» »சோத்துப்பாறை அணைக்கு ஒரு ஒய்யார பயணம் செல்வோமா?

சோத்துப்பாறை அணைக்கு ஒரு ஒய்யார பயணம் செல்வோமா?

Posted By: Udhaya

சோத்துப்பாறை அணைக்கு ஒரு ஒய்யார பயணம் செல்வோம் வாருங்கள்

 சோத்துப்பாறை

சோத்துப்பாறை

வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோத்துப்பாறை அணைக்கட்டு கொடைக்கானல் மலையின் பின்பகுதியில் உள்ள கண்கவரும் சுற்றுலாத் தலமாகும்.

Capt.saravanan

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


பெரிய குளத்திலிருந்து 12 கிமீ தொலைவில் உள்ள இந்த அணைக்கட்டிற்கு குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ வந்து குதூகலமாக இருக்க முடியும். இந்த அணைக்கட்டிற்கு செல்லும் வழியில் இருபுறமும் மாமரங்கள் நடப்பட்டிருக்கின்றன.

Kujaal

 கோடைகாலம்

கோடைகாலம்

கோடைகாலத்தில் இந்த அணைக்கட்டிற்கு சுற்றுலாப் பயணமாக வந்தால், நீர்த்தேக்கத்தின் அழகை ரசித்தபடியே, மாம்பழச் சாற்றினை பருகிட முடியும். இந்த நீர்த்தேக்கத்தில் ஒரு அழகிய தோட்டமும், அங்கு பார்வையைக் கவரும் விளக்கு கம்பங்களும் உள்ளன.

Lakshmichandrakanth

 பேரிஜாம் ஏரி

பேரிஜாம் ஏரி

கொடைக்கானலில் உள்ள பேரிஜாம் ஏரி மற்றும் சிறு சிறு மழைக்கால நீரோடைகளின் தண்ணீரும் இந்த நீர்த்தேக்கத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது.

Lakshmichandrakanth

 நீர்த்தேக்கம்

நீர்த்தேக்கம்

2.831 கனஅடி நீரைத் தேக்கி வைக்கும் திறனுள்ள இந்த நீர்த்தேக்கம் தான் பெரிய குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களின் குடிநீர் மற்றும் விவசாய நீர்ப்பாசன தேவைகளை தீர்த்து வருகிறது. இது தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய அணைக்கட்டு என்ற பெருமை பெற்ற இடமாகும்.

Read more about: travel, tour