Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவிலேயே அதிகம் மழை பெய்யும் இடம் இது தான் – ஒரே இடத்தில் ஏழு நீர்வீழ்ச்சிகள்!

இந்தியாவிலேயே அதிகம் மழை பெய்யும் இடம் இது தான் – ஒரே இடத்தில் ஏழு நீர்வீழ்ச்சிகள்!

பசுமையான சூழல் மற்றும் நகர வாழ்க்கையின் சரியான கலவையை ஒரு சேர நீங்கள் காணக்கூடிய இந்தியாவின் மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்றாகும். அழகிய பசுமையான மலைகள், பள்ளதாக்குகள், க்ரிஸ்டல் க்ளியர் குளங்கள், தெளிவான ஆறுகள், பால் போன்று பொங்குகின்ற நீர்வீழ்ச்சிகள் என மேகாலயா மிகவும் வசீகரமாக இருக்கிறது. இந்தியாவிலேயே அதிகம் மழை பெய்யும் இடங்களில் ஒன்றான சிரபுஞ்சியின் அழகை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. ஒரே இடத்தில் அழகான ஏழு நீர்வீழ்ச்சிகள்! மேகாலயாவின் தனித்துவமான அடையாளமான சிரபுஞ்சியில் அழகில் நனைய உங்களுக்கும் ஆசையாக உள்ளதா?

Cherrapunji waterfalls

நகரத்தில் இருந்து வெறும் ஐந்தே கிலோமீட்டர் தொலைவில்

சுற்றிலும் ஏராளமான சுற்றுலாத் தலங்களை வழங்குகிற சிரபுஞ்சி மலைகள் மேகாலயாவின் பெருமை என்றே சொல்லலாம். ஒரு காலத்தில் பூமியின் மிக ஈரமான இடமாக இருந்த சிரபுஞ்சி, இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் சிலவற்றைக் கொண்டுள்ளது. சிரபுஞ்சியில் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருந்தாலும், அருவிகள் அனைவரின் பக்கெட் லிஸ்டிலும் உள்ளன. அவை ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை என நீங்கள் யோசிக்கலாம்? ஆனால் நீர்வீழ்ச்சிகளின் நேர்த்தியும், சுற்றுப்புறத்தின் அமைதியும், குளிர்ந்த தென்றல் தண்ணீரும் முழு அனுபவத்தையும் மிகவும் சிறப்பாக ஆக்குகின்றன. இது முற்றிலும் உங்களை மயக்கும் காட்சிகளை வழங்குகிறது. மேகாலயாவின் அழகை மேலும் கூட்டுவதில் அங்கு உள்ள நீர்வீழ்ச்சிகளின் பங்கு மிகுதியாக உள்ளது.

7sisterwaterfalls

உலகிலேயே அதிகம் மழை பொழியும் இடங்களில் ஒன்று

மவ்சின்ராம் இப்போது பூமியில் அதிக ஈரப்பதம் உள்ள இடமாக இருந்தாலும், அதற்கு முன்பு சோஹ்ரா என்றழைக்கப்படும் மேகாலயாவின் சிரபுஞ்சியே உலகில் அதிக மழைப்பொழிவு பெறும் இடமாக இருந்தது. டபுள் டெக்கர் லிவிங் பிரிட்ஜ்க்கு பெயர் பெற்ற சிரபுஞ்சி ஷில்லாங்கில் இருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் அதிக மழைப்பொழிவை பெறும் சிரபுஞ்சி வளமான தாவரங்கள் மற்றும் இயற்கை ஈர்ப்புகளுக்கு பிரபலமானது.

7sisterwaterfalls

கிராமத்து கலாச்சாரத்தில் திளைத்திடுங்கள்

புகழ்பெற்ற டபுள் டெக்கர் லிவிங் பிரிட்ஜ் தவிர, மற்ற இயற்கை ஈர்ப்புகளில் மவ்ஸ்மாய் குகைகள் மற்றும் கிரெம் ஃபில்லட் போன்ற குகை அமைப்புகளும் அடங்கும். ஆசியாவின் தூய்மையான கிராமமான மவ்லிங்னாங் இங்குள்ள மற்றொரு பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இங்கு பார்வையாளர்கள் கிராமத்தின் உணவு மற்றும் கலாச்சாரத்தை அனுபவிக்க வருகை தருகிறார்கள்.

7sisterwaterfalls

வசீகரமான சிரபுஞ்சி

இப்பகுதியில் உள்ள மூடுபனி பள்ளத்தாக்குகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் சாலைப் பயணங்களை விரும்புவோருக்கு சிரபுஞ்சி வழியாக நீண்ட பயணத்தை உருவாக்குகின்றன. பள்ளத்தாக்கின் மூச்சடைக்கக்கூடிய பனோரமிக் காட்சிகள் மற்றும் புகழ்பெற்ற நோகலிகை நீர்வீழ்ச்சிகள் போன்ற நீர்வீழ்ச்சிகள் சன்னி குளிர்கால நாட்களில் அனுபவிக்கும் அற்புதமான அனுபவங்கள். சிரபுஞ்சி என்றாலே நீர்வீழ்ச்சி என்ற நினைவு நம் அனைவர்க்குள் எழுந்தாலும், அது ஒரே நீர்வீழ்ச்சி அல்ல, ஏழு நீர்வீழ்ச்சிகள் அடங்கிய சங்கிலி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

7sisterwaterfalls

ஒரே இடத்தில் ஏழு நீர்வீழ்ச்சிகள்

அவற்றில் சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள நொஹ்கலிகை நீர்வீழ்ச்சி இந்திய துணைக்கண்டத்தின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும் மற்றும் உலகின் 4 வது மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும். மவ்ஸ்மாய் நீர்வீழ்ச்சி மற்றும் கைன்ரெம் நீர்வீழ்ச்சிகளுடன், மேகாலயாவில் உள்ள சிரபுஞ்சி நீர்வீழ்ச்சிகளில் இது முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது. அடுத்ததாக நோஹ்ஸ்ங்கிதியாங் என்ற ஏழு பிரிவுகளைக் கொண்ட செவன் சிஸ்டர்ஸ் நீர்வீழ்ச்சி பட்டியலுக்குள் இடம் பிடிக்கிறது. தங்கராங் பூங்காவிற்குள் உள்ள மூன்றடுக்கு நீர்வீழ்ச்சியான கைன்ரெம் நீர்வீழ்ச்சி, மிகவும் அழகான டெயின்ட்லன் நீர்வீழ்ச்சி, மழைக்காலங்களில் பிரமிக்க வைக்கும் வாவ் கபா நீர்வீழ்ச்சி, எந்தவொரு இயற்கை ஆர்வலரின் பக்கெட் லிஸ்டிலும் இருக்கக்கூடிய ரெயின்போ நீர்வீழ்ச்சி ஆகியவை சிரபுஞ்சியின் ஏழு நீர்வீழ்ச்சிகளாகும்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+