Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்ரீசைலமும் மல்லேல தீர்த்த அருவியும்! காணச் செல்வோமா?

ஸ்ரீசைலமும் மல்லேல தீர்த்த அருவியும்! காணச் செல்வோமா?

ஸ்ரீசைலமும் மல்லேல தீர்த்த அருவியும்! காணச் செல்வோமா?

சீமாந்திராவின் கர்ணூல் மாவட்டத்தில், நல்லமலா குன்றின் மீது கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் ஸ்ரீசைலம் நகரம் அதன் சமயச் சிறப்புக்காக இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய நகரம் ஹைதராபாத்திலிருந்து 212 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீசைலம்

ஸ்ரீசைலம்

ஸ்ரீசைலம் நகரத்துக்கு ஆண்டு தோறும் நாடு முழுவதுமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இந்த நகரத்தில் உள்ள புகழ்பெற்ற கோயில்களுக்காகவும், தீர்தங்களுக்காகவும் புனித யாத்ரீகர்கள் மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

பிரம்மாரம்பா மல்லிகார்ஜுனசுவாமி கோயில்

பிரம்மாரம்பா மல்லிகார்ஜுனசுவாமி கோயில்

ஸ்ரீசைலம் நகரின் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக கருதப்படும் பிரம்மாரம்பா மல்லிகார்ஜுனசுவாமி கோயில் சிவபெருமானுக்காகவும், பார்வதி தேவிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மல்லிகார்ஜுனசுவாமி வடிவத்தில் சிவனும், பிரம்மாரம்பா வடிவத்தில் பார்வதியையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இந்தக் கோயில் 12 ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாக கருதப்படுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

 மல்லேல தீர்த்தம்

மல்லேல தீர்த்தம்

ஸ்ரீசைலம் வரும்போது நீங்கள் மல்லேல தீர்த்தம் எனப்படும் அழகிய அருவியை தவற விட்டுவிடக் கூடாது. இந்த அருவியின் நீர் பாவங்களை கழுவும் சக்தி உள்ளதாக நம்பப்படுவதால் இங்கு ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை பார்க்கலாம். ஸ்ரீசைலம் நகரத்தில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் ஏதுமில்லை என்றாலும் சுலபமாக நகரை அடைந்து விட முடியும். இந்த சமயச் சிறப்பு வாய்ந்த நகரத்துக்கு பனிக் காலங்களில் சுற்றுலா வருவது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

 எங்குள்ளது

எங்குள்ளது

ஸ்ரீசைலம் நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லேல தீர்த்தம் அருவிக்கு அதன் சமயச் சிறப்பு காரணமாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த அருவியில் நீராடினால் பாவங்கள் தீரும் என்று பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுவதால் இதன் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

நோய் தீர்க்கும் மருந்து

நோய் தீர்க்கும் மருந்து


அதுமட்டுமல்லாமல் தீராத சரும நோய்களையெல்லாம் குணமாக்கும் பண்பு இந்த அருவி நீருக்கு இருப்பதாகவும் நம்பப்படுகிறது. மல்லேல தீர்த்தம் அருவியை ஆழமான பள்ளத்தாக்கில் 250 படிகளை இறங்கி கடந்து அடைய வேண்டுமென்பதால் பயணிகள் கவனமாக இருப்பது முக்கியம். மேலும் இந்தப் படிகள் வழுக்கும் நிலையில் இருப்பதால் வேகமாக செல்வது ஆபத்தாக முடியலாம் முடியலாம். இந்த அருவி அடர் வனங்களுக்கு மத்தியில் அமைந்திருப்பதோடு, அருவிக்கு செல்லும் வழி கரடு முரடான சாலைகளை கொண்டிருந்தாலும் சுலபமாக அடையக் கூடியதே. எனினும் மழைக் காலங்களில் வாகனங்கள் மூலம் இந்த அருவியை அடைவது சற்று கடினம்.

all photos credit

PC: wikipedia

More News

    Read more about: travel andra
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+