» »சிக்கிம்மில் இருக்கும் அதிசயமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?

சிக்கிம்மில் இருக்கும் அதிசயமான நீர்வீழ்ச்சிகள் பற்றி தெரியுமா?

Written By:

சிக்கிம் இமயமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மலைசார்ந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 280மீ முதல் 8585மீ உயரம் வரை அமைந்துள்ள மலைப்பகுதிகளாகவே இருக்கின்றன. உலகின் 3-வது உயரமான சிகரமான கஞ்சஞ்ஜங்கா இங்கு அமைந்துள்ளது. கிழக்கில் பூட்டானையும், மேற்கில் நேபாளத்தையும், வடக்கே திபெத்தையும் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது சிக்கிம். ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமாக ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன. மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், சுடுநீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன. இயற்கையான 50 டிகிரி சூட்டில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

பக்தங் நீர்வீழ்ச்சி

பக்தங் நீர்வீழ்ச்சி


பக்தங் எனும் இந்த ரம்மியமான நீர்வீழ்ச்சி அமைந்துள்ள இடம் காங்க்டாக் நகருக்கு 20 கி.மீ முன்பாகவே உள்ளது. வடக்கு சிக்கிம் பகுதியை நோக்கி செல்லும் 31A தேசிய நெடுஞ்சாலையில் இது அமைந்திருக்கிறது.

காங்க்டாக் பிரதேசத்தின் நீராதாரமாக விளங்கும் ராட்டே சு எனும் ஆற்றில் இந்த நீர்வீழ்ச்சி உருவாகிறது. இயற்கையை ரசித்தபடி ஓய்வெடுப்பதற்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கு இந்த இடம் பொருத்தமானதாக அமைந்திருக்கிறது.

சாங்கி நீர்வீழ்ச்சி

சாங்கி நீர்வீழ்ச்சி

சாங்கி நீர்வீழ்ச்சி, பிரபலமான லம்பொக்ஹரி ஏரிக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சியும் அதன் சுற்றுப்புறங்களும் அழகான காட்சிகளை வழங்குகின்றன. 50 மீ உயரத்தில் இருந்து ஆர்பரிக்கும் இந்த நீர்வீழ்ச்சி பிலிங்க்லிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது.

 சாங்கே நீர்வீழ்ச்சி

சாங்கே நீர்வீழ்ச்சி

பெல்லிங்கிலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள சாங்கே நீர்வீழ்ச்சி மற்றுமொரு சுற்றுலா தலமாகும். ஆர்ப்பரித்துக் கொண்டு, வல்லமையுடன் ஓடிக் கொண்டிருக்கும் இந்நீர்வீழ்ச்சி எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாகும்.

லிங்ஸ்யா அருவி

லிங்ஸ்யா அருவி

ட்சோங்குவின் சுற்றுப்புறங்களில் கவர்ச்சிகரமான அருவிகள் சில இருக்கின்றன. இவற்றில் லிங்ஸ்யா அருவி மற்றவற்றை விட அற்புத அழகு படைத்தது. இந்த அருவியில் நீராடுவது, புகைப்படம் எடுப்பது என்று நீங்கள் விரும்பும் படி பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்

பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சி

பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சி

பஞ்சாக்ரி நீர்வீழ்ச்சி எனும் இந்த இடம் இதன் இயற்கை அழகுக்காக மிகவும் பிரசித்தமாக அறியப்படுகிறது. இந்த இடத்தை சுற்றிலும் அழகிய படிக்கிணறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் காணப்படுகின்றன. கலையம்சம் நிரம்பிய பல சிலைகளையும் இப்பகுதியில் பார்க்கலாம். ஓய்வாக பிக்னிக் பயணம் மேற்கொள்ள இந்த ஸ்தலம் மிகவும் ஏற்றது.

காளி கோலா நீர்வீழ்ச்சி

காளி கோலா நீர்வீழ்ச்சி


காளி கோலா நீர்வீழ்ச்சி அரிடாரின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். இது `ரொராதாங்க்-ரோங்ளி' சாலையில் அமைந்துள்ளது. 100 மீ உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி `லோனி நீர்வீழ்ச்சி' என்றும் அழைக்கப்படுகின்றது

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்