Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கடற்கரைகள் பற்றி நீங்க கேள்வி பட்டிருக்கீங்களா?

இந்த கடற்கரைகள் பற்றி நீங்க கேள்வி பட்டிருக்கீங்களா?

இந்தியாவின் தலைசிறந்த கடற்கரைகளைப் பற்றி இந்த பதிவில் பாக்கலாம்.

கடல்... யாருக்குதான் பிடிக்காது சொல்லுங்க. வயது வித்தியாசமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் இடம் கடற்கரையாகத் தான் இருக்கும். தனிமையாக உணர்கிறவர்கள், மனதில் ஏதோ பாரத்தை சுமந்துகொண்டு இருப்பவர்களுக்கு கடற்கரை ஒரு நல்ல மருந்தாக இருக்கும். மட்டுமல்லாமல் மகிழ்ச்சியான தருணங்களைக் கொண்டாடக் கூட கடற்கரையை தேர்ந்தெடுப்பவர்கள் பெரும்பாலானோர்.

சரி இப்போ நாம இந்தியாவின் தலைசிறந்த கடற்கரை பற்றி பாக்கலாமா?

ராதாநகர் கடற்கரை

ராதாநகர் கடற்கரை

அந்தமான் தீவுகளில் அமைந்துள்ள இந்த ராதாநகர் கடற்கரை, ஒரு மாயத் தோற்றத்தைக் கொண்டது. இங்கு நீங்கள் ஒரு தனிமை பிரதேசத்தில் இருப்பதை போல் உணரலாம். அந்தமான்

தீவுகளுக்குட்பட்ட ஹவாக் தீவில் அமைந்துள்ளது இந்த அழகிய கடற்கரை.

PC: mOTHrEPUBLIC

எலிஃபேன்ட் பீச்

எலிஃபேன்ட் பீச்

பல நீர் சாகசங்களை உள்ளடக்கிய எலிபேன்ட் பீச், ஹவாக் தீவிலிருந்து படகு சவாரி என மனம் ததும்பும் மகிழ்ச்சியான தருணங்களை தரும் இந்த யானைக் கடற்கரை பகுதிகள்.

புகைப்படமெடுக்க சிறந்த இடமாக கருதப்படும் இந்த பீச் ஹவார் ஜெட்டி பகுதியிலிருந்து 20 நிமிடத் தொலைவில் உள்ளது.

PC: Subro89

கலாபத்தர் கடற்கரை

கலாபத்தர் கடற்கரை

வெள்ளை மணலில் கரும்பாறைகள் ஆங்காங்கே புள்ளி வைத்தாற்போல, பார்ப்பதற்கே பரவசமூட்டும் அழகைக் கொண்டது கலாபத்தர் கடற்கரை. இங்கு பைக் ரைடிங் செய்வது

அலாதியான அனுபவமாக இருக்கும்.

PC:Mvbellad

வாண்டூர் கடற்கரை

வாண்டூர் கடற்கரை

பவளப்பாறைகள் நிறைந்த வாண்டூர் கடற்கரை, அந்தமான் தீவுகளின் போர்ட்பிளேர் பகுதியில் அமைந்துள்ளது. அலைகளின் அசைவுகளில் காலார நடந்து வருவது மிகவும் நல்ல

பொழுதுபோக்காக இருக்கும். சுற்றுலா பயணிகளுக்கு இந்த இடம் நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும்.

PC: Gangulybiswarup

நெய்ல் தீவு கடற்கரை

நெய்ல் தீவு கடற்கரை

ஹவாக் தீவுக்கும், ரோஸ் தீவுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு அந்தமான் செல்லும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் பார்க்கவேண்டிய பகுதியாகும். இங்கு நிறைய விடுதிகளும்

உள்ளன. கடலின் அழகை ரசித்துக் கொண்டே அருகிலுள்ள விடுதிகளில் ஓய்வெடுக்கலாம்.

PC: Wikiwand

மாந்த்வி கடற்கரை

மாந்த்வி கடற்கரை

இயற்கை ஆர்வலர்களைக் கவரும் வகையில் இயற்கையே வடிவமைத்து, வளங்களை அள்ளிக் கொடுத்துள்ளது குஜராத்திலுள்ள இந்த மாந்த்வி கடற்கரைக்கு. இங்குள்ள மாந்த்வி

மாளிகையிலிருந்து கடற்கரையை பார்க்கும்போது, அவர்கள் அனைவரையும் அசரச் செய்யும் அளவுக்கு அழகாக இருக்கும்.

PC: Gujarat Tourism official website

கோப்நாத் கடற்கரை

கோப்நாத் கடற்கரை

பாவ்நகரிலிருந்து 70கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோப்நாத் கடற்கரை. கம்பட் பகுதியிலுள்ள இந்த கடற்கரை 500 வருட பழைமையான சிவன் கோவிலுக்கு பெயர் பெற்றது.

PC: Gujarat Tourism official website

துமாஸ் கடற்கரை

துமாஸ் கடற்கரை

சூரத் நகரின் பெருமையைச் சொல்லும் கடற்கரை. குஜராத்தின் அழகிய கடற்கரைகளுள் ஒன்றாகும்.

PC: Rahul Bhadane

நார்கோல் கடற்கரை

நார்கோல் கடற்கரை

குஜராத் - மகாராஷ்டிர மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த கடற்கரை கூட்டம் என்றாலே அலர்ஜி என்பவர்களுக்கு ஏற்ற கடற்கரை ஆகும். இணைபிரியா ஜோடிகள் தனிமை விரும்பிகளுக்கு

அருமையான இடம். காதலர்களுக்கு ஏற்ற இடம்.

PC : Gujarat Tourism official website

அலிபக் கடற்கரை

அலிபக் கடற்கரை

கடற்கரை நகரமான அலிபக் நல்ல சுற்றுலாத் தளமாக அமைகிறது. சுற்றுலாப் பயணிகளுக்கு இங்கு சுற்றி பார்ப்பதற்கென அலிபக் கோட்டை, கனகேஸ்வரர் கோவில் என நிறைய உள்ளன.

PC : Rakesh Ayilliath

கணபதிபுலே கடற்கரை

கணபதிபுலே கடற்கரை

இயற்கை எழில் சூழ்ந்த இந்த கடற்கரைக்கு இந்த பெயர் ஏற்படக்காரணம் அங்கு அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகும். இதை சுற்றி கணபதிபுலே பீச், வெல்னேஷ்வர் பீச், ரத்னகிரி போன்ற பகுதிகள் பார்ப்பதற்கேற்ற இடங்களாக உள்ளன.

PC : Dmpendse

வெங்கர்லா கடற்கரை

வெங்கர்லா கடற்கரை

மராட்டிய மாநிலம் சிந்துடர்க் அருகே உள்ள கடற்கரை வெங்கர்லா என்று அழைக்கப்படுகிறது. இதனருகே பல்வேறு கோவில்கள் உள்ளன. நவதுர்கா கோவில், ரெடி கணேசன் கோவில் ஆகியன அவற்றில் பிரபலமானவை.

PC : SHIVREKHA

டர்கார்லி கடற்கரை

டர்கார்லி கடற்கரை


விடுமுறை நாள் கொண்டாட்டத்துக்கு நிச்சயமாக ஏற்ற இடம் என்றால் அது இந்த கடற்கரைதான். மராட்டிய மாநிலத்தில் உள்ளவர்களின் அதிகபட்ச கொண்டாட்டங்கள் நிகழும்

பகுதியாக இந்த கடற்கரைப் பகுதி விளங்குகிறது.

PC : Rohit Keluskar

ஜூகு கடற்கரை

ஜூகு கடற்கரை

இந்தியாவின் நகரக் கடற்கரைகளுள் மிகமுக்கிய ஒன்றாக விளங்குவது இந்த ஜூகு கடற்கரைதான். மும்பை நகரின் வெளிப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரை அம்மாநில

சுற்றுலாத்துறைக்கு நல்ல வருவாயை ஈட்டித்தருகிறது.

PC: Gr8.philosopher

ஹர்னாய் கடற்கரை

ஹர்னாய் கடற்கரை

ஹர்னாய் கோட்டை மற்றும் ஹர்னாய் பீச் ஆகியன வளர்ந்துவரும் வாரவிடுமுறை நாள் கேளிக்கை பகுதிகளாகும். இது முறையே மும்பை மற்றும் புனேயிலிருந்து ஏறத்தாழ 240 மற்றும் 200

கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நிச்சயமாக நகர உளைச்சலை மறக்கடிச்செய்யும்.

PC :Altafalvi

மல்வான் கடற்கரை

மல்வான் கடற்கரை


மகாராஷ்டிரத்தின் கடற்கரை பகுதி நீண்ட அருமையான பகுதிகளாகும். மல்வான் கடற்கரை, அம்மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தளமாகும்.

PC : Shreyas M Balappanavar

சௌபதி கடற்கரை

சௌபதி கடற்கரை

இது மும்பை மாநகரின் மிக முக்கிய கடற்கரை பகுதியாகும். ஏனென்றால், விநாயகர் ஊர்வலம் இங்குதான் அதிகளவில் நடைபெறுகிறது. விநாயகர் சதுர்த்தியின் போது இந்த

கடற்கரையில் தான் அதிகளவில் சிலை கரைப்பு நடைபெறுகிறது.

PC : Jorge Láscar

வெலகர் கடற்கரை

வெலகர் கடற்கரை

மகாராஷ்டிரம் - கோவா எல்லையில் அமைந்துள்ள இந்த கடற்கரை பகுதி விடுமுறை நாள்களில் குதூகலிக்கும். இந்த பகுதி முழுவதும் நிறைய தங்கும் விடுதிகள் காணப்படுகின்றன.

வெளி மாநிலத்திலிருந்து வருபவர்கள், இங்கு தங்கியிருந்து கடற்கரையின் அழகை அனுபவிக்கமுடியும்.

PC : Sanjaykattimani

ரெடி கடற்கரை

ரெடி கடற்கரை


ரெடி கணேசன் என்றழைக்கப்படும் விநாயகர் கோவிலுக்கு பெயர்பெற்ற ஊரான இது மகாராஷ்டிரத்தில் அமைந்துள்ளது. புகைப்படம் எடுக்க ஏற்ற இடமாக இது இருக்கிறது.

PC : Misslinius

தபோலி கடற்கரை

தபோலி கடற்கரை

மும்பை மற்றும் புனே விலிருந்து எளிதாக செல்லும் வகையில் அமைந்துள்ள இந்த கடற்கரை நிச்சயமாக நல்ல விடுமுறை விருந்துக்கு ஏற்ற இடமாகும்.

PC:Janak Pandya

கிஹிம் கடற்கரை

கிஹிம் கடற்கரை

பச்சை பசேலென காட்சிகளுடன் கூடிய கடற்கரை இதுவாகும்

PC : Ameyness

அக்சா கடற்கரை

அக்சா கடற்கரை

மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இடம் சூரிய மறைவு காண அட்டகாசமான இடமாக கருதப்படுகிறது.

PC : Sobarwiki

மனோரி கடற்கரை

மனோரி கடற்கரை

இதுவும் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மற்றொரு கடற்கரை பகுதி ஆகும். கடலின் அழகினில் மூழ்கி நகரத்தின் சுமைகளை மறக்க அற்புதமான இடமாக இது விளங்குகிறது.

PC: Vivo78

காசித் கடற்கரை

காசித் கடற்கரை

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த காசித் கடற்கரை, பிரபலமான அலிபக் கடற்கரையிலிருந்து 35கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

PC: Mayur.thakare

கார்வார் கடற்கரை

கார்வார் கடற்கரை

சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்த இந்த இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ளது. இதனருகில் தேவ்பக் பீச், கலி பீச், அன்சி தேசிய பூங்கா ஆகியன அமைந்துள்ளன.

ஓம் கடற்கரை

ஓம் கடற்கரை

கோகர்னாவில் அமைந்துள்ள இந்த கடற்கரை ஓம் வடிவில் இருக்கும். இதனால்தான் அதற்கு ஓம் கடற்கரை எனும் பெயர் வந்தது.

PC : Anandavinash

காப் கடற்கரை

காப் கடற்கரை

உடுப்பியிலிருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரை மாலை மங்கும் நேரத்தில் மிக அழகாக காட்சியளிக்கும். பாறைகள் ஆங்காங்கே பொட்டு வைத்தார்போல் இருக்கும். கலங்கரை விளக்கத்தின் மேலேறி பார்த்தால் அப்படியொரு காட்சி கண்ணுக்கு விருந்தளிக்கும்

PC: Psubhashish

தேவ்பக்

தேவ்பக்

கார்வார் பகுதியில் அமைந்துள்ள இந்த கடற்கரை அழகை ரசிக்க பல்வேறு விடுதிகளும் இங்கு செயல்பட்டுவருகின்றன.

PC: Agnel3

தண்ணீர்பவி

தண்ணீர்பவி

மங்களூருவில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு தண்ணீர்பவி என்று பெயர். தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம். நீர் சவாரி செய்து நல்ல அனுபவம் பெறலாம்.

PC: Giridhar1729

கும்தா கடற்கரை

கும்தா கடற்கரை

நமக்கு நெருக்கமானவர்களுடன் நேரம் செலவிட இயற்கை அமைத்துக் கொடுத்துள்ள வரம் இந்த கடற்கரை.இது மிகவும் அமைதியான கடற்கரை பகுதியாகும்.

PC: Kamat~commonswiki

முருதேஷ்வரா

முருதேஷ்வரா

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்து மதத் தலங்களுள் முக்கியமானது முருதேஷ்வரா. இங்கு கடற்கரை அருகிலே சிவன் கோவிலும் அமைந்துள்ளது.

PC: Magnus Manske

மால்பே

மால்பே

கர்நாடக மாநிலம் உடுப்பியிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது மால்பே கடற்கரை. இங்குள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு நாடுமுழுவதுமிருந்து பக்தர்கள் வருவார்கள். இது மிகவும் சிறப்பு வாய்ந்த பகுதியாகும்.

PC: Brunda Nagaraj

பனம்பூர்

பனம்பூர்

கோஸ்டல் கர்நாடகாவில் அமைந்துள்ளது இந்த பனம்பூர். அரபிக் கடலில் அமைந்துள்ள இந்த பகுதி பனம்பூர் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. சூரிய மறைவு காண சிறந்த இடமாகும்.

PC: Premnath kudva

மரவந்தே

மரவந்தே

கர்நாடக மாநிலத்திலுள்ள மிக அழகிய கடற்கரைகளுள் மரவந்தேவும் ஒன்றாகும். உடுப்பியிலிருந்து 55கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர்.


PC: Brunda Nagaraj

சோமேஷ்வர்

சோமேஷ்வர்

மங்களூருவிலிருந்த 9கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரை சூரிய குளியல் எடுக்க ஏற்ற இடமாகக் கருதப் படுகிறது.

PC: Ashwinkumar

சுரட்கல்

சுரட்கல்

மங்களூர் ரயில் நிலையத்திலிருந்து 19 கிமீ தொலைவில் அமைந்துள்ளது சுரட்கல் கடற்கரை. இந்தியாவின் சுத்தமான கடற்கரைகள் சிலவற்றுள் ஒன்றாக திகழ்கிறது.

PC: Abhineshbasu

பாகா

பாகா


மக்கள் நெரிசல் குறைந்த கடற்கரை பகுதிகளுள் ஒன்றான பாகா கோவாவில் உள்ளது. அலைச்சறுக்கு, நீர்ச்சறுக்கு போன்ற விளையாட்டுகள் இங்கு பிரபலம்.


PC: Brunda Nagaraj

வகாதர்

வகாதர்

சுத்தமான வெள்ளை நிற மணல்கள் நிறைந்த கடற்கரை வகாதர் கடற்கரையாகும். கோவாவின் சபோரா கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள இந்த கடற்கரை இயற்கை எழில் கொஞ்ச காட்சி தருகிறது.

PC: Tatiraju.rishabh

அன்ஜுனா

அன்ஜுனா

கண்டோலிம் கடற்கரையிலிருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அன்ஜூனா கடற்கரை. பட்ஜெட்டுக்கு ஏற்ற கடற்கரையாக இது இருக்கும்.

PC: Innacoz

கலங்குட்டே

கலங்குட்டே

இது கோவாவிலுள்ள மிக பிரபலமான கடற்கரை பகுதியாகும். கேளிக்கைகள், விருந்துகள், எதிர்பாராத ஆச்சர்யபடுத்தும் கொண்டாட்டங்கள் அனைத்தும் இங்கு நிகழும். இதுதான் இந்தியாவின் ஹாட் பீச் ஆகும்.

PC: Brunda Nagaraj

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X