» »இந்த 5 கோயில்களுக்கும் போய்ட்டு வந்தா போதும்! உங்க வாழ்க்கை தலைகீழா மாறும்!

இந்த 5 கோயில்களுக்கும் போய்ட்டு வந்தா போதும்! உங்க வாழ்க்கை தலைகீழா மாறும்!

Written By:

தமிழ்நாட்டில் இந்து மதம் தோன்றுவதற்கு முன் அல்லது, உருவாக்கப்படுவதற்கு முன்னரே இருந்தது சைவ, வைணவ, நாட்டு தெய்வ வழிபாடு முறைகள்தான். அந்த வழி மரபில் வந்த தமிழர்கள் தங்கள் முறைகளுக்கென ஒவ்வொரு கோயிலைக் கட்டி பூசை செய்து வந்தனர். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க கருதி, பெரியோர்கள் அவர்களை இந்துக்களாக அறிவித்தனர். இந்தியாவில் இஸ்லாமிய, கிறித்துவ மதங்களைப் பின்பற்றுவோர் தவிர்த்த மக்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே அறியப்படுகின்றனர். புத்த, சீக்கிய மதங்களைப் பின்பற்றுபவர்களையும் பெரிதாக பிரித்து பார்ப்பதில்லை. இவர்களின் வழிபாட்டு முறைகளுக்கேற்ப கட்டப்பட்டகோயில்கள் பின்னாளில் ஆன்மீகச் சுற்றுப்பயணம் செய்வதற்குரியதாக மாறியது. அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வரும் கோயில்கள் பிரபலமாக மாறியது. பின் அந்தந்த கோயில்களின் நடைமுறைகளுக்கு ஏற்ப இந்த கோயிலுக்கு சென்றால் இது இது கிடைக்கும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. அப்படி உங்கள் வாழ்க்கையையே தலைகீழாக மாற்ற இந்த 5 கோயில்களுக்கும் சென்று வாருங்கள்.

நகர சிவன் கோயில்

நகர சிவன் கோயில்

நகர சிவன் கோயில், தேவகோட்டையிலுள்ள மிக அழகான கோயில்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயிலை, தேவகோட்டையின் செட்டியார் பிரிவைச் சேர்ந்த நாட்டுக்கொட்டைச் செட்டியார்கள் கட்டியுள்ளனர். அதனால், இது செட்டியார்களின் பாரம்பரிய கட்டுமான பாணியில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டதாகும். சிவபெருமான், ஒரு தங்கக் குதிரையில் இங்கு வந்து, தன் பக்தர்களை ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மீனாக்ஷி ஆகியோர் இங்கு வழிபடப்படும் பிற முக்கிய தெய்வங்களாவர். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள நகரத்தார்கள், இங்கு ஒன்றாகக் கூடி நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்குப் பின், ஸ்கந்தர் சஷ்டி விழா, சுமார் ஏழு நாட்களுக்கு இங்கு கொண்டாடப்படுகிறது. முருக பக்தர்களுக்கான இவ்விழா, முழுக்க முழுக்க ஆடம்பரமாகவும், பகட்டுடனும் கொண்டாடப்படுகின்றது. இங்கு கடந்த 60 வருடங்களாக, ஒவ்வொரு வாரமும், பக்தி சிரத்தையோடு நடத்தப்பட்டு வரும் வார வழிபாடு, இக்கோயிலின் மற்றுமொரு முக்கிய அம்சம் ஆகும்.

நைனாமலை

நைனாமலை


நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவில் இருக்கும் சிறிய மலைதான் நைனாமலை. திருமலைப்பட்டி கிராமத்திற்கு மிக அருகில் இருக்கும் இந்த மலைக்கு, சற்றே 2 கிமீ தொலைவில் இருக்கும் சேந்தமங்கலம் வழியாகவும் நீங்கள் செல்ல முடியும். இந்த நைனாமலையில் வெங்கடாஜலபதி கடவுளின் புகழ் பெற்ற கோவில் ஒன்று உள்ளது. மலையின் உச்சியில அமைந்திருக்கும் இந்த கோவிலை அடைய சுற்றுலாப் பயணிகள் கிட்டத்தட்ட 2500 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். இப்படி கடினமாக மலையேறிச் செல்ல வேண்டியிருந்தாலும் சக்தி மிக்க இந்த கடவுளை தரிசிக்க எண்ணற்ற பக்தர்கள் இங்கு கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர். சனிக்கிழமைகளில் அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் தமிழ் மாதமான புரட்டாசியில் மிக அதிகமான பக்தர்கள் கூட்டத்தை எதிர் கொள்ளும்

பா.ஜம்புலிங்கம்

நெடுங்குணம் ராமர் கோவில்

நெடுங்குணம் ராமர் கோவில்


விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோவில் இந்த நெடுங்குணம் ராமர் கோவில். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய விஷ்ணு கோவில் இதுவே. இக்கோவில் குறைந்தபட்சம் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது கட்டப்பட்ட பிறகு பல மன்னர்களால் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. ராமர் தன் கையில் வில் இல்லாமல், அமர்ந்த நிலையில் இருக்கும் சிற்பமே இந்த கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த அமர்ந்த நிலையை யோக ராமர் என்றும், அவருடைய கரம் மார்புக்கு அருகே வைக்கப்பட்டு இருப்பது ஞானமுத்திரை நிலை என்றும் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ ஆஞ்சநேயர் அல்லது அனுமான், ராமருக்கு முன்பாக அமர்ந்து, இலைகளில் எழுதப்பட்ட பிரம்மசூத்திரத்தை படித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கங்களின் தலைகள் செதுக்கப்பட்ட பீடத்தில் ராமருக்கு அருகே அவருடைய துணைவி சீதை அமர்ந்து இருக்கிறார். வேறு எங்கும் காணாத வடிவத்தில் ராமர் சிலை இங்கு அமைந்து இருப்பதால், பக்தர்களை கவரும் முக்கிய இடமாக இது இருக்கிறது.

Raji.srinivas

நாகநாதசுவாமி

நாகநாதசுவாமி

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்பது நவக்கிரககோவில்களில் திருநாகேஸ்வரம் கோவிலும் ஒன்றாகும். கும்பகோணத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள திருநாகேஸ்வரத்தில் இக்கோவில் உள்ளது. சிவபெருமான் நாகநாதசுவாமி என்னும் பெயருடன் குஜாம்பிகா என்னும் பெயருடன் கூடிய தனது பார்வதிதேவியுடன் இங்கு அருள்பாலிக்கிறார். கூடவே லட்சுமிதேவியும் , சரஸ்வதி தேவியும் இங்கு உறைகின்றனர். அவர்களுக்கும் இங்கு கோவில்கள் உண்டு. நாகக்கன்னி மற்றும் நாகவல்லி என்னும் இரு தேவியருடன் காட்சி அளிக்கும் ராகு பகவானையும் இங்கு தரிசிக்கலாம். தனது சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கு ராகுபகவான் இக்கோவிலில் உள்ள சிவபெருமானைப் பூசித்தாராம். மற்ற கோவில்களில் ராகு பகவான் நாக உருவத்தில் காட்சி அளிக்கும் பொழுது இக்கோவிலில் மட்டும் அவர் மனித முகத்துடன் தோன்றுவது சிறப்பாகும். கோவிலுக்குள் சில மண்டபங்களும், உயரமான கோபுரங்களும்,பெரிய பிரகாரமும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலானது கோட்டைச் சுவர்களைப்போல் அமைந்துள்ளன. வெளிப்பிரகாரத்தை ஒட்டி கோபுரங்கள் அமைந்துள்ளன. தென்மேற்குப்பகுதியில் ராகுபகவானின் சிலை உள்ளது. கோவிலின் தென்பகுதியில், நான்கு மண்டபங்களால் சூழப்பட்ட திருக்குளம் இருக்கிறது. இது தேரின் அமைப்பில் கட்டப்பட்ட 100 தூண்களைக் கொண்ட மண்டபத்தால் சூழப்பட்டுள்ளது. கோவிலானது சோழர் கால கட்டடக் கலையுடன் கட்டப்பட்டுள்ளது. ராகு காலத்தில் தினந்தோறும் ராகுவுக்கு பாலாபிஷேகம் நடைபெறும். பாலாபிஷேகத்தின்போது, பாலானது ராகுவின் மேல் பட்டு வழியும் போது அது நீல நிறமாக மாறுவதை அனைவரும் கண்டு அதிசயிக்கலாம்.

Ssriram mt

நடத்ரீஸ்வரர் கோவில்

நடத்ரீஸ்வரர் கோவில்

நடத்ரீஸ்வரர் கோவில், தமிழ் நாட்டின் ஈரோடு நகரத்திலிருக்கும் பிரபலமான கோவிலாகும். சிவபெருமானை முக்கிய கடவுளாக கொண்டு காவிரி நதிக்கரையில் இந்த கோவில் அமைந்திருப்பதால் இது மிகவும் புனிதமான தலமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழையும் ஒவ்வொருவருமே தெய்வீக உணர்வைப் பெறுவார்கள். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறை உடைய இந்த கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இங்கிருக்கும் கடவுள் அகத்தீஸ்வரரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தென்னிந்திய கட்டிடக்கலையின் அம்சங்களை ஒருங்கே காட்டுவதாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வந்து ஏதேனும் ஆசையை, கோரிக்கையை வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறிவிடும் என்பது உள்ளூர் மக்கள் நம்பிக்கை. மேலும் இந்த கோவில், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வர விரும்புபவர்கள் குறையற்ற வகையில் இங்கு இயக்கப்படும் பேருந்துகளைப் பயன்படுத்தி எளிதில் அடையலாம். ஆற்றின் வழியாகவும் இந்த கோவிலுக்கு வர முடியும்.

wikipedia.org

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்