• Follow NativePlanet
Share
» »இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான சர்ச் !!

இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான சர்ச் !!

By Naveen

இந்திய தேசத்தில் ஏற்ப்பட்ட பல்வேறு கலாச்சார மாற்றங்களின் வாயிலாக கேரளா இருந்துள்ளது.8ஆம் நூற்றாண்டில் இசுலாமும் 14ஆம் நூற்றாண்டில் வாஸ்கோட காமாவின் வருகையால் கிறிஸ்துவமும் இந்தியாவினுள் வந்தது கேரளத்தின் வாயிலாகத்தான்.

இதன் அடையாளமாக இன்றும் கேரளத்தில் இருக்கிறது St.பிரான்சிஸ் சர்ச் என்னும் தேவாலயம். இந்தியாவில் இருக்கும் மிகப்பழமையான இந்த தேவாலயத்தை பற்றி அறிந்துகொள்வோம் வாருங்கள்.

St.பிரான்சிஸ் சர்ச்:

St.பிரான்சிஸ் சர்ச்:

fort கொச்சின் என்று முற்காலத்தில் விளிக்கப்பட்ட கொச்சி நகரில் கி.பி 1503ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும் இந்த St.பிரான்சிஸ் சர்ச்.

Church of South India எனப்படும் CSI பிரிவை சேர்ந்ததாகும் இந்த தேவாலயம்.

Ryan

வரலாற்று பின்னணி:

வரலாற்று பின்னணி:

கி.பி 1498ஆம் ஆண்டு ஐரோப்பாவில் இருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக வந்தடைந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கப்பாடு என்ற இடத்தில் கால்பதித்தார் வாஸ் கோட காமா என்னும் போர்த்துகீசிய மாலுமி.

வரலாற்று பின்னணி:

வரலாற்று பின்னணி:

காமாவை தொடர்ந்து பெட்ரோ அல்வேரேஸ், அல்போன்சோ தே அல்பேகுர்கே என்ற இரண்டு மாலுமிகளும் கேரளாவிற்கு கடல் வழியாக வந்திருக்கின்றனர்.

இந்த மாலுமிகள் கொச்சி அரசரின் அனுமதியோடு ஒரு கோட்டையை எழுப்பி அதனுள் முழுக்க முழுக்க மரத்தினால் St.Bartholomew என்பவருக்காக தேவாலயம் ஒன்றை கட்டியிருக்கின்றனர்.

Priyan Nithya

வரலாற்று பின்னணி:

வரலாற்று பின்னணி:

கி.பி 1506ஆம் ஆண்டு கொச்சி அரசரின் அனுமதியோடு பிரான்சிஸ்கோ தே அல்மெய்டா என்ற போர்த்துகீசிய வைஸ்ராய் மரத்தினால் கட்டப்பட்டிருந்த தேவாலயத்திற்கு பதிலாக கற்சுவர் கொண்ட தேவாயத்தை கட்டி அதனை புனித அந்தோனியாருக்கு அர்ப்பணம் செய்தார்.

Brian Snelson

டச்சு பிடியில் !!

டச்சு பிடியில் !!

கி.பி 1663ஆம் ஆண்டு டச்சு படைகள் கொச்சி நகரம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். போர்த்துகீசியர்கள் ரோமன் கத்தோலிக்க பிரிவை சேர்ந்தவர்களாகவும், டச்சுக்காரர்கள் ப்ரோடஸ்டன்ட் பிரிவை சேர்ந்தவர்களாகவும் இருந்ததினால் டச்சு படைகள் போர்த்துகீசியர்கள் கட்டிய அனைத்து தேவாலயங்களையும் இடித்து தரைமட்டம் செய்திருக்கின்றனர்.

ஆனால் இந்த பிரான்சிஸ் தேவாலயத்தை மட்டும் இடிக்காமல் விட்டிருக்கின்றனர்.

gordontour

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்தது:

பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்தது:

1795 டச்சு படைகளிடம் இருந்து பிரிட்டிஷ் படைகள் கொச்சியை கைப்பற்றிவிட்டாலும் வரை டச்சுக்காரர்களின் நிர்வாகத்தின் கீழ் இந்த சர்ச் இருக்க பிரிட்டிஷாரால் அனுமதித்திருக்கின்றனர். பின்னர் 1804ஆம் ஆண்டு டச்சுக்காரர்களே முன்வந்து பிரிட்டிஷாரிடம் இந்த தேவாலயத்தை ஒப்படைத்திருக்கின்றனர்.

Adams Homestay Cochin

St.பிரான்சிஸ் சர்ச் !!

St.பிரான்சிஸ் சர்ச் !!

தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இந்த சர்ச் இருந்தாலும் வடக்கு கேரள மறைமாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவருகிறது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மற்ற விசேஷ நாட்களிலும் ஆராதனை நடைபெறுகிறது. வார நாட்களில் சுற்றுலாப்பயணிகளுக்காக ஐந்தே தேவாலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது.

Terry Feuerborn

வாஸ்கோட காமாவின் கல்லறை:

வாஸ்கோட காமாவின் கல்லறை:

1524 தனது மூன்றாவது இந்திய பயணத்தின்போது கொச்சியில் மரணமடைந்த வாஸ்கோட காமாவின் உடல் முதலில் இந்தபிரான்சிஸ் சார்ச்சினுள் தான் புதைக்கப்பட்டிருக்கிறது.

பதினான்கு ஆண்டுகள் கழித்து போர்த்துகீசிய நாட்டின் தலைநகரான லிஸ்பனுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

இருந்தாலும் வாஸ்கோட காமாவின் கல்லறை ஒரு நினைவகமாக இன்றும் இத தேவாலயத்தினுள் இருக்கிறது.

Priyan Nithya

முதலாம் உலகப்போர் நினைவுத்தூண்:

முதலாம் உலகப்போர் நினைவுத்தூண்:

முதலாம் உலகப்போரில் பிரிட்டிஷ் படையில் இணைந்து போரிட்டு உயிரிழந்த கொச்சியை சேர்ந்த வீரர்களை நினைவுகூரும் தூண் ஒன்றும் பிரான்சிஸ் தேவாலயத்தின் வளாகத்தினுள் இருக்கிறது.

Terry Feuerborn

கொச்சி:

கொச்சி:

அரபிக்கடலின் அரசி என்றழைக்கப்படும் கொச்சி நகரம் கேரளத்தில் நிச்சயம் செல்ல வேண்டிய ஓரிடமாகும். சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயில், செராய் கடற்கரை, சீன மீன்பிடி வலைகள் கொண்ட மீன்பிடிக்கும் இடம், மரைன் டிரைவ் போன்ற சுற்றுலாத்தலங்கள் கொச்சியில் இருக்கின்றன.

கொச்சி பயண தகவல்கள்

கொச்சி ஹோட்டல்கள்

More News

    Read more about: kerala cochin spiritual places
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+