» »நம்ம தமிழனை யாராலும் அடிக்சுக்க முடியாதுங்குறதுக்கு மேலும் ஒரு ஆதாரம்... எங்கே தெரியுமா ?

நம்ம தமிழனை யாராலும் அடிக்சுக்க முடியாதுங்குறதுக்கு மேலும் ஒரு ஆதாரம்... எங்கே தெரியுமா ?

Posted By: Sabarish

PC : Rameshyanthra

"தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு" அடஅடடா... சொல்லும்போதே எவ்வளவு கெத்தாவும், ஒரு கர்வமாவும் இருக்கு. இந்தக் கவிதைய எழுதின நாமக்கல் இராமலிங்கம் எந்த மனநிலையில எழுதினாருன்னு தெரியல. ஆனா, இதுல கூறியிருப்பதைப் போலவே நம் ஆதித் தமிழர்களின் ஒவ்வொரு செயலும், தற்போதைய நவநாகரீக காலத்தில் கூட போற்றப்படக்கூடிய விசயமாகவே உள்ளது.

விட்டுச் சென்ற பொக்கிசம்

விட்டுச் சென்ற பொக்கிசம்

PC : Sodabottle

ஆதித் தமிழர்களின் ஒரு செயலும், வாழ்க்கை முறையும் இன்று வரை நம் கண் கூடாக பார்த்துக் கொண்டுதான் வருகிறோம். தொல்லியல் துறையின் மூலம் அது வெளிப்பட்டுக் கொண்டுள்ளது. ஆதி மக்கள் விட்டுச் சென்ற ஒவ்வொன்றிற்கு பின்னாலும் அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம் என்ற எண்ணற்ற விசயங்கள் சிதறிக்கிடக்கின்றன. அவற்றினை பல கிராமப்புற, மலைப்பிரதேசங்களில் நாம் காண முடியும்.

மூத்தகுடி தமிழன்

மூத்தகுடி தமிழன்

PC : TimJN1 - Bradshaw

தமிழ் இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இலக்கியங்களில் கூறுவதைப் போல கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தகுடி என்ற தமிழன் பிற்காலத்தில் எப்படி வாழ்ந்தான், எங்கெல்லாம் வாழ்ந்தான் என பல வரலாறுகள் அகழாய்வுச் சான்றுகளின் முடிவுகளுடன், வரலாற்று ஆய்வாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

குகையில் வாழ்ந்த நாம்

குகையில் வாழ்ந்த நாம்

PC : Viktor Vasnetsov

ஒரு காலகட்டத்தில் வெயில், மழை, விலங்குகளிம் இருந்து தன்னை பாதுகாக்க எண்ணிய மனிதன் முதல் முதலில் உருவாக்கியதே குகை வாழ்விடம். பாறை இடுக்கு, மரத்துளை, புவிப் பள்ளம் என குகைகளை அமைத்த அவர்கள் தங்களை பாதுகாக்கும் நாகரீக வாழ்வினை மேற்கொண்டனர். அப்படிப்பட்ட பல குகைகள் இன்றளவும் தமிழகத்தில் சில பகுதிகளில் காண முடியும்.

குடியம் குகை

குடியம் குகை

PC : Dharma

குடியம் குகை பூண்டிக்கு மேற்குப்புறம் சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குள்ள அல்லிக்குழி மலைத் தொடரில் பழைய கற்கால மக்கள் வாழ்ந்த 16 குகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் மிகப்பெரிய அளவிலான குகை மனச்சம்மன் குகை ஆகும். சுமார் 100 அடி உயரமுடைய இந்தக் குகை நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோயிலாகும் குகை

கோயிலாகும் குகை

PC : wikipedia

தொல்லியல் துறையினரால் கைக்கோடாரிகள், கிழிப்பான்கள், வெட்டிகள், சுரண்டிகள் என ஆதிமனிதர்கள் உருவாக்கிய பல அரிய பொருட்கள் இங்கு கிடைத்துள்ள நிலையில் தற்போது, இது சுற்றுவட்டார பகுதியினரால் கோவிலாக கருதி வணங்கப்பட்டு வருகிறது. குடியம் மலைத் தொடர் அருகே உள்ள கிராமப் பகுதி மக்கள் பௌர்ணமி உள்ளிட்ட விசேச நாட்களில் குகையில் உள்ள மனச்சம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வழிநெடுகிலும் தொன்மைச் சான்றுகள்

வழிநெடுகிலும் தொன்மைச் சான்றுகள்

PC : Øyvind Holmstad

குடியம் என்ற சிறிய கிராமத்தில் இருந்து வடக்கே மலைமீது அமைந்துள்ளது இந்த குடியம் குகை. இதையடைய சுமார் 7 கிலோ மீட்டர் ஒற்றையடிப் பாதை வழியாக அடர் காட்டின் நடுவே நடந்து செல்ல வேண்டும். பாதை நெடுகிலும் கூழாங்கற்கள், பச்சைப் பசேலென காட்சியளிக்கும் மரங்கள், மூலிகைச் செடிகள், கற்கால மனிதர்கள் பயன்படுத்திய உருளை கூழாங்கற்கள் என பாதை முழுக்க பல விசித்திரங்களை காணலாம்.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு அருகில் அமைந்துள்ளது குடியம் குகை. சென்னையில் இருந்து படையநல்லூர், கொடுவள்ளி வழியாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலையை அடைந்து அங்கிருந்து கொல்லப்பாளையம் வழியாக இதனை அடையலாம்.

சுற்றியும் என்னெல்லாம் இருக்கு தெரியுமா ?

சுற்றியும் என்னெல்லாம் இருக்கு தெரியுமா ?

Map

குடியம் மற்றும் பூண்டி பகுதியினைச் சுற்றி பல ஆன்மீகத் தலங்கள் காணப்படுகின்றன. இதில், குடியம் குகை அடுத்து சற்று மலை ஏறினால் ஸ்ரீ மீனாட்சி அம்மன் குடைவரைக் கோவில், சமபெளிப் பகுதியில் நாகாலம்மா கோவில், கூனிபாளையம் அடர் வனப் பகுதி உள்ளிட்டவை உங்களது இந்த பயணத்தை மேலும் வலுப்பெறச் செய்யும்.

Read more about: travel, பயணம்