Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் மிக உயரமான சிலை இன்றுதான் இந்தியாவில் திறக்கப்படுகிறது! எத்தனை சிறப்புகள் தெரியுமா?

உலகின் மிக உயரமான சிலை இன்றுதான் இந்தியாவில் திறக்கப்படுகிறது! எத்தனை சிறப்புகள் தெரியுமா?

உலகின் மிக உயரமான சிலை இன்றுதான் இந்தியாவில் திறக்கப்படுகிறது! எத்தனை சிறப்புகள் தெரியுமா?

By IamUD

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்னு ஆரம்பிக்குற ஷங்கர் பட பாட்ட அப்படியே வாய பொளந்து பாத்து வளர்ந்த 90ஸ் கிட்ஸ்களே.... சொர்க்கமே என்றாலும் நம்ம ஊரப் போல வருமானு வானத்தையும் பூமியையும் பாத்துட்டு இருக்குற 80ஸ் கிட்ஸ்களே.. பப்ஜி விளையாடிக்கொண்டிருக்கும் 2k கிட்ஸ்களே.. எல்லாருக்கும் ஒரு நற்செய்தி. இந்தியாவில் இன்னுமொரு உலக அதிசயம். உலகின் மிகப் பெரிய சிலை இன்றுதான் இந்தியாவில் திறக்கப்படுகிறது. நாமும் அங்கு சென்று அதன் அருமை பெருமைகளை தெரிந்துகொள்வோமா.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 யாருக்கு சிலை

யாருக்கு சிலை

இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது இந்த சிலை. இது குஜராத் மாநிலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுதான் உலகின் மிக உயரமான சிலையாக இருக்கப்போகிறது.

எங்குள்ளது

எங்குள்ளது

அவர் பிறந்த குஜராத் மாநிலமான நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணை அருகே மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

சாது படுகையில் நர்மதா அணையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது இந்த சிலை.

கான்கிரீட்டும் இரும்பும்

கான்கிரீட்டும் இரும்பும்


வல்லபாய் அவர்கள் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட காரணத்தால், இந்தியா முழுக்க பல்வேறு பகுதிகளில் இருந்து இவரின் சிலைக்காக இரும்பு கொண்டு வரப்பட்டது. ஆம் இந்த சிலைக்கு உள்ளே இருக்கும் இரும்பு பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டது. நர்மதா டேமில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது.

வடிவமைப்பு பொறியாளர்

வடிவமைப்பு பொறியாளர்

வல்லபாய் அவர்களது சிலையை வடிவமைத்தது சிற்பி ராம் வி சுடர். லார்சன் ஆவார். இவர் பத்ம பூஷன் விருது பெற்ற சிற்பி. இவருடன் இணைந்து டொப்ரோ நிறுவனம் இதில் முக்கிய பணிகளை செய்துள்ளது. இந்த சிலையை உருவாக்க மொத்தம் 250 பொறியாளர்கள், 3400 பணியாளர்கள் உழைத்து இருக்கிறார்கள். இதை உருவாக்க மொத்தமாக 40 மாதம் ஆகியுள்ளது.

அமெரிக்க சிலையை விட பெரியது

அமெரிக்க சிலையை விட பெரியது

அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இது அளவில் உயரத்தில் மிகப் பெரியது. உயரத்தில் இரண்டு மடங்கு அதிக உயரம் கொண்டது நம் வல்லபாய் அவர்களின் சிலை. இதன் உயரம் 182 மீ ஆகும்

மொத்த செலவு

மொத்த செலவு


வல்லபாய் அவர்களின் சிலையை உருவாக்க மொத்தம் 1989 கோடி ரூபாய் செலவளிக்கப்பட்டுள்ளது. 1 லட்சத்து 40 ஆயிரம் கியூபிக் மீட்டர் கான்கிரிட்டீல் 18, 500 டன் இரும்புக் கம்பிகளை பயன்படுத்தி உறுதயானதாக கட்டப்பட்டுள்ளது. 2 ஆயிரம் டன் வெண்கல ஷீட்டுகளில் சிலை பூசப்பட்டு 33 மாதங்களில் 3 ஆயிரம் பணியாளர்களைக் கொண்டு கட்டப்பட்ட சிலை என்ற சாதனையையும் அடைந்துள்ளது.

சரோவர் அணை

சரோவர் அணை

வல்லபாய் அவர்களின் சிலை சரோவர் அணையை நோக்கி நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவரின் கை, முக அமைப்புகள் நேரில் கண்ட பலரின் ஆலோசனைகள் பெறப்பட்டே உருவாக்கப்பட்டது. முடிந்தவரை துல்லியமாக உருவாக்க பாடுபட்டிருக்கிறார் சிற்பி.

சீனாவை முந்திய இந்தியா

சீனாவை முந்திய இந்தியா

இந்த சிலை விவகாரத்தில் சீனாவை தூக்கிச் சாப்பிட்டுவிட்டது இந்தியா. சீனாவில் அமைந்துள்ள சிரிக்கும் புத்தர் சிலை 128 மீ உயரம்தான். நம் வல்லபாய் அவர்களின் சிலை 182 மீ உயரமாகும்.

நீர் நிலையில் இருக்கும்

நீர் நிலையில் இருக்கும்


உலகிலேயே மிக உயரமான சிலை மற்றும் நீர் நிலையில் இருக்கும் சிலை இதுவாகும். அப்படி என்றாலும் வெள்ளத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, நிலநடுக்கம் போன்ற இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாக்கும் வகையிலும் இந்த சிலை கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

Read more about: travel gujarat
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X