Search
  • Follow NativePlanet
Share
» »முகமது கஜினி 18 முறை படையெடுத்தது எந்த கோயிலில் கொள்ளையடிக்க என்று உங்களுக்கு தெரியுமா?

முகமது கஜினி 18 முறை படையெடுத்தது எந்த கோயிலில் கொள்ளையடிக்க என்று உங்களுக்கு தெரியுமா?

By Staff

         தீப்பற்றி எரியும் தி நகர்.. இதுல இவ்ளோ விசயம் இருக்கா? 

அந்த காலத்தில் கஜினி முகமது 18 முறை படையெடுத்தான் என்பதெல்லாம் ஒரு பொருட்டாகவே நாம் பார்ப்பது இல்லை. யாரையாவது ஊக்கப்படுத்தவே கஜினியை மேற்கோள்காட்டி பார் 18 முறை முயற்சி செய்திருக்கிறான் என்று கூறுவதுண்டு.

ஆனால், அவன் அப்படி வந்து முயற்சி செய்ய ஏதேனும் காரணம் இல்லாமலா இருந்திருக்கும். தன் படைகளில் பகுதியை இழந்து, உலகின் பல இடங்களில் படையெடுப்பை நிறுத்தி, இந்தியாவுக்கு அதிலும் குஜராத் வழியாக வருவதற்கு ஏதேனும் காரணம் இல்லாமலா இருக்கும் என்பதை நாம் யோசித்திருக்கிறோமா

அப்படி அதற்கான காரணத்தைத் தேடி பயணித்தால், நமக்கு மிக அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கின்றன. ஆம் குஜராத்தின் சோம்நாத்துக்கு ஏன் 18 முறை படையெடுத்துச் சென்றான் கஜினி முகமது... வாருங்கள் காணலாம்...

இங்கு மாட்டுக்கறிக்குத் தடை.... ஆனா காசியில் என்ன நடக்குது தெரியுமா?

பிரபாஸ் பட்டணம்

பிரபாஸ் பட்டணம்

குஜராத் மாநிலத்தின் மேற்கு கரையில் பிரபாஸ் பட்டணம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது இந்த சோம்நாத் கோயில்.

இந்தியாவெங்கும் இருக்கும் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதாக கட்டப்பட்டது என்ற சிறப்பை பெற்றுள்ளது இக்கோயில்.

Axel Drainville

மூன்று நதிகள் சங்கமிக்கும்

மூன்று நதிகள் சங்கமிக்கும்

சோமநாதர் ஆலயம் அமைந்திருக்கும் இந்த இடம் ஆதி காலத்தில் கபிலா, ஹிரன் மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் ஒருங்கே சங்கமிக்கும் திரிவேணி சங்கமமாக இருந்துள்ளது.

தனது 27மனைவியரில் ரோஹினியிடம் மட்டுமே அளவுகடந்த பாசம் வைத்து மற்றவர்களை புறக்கணித்து வந்திருக்கிறான் சந்திரன். இதனால் கோபம் கொண்ட மற்ற 26 மகள்களின் தந்தையான தட்சப்பிரசாபதி என்பவர் சந்திரன் காச நோயால் அவதிப்படட்டும் என்று சபிக்கிறார்.

Rajeev India

திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக

திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக

காச நோயினால் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக தேய்ந்து வந்த சந்திரன் கடைசியாக இந்த திரிவேணி சங்கமத்தில் சுயம்புவாக தோன்றிய சிவ லிங்கத்தை வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றுள்ளான்.

இதன் காரணமாகவே சந்திரனின் பெயர்களுள் ஒன்றாக 'சோமன்' என்கிற பெயரால் இங்கே எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் விளிக்கப்படுகிறார்.

Nagarjun Kandukuru

127வயதில் ஸ்ரீ கிருஷ்ண பகவான்

127வயதில் ஸ்ரீ கிருஷ்ண பகவான்

ஜோதிர்லிங்க கோயில்களில் முதலாவதான இக்கோயிலில் இருக்கு சிவ லிங்கமானது சூரியனை விட பிரகாசமானது என்றும் அது பூமிக்கடியில் மறைந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

அதேபோல தனது 127வயதில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதார முடிவிற்காக இந்த சோமநாதர் கோயில் அமைந்திருக்கும் பிரபாஸ பட்டினத்திற்கு வந்து வேடனின் அம்புக்கு இரையாகி தனது உயிரை விட்டிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

Axel Drainville

உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள்

உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள்

உருவ வழிப்பாட்டை எதிர்த்த இஸ்லாமிய மன்னர்கள் பல முறை இக்கோயிலின் மீது படையெடுத்து வந்து அடியோடு அழித்திருக்கின்றனர்.

கி.பி. 1025, டிசம்பர் மாதம், கஜினி முகமது சோமநாதபுரம் ஆலயத்தை முழுமையாக தரைமட்டம் ஆக்கி, அங்கிருந்த செல்வக்குவியல்களை அள்ளிச்சென்றதுடன், ஐம்பதாயிரம் இந்துக்களை கொன்று, 20,000 இந்துக்களை அடிமைகளாக இழுத்துச் சென்றனர். ஆயிரக்கணக்கான இந்துக்கள் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டனர்.

சிவலிங்கத்தை உடைத்து

சிவலிங்கத்தை உடைத்து

சோமநாதபுரம் ஆலய சிவலிங்கத்தை உடைத்து, அக்கற்களை கஜினியில் உள்ள மசூதியின் படிக்கட்டுகளில் பதித்தார். மேலும் ஆலயத்தின் இரத்தின குவியல்கள், தங்கம், வெள்ளி மற்றும் சந்தன கதவுகளை கஜினி நகருக்கு எடுத்துச் சென்றான் கஜினி முகமது.

இதன் பிறகு 1296ஆம் ஆண்டு துருக்கிய படை தளபதி அலாவுதீன் கில்ஜி என்பவரும்,கி.பி. 1375ல் ஜூனாகாத் சுல்தான் என்பவரும்,கி.பி. 1701ல் முகலாய பேரரசன் அவுரங்கசீப்பும் சோமநாதர் கோயிலை இடித்து தரைமட்டம் செய்திருக்கின்றனர்.

படையெடுப்புகள்!!

படையெடுப்புகள்!!

பல முறை அழிக்கப்பட்டாலும் வரலாற்று காலம் நெடுகிலும் மீண்டும் மீண்டும் புனரமைக்கப்பட்டு வந்திருக்கிறது இக்கோயில்.

முதல் முறையாக கி.பி. 649ல் சௌராட்டிர தேசத்து வல்லபீபுர யாதவகுல மன்னரால் இக்கோயில் சீரமைத்து கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் இறுதியாக சுதந்திர இந்தியாவில் அப்போதைய இந்தியாவின் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலின் முன்னெடுப்பில் இப்போது நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

சாளுக்கியர் கட்டிடக்கலை

சாளுக்கியர் கட்டிடக்கலை

இன்று நாம் பார்க்கும்சோமநாதர் கோயில் சாளுக்கியர் கட்டிடக்கலை அமைப்பின்படி பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது.

ஆங்கில அரசால் கஜினி முகமதுவால் ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச்செல்லப்பட்ட சந்தன கதவுகளை மீட்கும் முயற்சி மேற்கொண்ட போது ஒரு மதத்திற்கு சார்பாக அவர்கள் செயல்படுவதாக கூறப்பட்டு கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

லிங்க வடிவாக காட்சி

லிங்க வடிவாக காட்சி

லிங்க வடிவாக காட்சி தரும் சோமநாதர் !! இந்த லிங்கத்தை பார்க்கும்போது உங்களுக்கே ஒரு புத்துணர்ச்சி வருமாம்.

Kaushik Patel

 கார்த்திக் பூர்ணிமா

கார்த்திக் பூர்ணிமா

சோமநாதர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இதற்கு அருகில் இருக்கும் கடலில் புனித நீராடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

இங்கு நடைபெறும் கார்த்திக் பூர்ணிமா திருவிழாவின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் திரள்கின்றனர். இந்து காலண்டரின் படி இது கார்த்திக் சுதா 14 இல் ஆரம்பித்து சுமார் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.

Kaushik Patel

சோமநாதர் கோயில் பற்றிய விளக்கங்களுக்கு

சோமநாதர் கோயில் பற்றிய விளக்கங்களுக்கு

சோமநாதர் கோயிலை பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களையும், இந்த கோயிலை எப்படி சென்றடைவது?, இங்கே தங்குவதற்கு இருக்கும் ஹோட்டல்கள் என்னென்ன?, என்பது போன்ற தகவல்களையும் தமிழில் இருக்கும் ஒரே பயண இணையதளமான தமிழ் நேடிவ் பிளானட்டில் தெரிந்துகொள்ளுங்கள்.

அருகில் காண வேண்டிய இடங்கள்

இந்த பகுதியில் கட்டாயம் காணவேண்டிய இடங்களாக, அஹமத்பூர் மாண்ட்வி கடற்கரை, மாகாளி கோயில், மாய் பூரி மசூதி, தாய்தியுசுதன் சந்நிதி, சூரியனார் கோயில், சோம்நாத் கடற்கரை, தொல்லியல் அருங்காட்சியகம், ஷஷிபூசன், சனா குகைகள், வெராவல் என நிறைய இடங்களை இங்கு நாம் காணமுடியும்.

மாண்ட்வி கடற்கரை

மாண்ட்வி கடற்கரை

அஹமத்பூர் மாண்ட்வி கடற்கரை, குஜராத் மாநிலத்தில், அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரக்கூடிய கடற்கரைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. குஜராத் மற்றும் டையூ ஆகிய இரண்டும் ஒன்றாக வந்து சேரக்கூடியதொரு அலைவாய்க்கரையில் அமைந்துள்ளது இது. அதனால் இப்பகுதி, சௌராஷ்டிர கலாச்சாரங்கள் மற்றும் டையூவின் போர்த்துக்கீசிய ஆதிக்கம் நிறைந்த கலாச்சாரங்கள் ஆகியவற்றின் கலவையாகக் காணப்படுகின்றது. நீங்கள் மணலில் கால் புதைய நடந்து செல்வதை மிகவும் விரும்புபவராக இருந்தாலோ அல்லது உப்புத் தண்ணீரில் முங்கித் திளைப்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தாலோ, இந்த கடற்கரை உங்கள் மனங்கவர்ந்த கடற்கரையாக இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. டால்ஃபின் கண்காட்சி மற்றும் சுவாரஸ்யமான விளையாட்டுக்கள் ஆகியவை இக்கடற்கரை பிரசித்தி பெற்று விளங்குவதற்கான இதர முக்கிய காரணங்களாகும்.

மாய் பூரி மஸ்ஜித்

மாய் பூரி மஸ்ஜித்


ஜனாகத் கேட்டிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மாய் பூரி மஸ்ஜித். வெராவலுக்குச் செல்லும் நுழைவுவாயிலாக செயல்படும் இப்பழங்கால கட்டுமானம், நீலம் மற்றும் வெள்ளை தட்டோடுகள் பதிக்கப்பெற்று, எழில் பொங்கும் காட்சியாக நம் கண் முன் விரிகிறது. முஸ்லிம்கள் சோம்நாத்தின் இதர மசூதிகளோடு சேர்த்து இதையும் மிகப் புனிதமானதொரு வழிபாட்டு ஸ்தலமாகப் போற்றுகின்றனர்.

தாய்தியுசுதன் சந்நிதி

தாய்தியுசுதன் சந்நிதி

தாய்தியுசுதன் சந்நிதி சோம்நாத்தில் அமைந்துள்ளது. இங்கு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விஷ்ணுவின் பிரதிபிம்பம் ஒன்று காணப்படுகிறது.

மாகாளி கோயில்

மாகாளி கோயில், குஜராத்தின் சோம்நாத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் 1783 ஆம் வருடம் இந்தூரைச் சேர்ந்த மஹாராணி அஹல்யாபாய் ஹோல்கரால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சூரியனார் கோயில்

சூரியனார் கோயில்

சூரியனார் கோயில், குஜராத்தின் சோம்நாத் நகரில் உள்ள சித்தல மாதா கோயிலுக்கு பக்கவாட்டில் அமைந்துள்ளது. இங்கு சூரியக் கடவுளான ரவியின் சிலையே மூலவராக வைத்து வணங்கப்பட்டு வருகிறது. சூரியக் கடவுளின் இரு ஏவலாள்களின் சிலைகளும் இங்கு காணப்படுகின்றன. இக்கோயில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

Bernard Gagnon

சோம்நாத் கடற்கரை

சோம்நாத் கடற்கரை


ஆக்ரோஷமான அலைகளுக்கு மிகவும் பிரபலமானதாக விளங்கும் சோம்நாத் கடற்கரையில் நீச்சல் அடிப்பது மிகவும் அபாயகரமானதாகும். ஒட்டகச் சவாரிகளும், நொறுக்குத் தீனி வகைகளும் இங்கு வருவோரை மிகவும் ஈர்க்கின்றன.

தொல்பொருள்துறை அருங்காட்சியகம்

தொல்பொருள்துறை அருங்காட்சியகம்

சோம்நாத்தின் தொல்பொருள்துறை அருங்காட்சியகம், தற்போது அழிக்கப்பட்டுவிட்ட பழங்கால சோம்நாத் கோயில்களுடைய எச்சங்களின் சிறப்பானதொரு தொகுப்பைக் கொண்டுள்ளது. வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கற்சிற்பங்கள், பானைகள் மற்றும் கல்வெட்டுகள் ஆகியவை இங்கு வருகை தருவோர்க்கு சுவாரஸ்யமானதொரு அனுபவத்தை வழங்குகின்றன. இந்த அருங்காட்சியகம் காலை 8:30 மணியிலிருந்து பகல் 12:15 மணி வரையிலும், பின்னர் பிற்பகல் 2:30 மணியிலிருந்து சாயங்காலம் 6 மணி வரையிலும் திறந்து வைக்கப்படுகின்றது.

ஷஷிபூஷன் கோயில்

ஷஷிபூஷன் கோயில்

ஷஷிபூஷன் கோயில், குஜராத்தில், சோம்நாத்திலிருந்து பல்காதீர்த் செல்லும் வழியில் அமைந்துள்ளது. இங்கு தான் சந்திரக் கடவுளான சோமா, அவரது பாவங்களிலிருந்து விமோசனம் பெறும் பொருட்டு, ஒரு யக்ஞத்தை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

சனா குகைகள்

சனா குகைகள்

இக்குகைகள், சோம்நாத்தில் உள்ள மலை ஒன்றின் மேல் வெவ்வேறு மட்டங்களில் ஒரு குழுவாக அமைந்துள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, இக்குகைகள் 2 ஆம் நூற்றாண்டு பிசியின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கின்றன. அழகிய சிற்பக்கலை வேலைப்பாடுகள், ஸ்தூபிகள், பாறைகளில் செதுக்கப்பட்ட தலையணைகள் மற்றும் சைத்யா என்றழைக்கப்படும் புத்த மத வழிபாட்டு ஸ்தலங்கள் ஆகியவை இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்தக்கூடியனவாய் உள்ளன.

 வெராவல்

வெராவல்

சோம்நாத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வெராவல், மீன்பிடிப்புத் தொழிலுக்கு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு வருவோர், கைவினைக் கலைஞர்கள் பாரம்பரிய முறைகளை பயன்படுத்தி படகுகள் செய்வதையும், ட்ராலர்கள் மூலம் மீன் பிடிப்பு நடப்பதையும் கண்டு களிக்கலாம். இங்கு காற்றிலேயே மீன் வாசம் விரவி நிற்கின்றது; இவ்வாசம் உங்களுக்கு விரும்பத்தகாததாக இருப்பின் இங்கு செல்வதை நீங்கள் தவிர்ப்பது மேல். இது மிகச் சிறந்ததொரு கடற்கரை தொழில் மையமாகவும் விளங்குகிறது. இங்கிருந்து ஜப்பான், ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியப் பகுதிகள், பெர்ஷிய வளைகுடா நாடுகள் மற்றும் யு.எஸ்.ஏ போன்ற நாடுகளுக்கு கடல் உணவுகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன

மனதை கொள்ளைகொள்ளும் 50 அரண்மனைகள்!!!

பாம்பே படத்தில் வரும் 'உயிரே, உயிரே' பாடல் எங்கே படமாக்கப்பட்டது?

நம்ம தமிழ்நாடு எவ்வளவு அழகானது தெரியுமா?

தேக்கடி அருகேயிருக்கும் சூப்பர் இடங்கள்!!

செஞ்சி கோட்டையை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

கூர்க் சுற்றுலாவின் போது நாம் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள்

குதுப்மினார் - கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more