» »முதலாம் உலகப்போரில் சென்னை மீது குண்டு வீசப்பட்டிருக்கிறது தெரியுமா ?

முதலாம் உலகப்போரில் சென்னை மீது குண்டு வீசப்பட்டிருக்கிறது தெரியுமா ?

Written By: Staff

சென்னை, இதை ஒரு நகரம் என்று சொல்வதை விடவும் நம் சொந்த வீடு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். அந்த அளவுக்கு சென்னை நகருக்கும் சென்னைவாசிகளுக்குமான பந்தம் அவ்வளவு நெருக்கமானதும், பிரிக்கமுடியாததுமாகும்.

எத்தனையோ கனவுகளை நிஜமாக்கிய, எத்தனையோ பேரின் வாழ்வில் ஒளியேற்றி வைத்த நம்ம சென்னையை பற்றி நீங்கள் அதிகம் அறிந்திராத சில சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

இந்தியாவின் நீண்ட கடற்கரை :

இந்தியாவின் நீண்ட கடற்கரை :

இந்தியாவின் மிக நீண்ட கடற்கரை, உலகத்தின் இரண்டாவது மிக நீளமான கடற்கரை என்ற சிறப்புகளை தாங்கி நிற்கிறது மெரினா பீச். சென்னையின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான இது சென்னைவாசிகளின் வாழ்கையில் இரண்டற கலந்திருக்கிறது என்றே சொல்லலாம்.

Photo: FLickr

இந்தியாவின் நீண்ட கடற்கரை :

இந்தியாவின் நீண்ட கடற்கரை :

ஆரோக்கிய வாழ்விற்காக காலையில் நடை பயிற்சி செய்வதில் ஆரம்பித்து, தனக்கு பிரியமான தோழியிடம் காதலை சொல்வது வரை ஒவ்வொரு சென்னைவாசியின் வாழ்கையின் பல அற்புத தருணங்களில் இந்த மெரினா கடற்கரையும் பங்கேடுத்திருக்கிறது. சென்னை வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் செல்லவேண்டிய இடம் இந்த மெரினா கடற்கரையாகும்.

Photo: Flickr

கூவம் :

கூவம் :

கூவம் என்றதுமே மூக்கை துளைத்தெடுக்கும் நாற்றமும், சாக்கடையுமே நம் நினைவுக்கு வருவது வரலாற்று துரதிர்ஷ்டங்களில் ஒன்று. இப்போது சென்னையின் கழிவுநீர் தொட்டியாக மாறிப்போயிருக்கும் கூவம் ஆற்றில் ஒரு காலத்தின் படகு போக்குவரத்து நடைபெற்றிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? .

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி :

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி :

எக்மோர் ரயில் நிலையத்திற்கு எதிரில் அமைந்திருக்கும் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி உலகத்திலே இருக்கும் மிகப்பழமையான மருத்துவக் கல்லூரிகளுள் ஒன்றாகும். 1835ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் நிறுவப்பட்ட இக்கல்லூரியில் தான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவ பட்டதாரியான DR.முத்துலட்சுமி போன்றோர் கல்வி கற்றிருகின்றனர்.

Photo:VtTN

சிறந்த இந்திய நகரம் :

சிறந்த இந்திய நகரம் :

அமெரிக்காவில் வெளியாகும் 'தி நியுயார்க் டைம்ஸ்' பத்திரிக்கையின் ஆய்வு முடிவுகளின் படி உலகில் வாழ சிறந்த 50 நகரங்களில் ஒன்றாக சென்னை தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்திய நகரம் மற்றும் ஒரே தென் கிழக்கு ஆசிய நகரம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

Photo: Flickr

 வண்டலூர் மிருக காட்சி சாலை:

வண்டலூர் மிருக காட்சி சாலை:

சென்னையை தாண்டி புறநகரில் அமைந்திருக்கும் வண்டலூர் மிருக காட்சி சாலை வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் சென்று வர சிறந்த ஓரிடமாகும். சென்னை நகரில் இருந்து 31கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த மிருக காட்சி சாலை தான் இந்தியாவில் துவங்கப்பட்ட முதல் மிருக காட்சி சாலையாகும். அது மட்டும் இல்லாமல் தெற்காசியாவில் இருக்கும் மிகப்பெரிய மிருக காட்சி சாலைகளுள் ஒன்று என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

Photo:Sridharan Chakravarthy

ஹாலிவூட் - கோலிவூட் :

ஹாலிவூட் - கோலிவூட் :

'சினிமா' என்னும் கனவுத் தொழிற்சாலை இயங்கும் சொர்க்கம் இந்த கோடம்பாக்கம் ஆகும். அமெரிக்காவில் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் இடமான ஹாலிவூடுக்கு இணையாக இங்கும் திரைப்படங்கள் தயாராவதால் இது 'கோலிவூட்' என்று அழைக்கப்படுகிறது. இங்கு மட்டுமே வருடத்திற்கு நூற்றுக்கணக்கான திரைப்படங்கள் தாயாராகின்றன. உங்களுக்கும் சினிமா கனவுகள் இருந்தால் உடனே கோடம்பாக்கத்துக்கு பஸ் ஏறுங்கள்.

photo:Jayaram srinivasmurthy

சாந்தோம் சர்ச் :

சாந்தோம் சர்ச் :

ஐரோப்பாவிற்கு வெளியே இருக்கும் ஒரே 'பசிலிக்கா' சர்ச் என்ற பெருமையை பெற்றுள்ளது சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் சாந்தோம் சர்ச். இது 16ஆம் நூற்றாண்டில் சென்னைக்கு வந்த போர்த்துகீசிய மாலுமிகளால் கட்டப்பட்டிருக்கிறது. கத்தோலிக்க கிருத்தவர்கள் வருடம் முழுக்க இந்த சர்ச்சுக்கு யாத்திரை வருகின்றனர்.

Photo: Flickr

ராயபுரம் ரயில் நிலையம் :

ராயபுரம் ரயில் நிலையம் :

ராயபுரத்தில் அமைந்திருக்கும் ரயில் நிலையம் தான் இன்று இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் மிகப்பழமையான ரயில் நிலையமாகும். மும்பை - தானேவில் தான் முதல் ரயில் நிலையம் கட்டப்பட்டது என்றாலும் அவை இன்று பயன்பாட்டில் இல்லை. 1856ஆம் ஆண்டில் இருந்து ராயபுரம் ரயில் நிலையம் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Photo:Darren Burnham

உலகப்போரில் பங்குகொண்டது :

உலகப்போரில் பங்குகொண்டது :

முதலாம் உலகப்போரில் சென்னை மீது குண்டு வீசப்பட்டிருக்கிறது தெரியுமா ?. ஆம் இன்றைய பேரிஸ் கார்னர் பகுதியில் அமைந்திருந்த பர்மா ஆயில் கம்பெனியின் மீது 1914 ஆம் ஆண்டு 'எம்டன்' என்ற சிறிய ரக ஜெர்மன் நாடு நீர்மூழ்கி கப்பல் குண்டு வீசியிருக்கிறது.

photo:Agence Rol

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

வந்திய தேவன்.

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

தி.நகர்

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

நேப்பியர் பிரிட்ஜ்

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

முட்டுக்காடு

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

கோலப்போட்டி

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

கபாலீஸ்வரர் கோயில்

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

காந்தி சிலை.

Photo: FLickr

நம்ம சென்னை :

நம்ம சென்னை :

நம்ம சென்னையின் அழகை அற்புதமாக காட்டும் சில புகைப்படங்கள்.

கடற்கரையில் குதிரை சவாரி

Photo: FLickr

Read more about: chennai tamil nadu

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்