Search
  • Follow NativePlanet
Share
» »லே அரண்மனையும் பாராகிளைடிங் சாகசமும்

லே அரண்மனையும் பாராகிளைடிங் சாகசமும்

லே அரண்மனையும் பாராகிளைடிங் சாகசமும்

ஸ்டாக் அரண்மனை 1825-ஆம் ஆண்டு செச்பல் தொண்டுப் நம்க்யால் என்ற அரசரால் கட்டப்பட்டது. இது இண்டஸ் நதியில் அமைந்த ஒரு நகரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த அரண்மனை நூலகத்தில், பல திபெத்திய புத்திசம் பள்ளிகளால் அங்கீகரிக்கப்பட்ட கங்க்யுர் என்ற புனித எழுத்துக்கள், 108 பகுதிகளாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த அரண்மனையில் தான் அக்காலத்தில் செங்கே நம்க்யால் என்ற அரசரும் அவரை சார்ந்த வம்சாவழியினரும் வாழ்ந்து வந்தனர்.

Baldiri

பாரம்பரிய மரபுப்படி, அழகிய கட்டிடக்கலையுடன் கட்டப்பட்ட அரண்மனை இது. சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் இந்த அரண்மனை மற்றும் அதன் தோட்டத்திலிருந்து கண்டு ரசிக்கலாம். இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதற்கு மற்றொரு காரணம் இங்கு கொண்டாடப்படும் "ஆண்டு முகமூடி நடன" திருவிழா. இந்நேரத்தில் சுற்றுலாப் பயணிகள், அரச குடும்பத்தை சேர்ந்த அறிய வகை கிரீடங்கள், உடைகள் மற்றும் முக்கிய பொருட்களை காண நேரிடலாம். இந்த அரண்மனையை சுற்றிப் பார்க்க 4-5 மணி நேரமாகும். இந்த அரண்மனையின் உள்ளிருக்கும் ஸ்பிடுக் மடம் கூடுதல் ஈர்ப்புடையதாக இருக்கும். பயணிகள் இங்கு வர ஜீப் அல்லது கார்களை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்

லே அரண்மனையும் பாராகிளைடிங் சாகசமும்

KennyOMG

பாராகிளைடிங் என்ற வானில் பறக்கும் விளையாட்டும் லேவில் மிகவும் பிரபலமான விளையாட்டு. இண்டஸ் கரையில் இந்த இடம் அமைந்திருப்பதால், இப்படிப் பட்ட தீரச்செயல் புரியும் விளையாட்டு விளையாட இது தகுந்த இடம். இந்த இடம் 11000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், பாராகிளைடிங் செய்ய இது சரியான இடம். வருடம் முழுவதும் இந்த விளையாட்டை விளையாடலாம். எனினும் அக்டோபர் முதல் ஜூன் வரை பாராகிளைடிங் விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் சிறந்த நேரம்

Read more about: travel leh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X