கஸ்தூரி மான், சிவப்பு பாண்டா ஆகியவை இந்த வனப்பகுதியில் வசிக்கின்றன. இன்னும் சரியாக ஆராயப்படாத இந்த இயற்கை பூங்காவில் பல அரிய வகை உயிரினங்களும் இருக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது. ஓக், ஃபிர், பிர்ச், மேப்பிள் மற்றும் வில்லோ போன்ற அபூர்வ மரங்கள் இந்த வனப்பகுதியில் நிரம்பியுள்ளன. அல்பைன் புல்வெளி மற்றும் புதர்க்காடுகளையும் இது கொண்டுள்ளது. இவற்றில் பல அரிய மூலிகைத்தாவரங்களும் காணப்படுகின்றன. ரத்தக்காக்கை, சத்யே ட்ராகோபான், ஓஸ்பிரே, ஹிமாலயன் கிரிஃப்பான், லாமெர்கெயர் மற்றும் டிராகோபான் காக்கை போன்ற பறவைகளும் இதில் வசிக்கின்றன.

ஏரிகள்

புத்த துறவிகளாலும் இந்துக்களாலும் வணங்கப்படுகிற இந்த அழகிய ஏரி, நம் வேண்டுதலை நிறை வேற்றக் கூடிய சக்தியுள்ள ஒரு புனித ஸ்தலமாக பார்க்கப் படுகிறது. கேசியோ பல்ரி என்ற வார்த்தை கேசியோ மற்றும் பல்ரி என்ற வார்த்தை களில் இருந்து எடுக்கப்பட்டது. கேசியோ என்றால் பறக்கும் தேவதைகள் என்றும் பல்ரி என்றால் அரண் மனை என்றும் பொருளாகும். கா -சோட்- பல்ரி என்றும் அழைக்கப்படும் இந்த அழகிய ஏரி, கேசியோ பல்ரி கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ளது. கேசியோபல்ரி மலைகளால் சூழ்ந்த இந்த ஏரியையும் புனித ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. இந்த பகுதியில் மேலும் புஸ்ரி ஏரி, கேசியோபல்ரி ஏரி, லம்பொஹ்ரி, குர்டொங்கமார் ஏரி என நிறைய ஏரிகள் காணப்படுகின்றன.

Kalyan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more