» »உலகப் பாரம்பரிய நகரமான ஸ்ரீரங்கப்பட்டிணத்தைப் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!!

உலகப் பாரம்பரிய நகரமான ஸ்ரீரங்கப்பட்டிணத்தைப் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!!

By: Bala Karthik

இந்தியாவானது பன்முகத்தன்மைக் கொண்ட கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும், வனவிலங்கு வாழ்க்கையையும், இயற்கையையும் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் இத்தகைய இடங்கள் யாவும் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை கொண்டு காணப்படுகிறது. நீங்கள் இந்தியாவின் வரலாற்றை பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொள்ள விரும்பினால், ஸ்ரீரங்கப்பட்டினம் நீங்கள் வரவேண்டிய ஒரு இடமாக அமைவதோடு, அனைத்து வரலாற்று விரும்பிகளின் விருப்பமாகவும் இது அமைந்திடக்கூடும். இவ்விடத்தை நாம் ஆராய்வதன் மூலமாக வரலாற்றின் பாதை நோக்கி நம்மால் பயணித்திடவும் முடியக்கூடும்.

மேலும் இவ்விடமானது சங்கத்திற்கு புகழ்பெற்று விளங்க, இந்த நதி தீவான ஸ்ரீரங்கப்பட்டினம், கர்நாடகாவின் மாண்டியா மாவட்ட காவேரி நதியால் உருவாகி காணப்படுகிறது. இவ்விடமானது திப்பு சுல்தானுக்கு கீழ் மைசூருவின் தலைநகரமாக விளங்கியது. இந்த அழகிய இடமானது அழகை மட்டும் கொண்டு அணைத்திடாமல், மாபெரும் மத, கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தையும் கொண்டு தற்பெருமையுடன் விளங்குகிறது.

இந்த புகழ்பெற்ற இடமானது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளத்திற்கு பரிந்துரை செய்யப்பட, அதற்கு காரணமாக சுற்றி காணப்படும் கவர்ச்சிகரமான மற்றும் மரியாதைக்குரிய ஈர்க்கும் இடங்களும் அமைந்திருக்கிறது. மைசூருவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஸ்ரீரங்கப்பட்டினம், இரயில் மற்றும் பேருந்தின் மூலமாக பெங்களூருவிலிருந்தும், மற்ற பிற நகரங்களிலிருந்தும் இயக்கப்பட்டு காணப்படுகிறது.

இங்கே எண்ணற்ற சுவாரஸ்யமான இடங்கள் காணப்பட, அவை ஆலயங்களும், தோட்டங்களும், ஸ்ரீரங்கப்பட்டினத்தின் வரலாற்று நினைவுசின்னங்களும் என அடங்கும். இங்கே வருடந்தோரும் காணப்படும் முக்கிய ஈர்ப்பாக அமைந்து காணப்படுபவை:

 தரியா தௌலத் அரண்மனை:

தரியா தௌலத் அரண்மனை:


அற்புதமான தோட்டம் மற்றும் அமைதியான இயற்கையின் மத்தியில் கட்டப்பட்டிருக்கிறது இவ்விடம். இந்தோ - சர்கானிக் பாணியில் இந்த அரண்மனையானது கட்டப்பட்டிருக்க, இதனை உயர்ந்த சதுர நடைமேடைக்கொண்டு 1784 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் கட்டியதாகவும் தெரியவருகிறது. இந்த அரண்மனையின் மாதிரி வடிவ பிரதியானது கோடைக்காலத்து அரண்மனையாக பெங்களூருவில் அமைந்திருக்க, இதையும் 1791ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தான் கட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயம்:

ஸ்ரீ ரங்கநாதசுவாமி ஆலயம்:


தென்னிந்தியாவின் பழமையான ஆலயமான இவ்விடம், ரங்கநாத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்க, விஷ்ணு பெருமான் வடிவத்தையும் கொண்டு 9ஆம் நூற்றாண்டில் கங்கா வம்சத்து ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது இந்த ஆலயம் எனவும் தெரியவருகிறது. இந்த கடந்த காலத்து வரலாற்றை பேசும் ஆலயமானது 5 யாத்ரீக தளங்களுள் ஒன்றாக காவேரி நதியுடன் இணைந்து காணப்பட, இந்த ஒட்டுமொத்த இடத்தையும் பஞ்சரங்க க்ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகிறது.

சங்கம்:

சங்கம்:


மூன்று நதிகளான காவேரி, லோகாபவானி மற்றும் ஹேமாவதி சங்கமிக்கும் ஒரு இடம் தான் இதுவாகும். இந்த புனித நதி சங்கமித்திருக்க, இதனை சுற்றி அமைதியான இடங்கள் வளைத்து காணப்பட, திப்பு சுல்தான் அரசவையை இது நினைவுப்படுத்தி, பல பார்வையாளர்களையும் கொண்டு காணப்படுகிறது.

திப்பு சுல்தான் கும்பஸ்:

திப்பு சுல்தான் கும்பஸ்:

பிழையற்று கட்டப்பட்டிருக்கும் இந்த சமாதியை சுற்றி மாபெரும் தோட்டமானது காணப்பட, இவ்விடம் அழகும், கலை நயமும் கொண்டு காணப்படுகிறது. இவ்விடமானது திப்பு சுல்தான், அவருடைய தந்தை ஹைதர் அலி, மற்றும் அவருடைய தாயான பாத்திமா பேகம் ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்டு காணப்படுகிறது. கைவினை கதவு ப்ரேம்களையும், சமாதியின் பத்தியும் இவ்விடத்திற்கு பெருமை சேர்த்து இதன் அழகை மேலும் மெருகூட்டுகிறது.

ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை:

ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டை:

நகரத்தின் மேற்கு புறத்தில் காணப்படும் சிறிய கோட்டையாக விளங்கும் இக்கோட்டை, பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கையுடன் நாம் காண வேண்டிய ஒரு கோட்டையும் கூட. இந்த கோட்டையானது இரு சுவர்கள் கொண்டு சூழ்ந்திருக்க, மீறி நம்மால் பார்த்திடவும் முடிவதால், இதனை ஆங்கிலேயர் வீரர்களாலும் முடிக்கப்படுகின்றது.

இந்த கோட்டையானது இறப்பு இடத்தையும், நிலவறையையும் கொண்டிருக்க, இங்கே ஆங்கிலேய வீரர்கள் சிறைப்பிடிக்கவும் படுகின்றனர். வரலாற்றை நாம் திருப்பி பார்க்க, முக்கியத்துவமும், வீரமும் இங்கே பொறிக்கப்பட்டிருப்பதை நம்மால் உணர முடிகிறது.

பெய்லி நிலவறை:

பெய்லி நிலவறை:


ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நாம் காண வேண்டிய முக்கியமான இடமாக இது அமைய, இருப்பினும், பெய்லி நிலவறை, ஹாரிஸ் பிரபு வீடு, ஸ்காட் பங்களா, காரிசன் கல்லறை என பலவும் இங்கே காணப்பட இவை மற்ற வரலாற்று இடமாகவும் சுவாரஸ்யத்துடன் சிறந்து விளங்குகிறது. நீங்கள், இயற்கை மற்றும் வனவிலங்கு வாழ்வை உற்றுப்பார்க்க, வரலாற்றின் மத்தியில் இது காணப்படுவதோடு, ஸ்ரீரங்கப்பட்டினத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் ரங்கனத்திட்டு பறவைகள் சரணாலயமும் காணப்படுகிறது.

ஸ்ரீரங்கப்பட்டினத்தை நாம் காண சிறந்த நேரமாக அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் அமைய, வெப்ப நிலையானதும் உகந்த நிலையிலிருக்க, கால நிலையும் இனிமையானதாகவும், பிடித்தமானதாகவும் அமைகிறது. இவ்விடத்தை நாம் காண, ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் உகந்த நிலையில் இருப்பதில்லை என்பதோடு அதற்கு காரணமாக வெப்ப நிலையும், மழைப்பொழிவும் அதிகமாகவும் அமைகிறது.

Please Wait while comments are loading...