Search
  • Follow NativePlanet
Share
» »மகாராஸ்டிராவில் 5 அழகிய கடற்கரை வீடுகள்..!

மகாராஸ்டிராவில் 5 அழகிய கடற்கரை வீடுகள்..!

நாம் சுற்றுலா செல்லும் போது அதற்கான இடத்தைத் தேர்வு செய்வதைக் காட்டிலும், தங்கும் விடுதிகளை தேர்வு செய்வதில் அதிக கவணம் செலுத்துவது அவசியமாக இருக்கிறது. குடும்பத்தினர், நண்பர்கள், மனதிற்கு விருப்பமானவர்கள் என யாருடன் சென்றாலும் அவர்களுக்கு ஏற்ற, அதே சமயம் ரசிக்கக் கூடிய வகையிலான விடுதிகளைத் தேடுவது அவசியம். சுற்றுலாத் தலத்தை விட தங்கும் விடுதி இன்னும் கூடுதல் சிறப்பாக இருந்தால் நல்லதுதானே. வாங்க, இன்று மகாராஸ்டிராவில் கடற்கரையை ஒட்டியுள்ள அழகிய தங்கும் விடுதிகளை பார்க்கலாம்.

அத்தாங் விடுதி, அஞ்சர்லே கடற்கரை

அத்தாங் விடுதி, அஞ்சர்லே கடற்கரை

கொங்கன் பகுதிக்கு உட்பட்ட கடற்கரைகளில் அஞ்சர்லே கடற்கரையும் ஒன்றாகும். நீங்கள் ஏற்கனவே தபோலி, கார்தே, முரூட் உள்ளிட்டவை விட அஞ்சர்லே ஒரு மறைக்கப்பட்ட மாணிக்கமாக காட்சியளிக்கும். கடற்கரை ஓய்வு எப்போதும் வேடிக்கையாக இருக்கும். அதற்கான தொகை கொஞ்சம் கூடுதலாக இருக்கும். ஆனால், அத்தாங் விடுதியில் உங்களது செலவுத்திட்டத்தை பொறுத்து அறைகளைத் தேர்வு செய்யலாம். மேலும், உங்களது ரசனைக்கு ஏற்ற அறைகளும் கிடைக்கும். கடற்கரையில் டால்பீன் மீன்களை ரசித்தபடியே நடந்து செல்ல, சூரியக் குளியல் என அனைத்து சகல வசதிகளும் விடுதி மலமாகவே நீங்கள் ஏற்பாடு செய்து கொள்ளலாம். தபோலி கடற்கரைக்கு அருகிலேயே அஞ்சர்லே இருப்பதால் உள்ளூர் வாடகைக் கார்கள் மூலம் எளிதில் வந்தடையலாம்.

Eduard Marmet

காசித் கடற்கரை வில்லா

காசித் கடற்கரை வில்லா

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள காசித் கடற்கரை, பிரபலமான அலிபக் கடற்கரையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காசித் நகரில் உள்ள இந்த மனமயக்கும் வீடான வில்லா ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. பன்சாத் சரணாலயத்தின் ஒரு பகுதியும், கடற்கரை பகுதியும் என அருகில் உள்ள தலங்களுக்கு 10 நிமிட நடைபயணத்திலேயே அடைந்துவிடலாம். கடலின் எதிரே உங்களது வீட்டில் பசுமையான புல்வெளியில் அமர்ந்து நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் குதூகலமாக விளையாடும் பாக்கியத்தை இந்த வில்லாவின் கட்டமைப்பு தருகிறது. மேலும், பெரிய அளவிலான குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகவும் தங்கும் வசதியாக நான்கு படுக்கையறைகள் கொண்ட பிரம்மாண்ட அறைகளும் இங்கே வடிவமைக்கப்பட்டுள்ளது.

Hengist Decius

வில்லா 270, தபோலி

வில்லா 270, தபோலி

நீங்கள் புதியதாகவும், பெரும்பாலானோர் அறியப்படாத ஓர் இடத்திற்குச் சுற்றுலாச் செல்ல திட்டமிட்டால் இயற்கையின் கரங்களில் இருந்து சிறிது தொலைவில் உள்ள தபோலி கடற்கரைக்கும், அங்கே அமைந்துள்ள வில்லா 270 விடுதிக்கும் செல்லலாம். அரேபிய கடலின் பின்னணியிலிருந்து ஒரு குன்றின் மீது அமைந்திருக்கும், அமைதியான வில்லா நீங்கள் கடலின் அழகை கண்டு ரசிக்கும் அற்புதமான காட்சியைத் தரும். இந்த வில்லா ஐந்து மரக் கட்டடங்களுடனும், ஒவ்வொன்றிலும் ஏசி, சூடான நீர் மற்றும் ஒரு தொலைக்காட்சி உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது. அதுமட்டும் இல்லைங்க, ஒரு புறம் கடல் அலைவீச, மறுபுறம் உங்களது காதலியின் புண்ணகையை ரசித்தபடியே சூடான உணவை சாப்பிடுவதற்கு வசதியாக குடிசைகள் போன்ற கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. அறை ஒன்று சுமார் 4500 ரூபாயில் இருந்து கிடைக்கும்.

Harold Litwiler

ஸ்சீ வில்லா படவானே, தேவ்பக்

ஸ்சீ வில்லா படவானே, தேவ்பக்

நீங்கள் நகர நெரிசலில் இருந்து தப்பி, மனதிற்கு அறுதலாக சுற்றுலாத் தலத்தை தேடுகிறீர்கள் என்றால் உங்களது தேர்வு தேவ்பாக் கடற்கரையாக இருக்கட்டும். கார்வார் பகுதியில் அமைந்துள்ள தேவ்பக் கடற்கரை அழகை ரசிக்க பல்வேறு விடுதிகளும் இங்கு செயல்பட்டுவருகின்றன. அதில், அரேபிய கடலை கண்டும் காணாத ஒரு சிறிய குன்றின் மீது கட்டப்பட்ட, வில்லா படவனே 20 ஏக்கர் பரப்பளவில், முந்திரி, மாம்பழம் மற்றும் தென்னை தோப்புக்கள் நிறைந்த நிலத்தில் உள்ளது. இந்த பாரம்பரிய கொங்கன் பாணியிலான வீட்டில் மூன்று படுக்கையறைகள் உள்ளன. இந்த விடுதி அறையின் எந்த பகுதியில் இருந்து வெளியில் பார்த்தாலும் கடற்கரை காட்சியளிப்பது இதன் தனிப்பட்ட சிறப்பாக உள்ளது. 7 ஆயிரம் ரூபாய் முதல் கிடைக்கும் இந்த விடுதி அறைக்கு முன்பதிவு செய்துவிட்டு சுற்றுலா வருவது அவசியம்.

Mac Qin

ஓசினோ பியர்ல், ரத்தினகிரி

ஓசினோ பியர்ல், ரத்தினகிரி

கொங்கனில் நீளமான கடற்கரைகளில் மிக ரம்மியமான மற்றும் அழகான கணேஷ்குலே பீச் பகுதியில் அமைந்துள்ளது ஓசினோ பியர்ல் விடுதி. மேலும், இப்பகுதியிலேயே ஒரே விடுதியான ஓசினோ பியர்ல் சுற்றுலா விருந்தினர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கொங்கன் வாழ்க்கை முறையானது பலாப்பழத் தோட்டங்களும், முந்திரி பழத்தோட்டங்களும் நிறைந்த புதுவித அனுபவத்தை அளிக்கக்கூடியது. இவ்விடுதியில் உள்ள மர வீடு, கடற்கரையை ரசித்தபடியே இரவில் ஓய்வெடுக்கும் வாய்ப்பை வழங்கும்.

Pulau Rawa

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more