» »ஒருமுறை வேண்டினால் போதும் இவை அனைத்தும் வீடு வந்து சேரும்

ஒருமுறை வேண்டினால் போதும் இவை அனைத்தும் வீடு வந்து சேரும்

Written By:

மனிதர்களுக்கு தேவையானவை என்றால் எதைக் கூறுவீர்கள். உணவு உடை இருப்பிடம். அத்துடன் பணமும். அப்போது கல்வி. ஆமாம் அதுவும் சேர்த்துதான். கல்வியும் கற்று அதிலிருந்து செல்வமும் பெற்று அதை பாதுகாக்க வீரமில்லாமல் இருக்கமுடியுமா. அப்போது மனபலம் எனும் வீரமும் வேண்டுமல்லவா. தமிழகத்தின் இந்த 5 கோயில்களுக்கும் நீங்கள் சென்றால், உங்கள் ஆசைகள் நிச்சயம் நிறைவேறுமாம். அப்படி வேண்டியதை தரும் கோயில்கள் எவையெல்லாம் தெரியுமா?

நடத்ரீஸ்வரர் கோவில்

நடத்ரீஸ்வரர் கோவில்


நடத்ரீஸ்வரர் கோவில், தமிழ் நாட்டின் ஈரோடு நகரத்திலிருக்கும் பிரபலமான கோவிலாகும். சிவபெருமானை முக்கிய கடவுளாக கொண்டு காவிரி நதிக்கரையில் இந்த கோவில் அமைந்திருப்பதால் இது மிகவும் புனிதமான தலமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள் நுழையும் ஒவ்வொருவருமே தெய்வீக உணர்வைப் பெறுவார்கள். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறை உடைய இந்த கோவில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இங்கிருக்கும் கடவுள் அகத்தீஸ்வரரர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். தென்னிந்திய கட்டிடக்கலையின் அம்சங்களை ஒருங்கே காட்டுவதாக இந்த கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு வந்து ஏதேனும் ஆசையை, கோரிக்கையை வைத்தால் அது கண்டிப்பாக நிறைவேறிவிடும் என்பது உள்ளூர் மக்கள் நம்பிக்கை. மேலும் இந்த கோவில், மாநிலத்தின் பிற பகுதிகளுடன் மிகவும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வர விரும்புபவர்கள் குறையற்ற வகையில் இங்கு இயக்கப்படும் பேருந்துகளைப் பயன்படுத்தி எளிதில் அடையலாம். ஆற்றின் வழியாகவும் இந்த கோவிலுக்கு வர முடியும்.

திருவிழாக்கள்

ஆடிப்பெருக்கு, சித்திரை நாள், மார்கழி திருவாதிரை, கார்த்திகை கடைசி திங்கள் ஆகியன வெகு சிறப்பாக கொண்டாடப்படும் நாள்களாகும்.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

படம் : Mohan Krishnan

நகர சிவன் கோயில்

நகர சிவன் கோயில்

நகர சிவன் கோயில், தேவகோட்டையிலுள்ள மிக அழகான கோயில்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இக்கோயிலை, தேவகோட்டையின் செட்டியார் பிரிவைச் சேர்ந்த நாட்டுக்கொட்டைச் செட்டியார்கள் கட்டியுள்ளனர். அதனால், இது செட்டியார்களின் பாரம்பரிய கட்டுமான பாணியில் அமையப்பெற்றுள்ளது. இக்கோயில், சிவபெருமானுக்காகக் கட்டப்பட்டதாகும். சிவபெருமான், ஒரு தங்கக் குதிரையில் இங்கு வந்து, தன் பக்தர்களை ஆசீர்வதிப்பதாக நம்பப்படுகிறது. ஸ்ரீ சுந்தரேஸ்வரர் மற்றும் ஸ்ரீ மீனாக்ஷி ஆகியோர் இங்கு வழிபடப்படும் பிற முக்கிய தெய்வங்களாவர். ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள நகரத்தார்கள், இங்கு ஒன்றாகக் கூடி நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகைக்குப் பின், ஸ்கந்தர் சஷ்டி விழா, சுமார் ஏழு நாட்களுக்கு இங்கு கொண்டாடப்படுகிறது. முருக பக்தர்களுக்கான இவ்விழா, முழுக்க முழுக்க ஆடம்பரமாகவும், பகட்டுடனும் கொண்டாடப்படுகின்றது. இங்கு கடந்த 60 வருடங்களாக, ஒவ்வொரு வாரமும், பக்தி சிரத்தையோடு நடத்தப்பட்டு வரும் வார வழிபாடு, இக்கோயிலின் மற்றுமொரு முக்கிய அம்சம் ஆகும்

எப்படி செல்வது

காரைக்குடி ரயில் நிலையத்திலிருந்து 7 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

நடைதிறப்பு


காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

நம்பு நாயகி அம்மன் கோவில்

நம்பு நாயகி அம்மன் கோவில்

இராமேஸ்வரத்திலுள்ள நம்பு நாயகி அம்மன் கோவில் உள்ளூர்வாசிகளிடம் பெருமதிப்பு பெற்ற கோவிலாகும். இராமேஸ்வரத்தின் முக்கிய கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. இராமநாதசுவாமி கோவிலில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ன இக்கோவிலை எளிதில் அடையலாம். ஸ்ரீ இராமருக்கான இந்த கோவிலுக்கு, ஒவ்வொரு வருடமும் நிகழும் தசரா திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 14-வது நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவிலை, இராமநாதபுரத்தை சேர்ந்த உள்ளூர்வாசிகளே கட்டியுள்ளனர். எனவே தான், இந்த கோவில் இராமேஸ்வரம் நகரத்திலிருந்து சற்று வெளியே உள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதி மிகவும் நன்றாக வைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலை சுற்றியுள்ள மரங்களின் நிழல்களில் சுற்றுலாப் பயணிகள் இளைப்பாற முடியும். இளவேனிற்காலத்தில் பூத்துக் குலுங்கும் இந்த மரங்கள் நிறைந்த தோட்டம், வண்ணமயமான பூக்களின் படையெடுப்பிற்குள்ளாகி அற்புதமான காட்சிகளை தரும். இந்த கோவிலின் பெரிய மணிகளிலிருந்து எழும் மகிழ்ச்சியைத் தூண்டும் புனித ஒலி இந்த கோவிலுக்கு வரும் பக்தர்களின் உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்வூட்டும்.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

 நெடுங்குணம் ராமர் கோவில்

நெடுங்குணம் ராமர் கோவில்

விஷ்ணுவின் அவதாரமான ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட விஷ்ணு கோவில் இந்த நெடுங்குணம் ராமர் கோவில். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய விஷ்ணு கோவில் இதுவே. இக்கோவில் குறைந்தபட்சம் 700 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படுகின்றது. இது கட்டப்பட்ட பிறகு பல மன்னர்களால் மறுகட்டுமானம் செய்யப்பட்டது. ராமர் தன் கையில் வில் இல்லாமல், அமர்ந்த நிலையில் இருக்கும் சிற்பமே இந்த கோவிலின் சிறப்பு அம்சம் ஆகும். இந்த அமர்ந்த நிலையை யோக ராமர் என்றும், அவருடைய கரம் மார்புக்கு அருகே வைக்கப்பட்டு இருப்பது ஞானமுத்திரை நிலை என்றும் அழைக்கப்படுகின்றது. ஸ்ரீ ஆஞ்சநேயர் அல்லது அனுமான், ராமருக்கு முன்பாக அமர்ந்து, இலைகளில் எழுதப்பட்ட பிரம்மசூத்திரத்தை படித்துக்கொண்டு இருக்கிறார். சிங்கங்களின் தலைகள் செதுக்கப்பட்ட பீடத்தில் ராமருக்கு அருகே அவருடைய துணைவி சீதை அமர்ந்து இருக்கிறார். வேறு எங்கும் காணாத வடிவத்தில் ராமர் சிலை இங்கு அமைந்து இருப்பதால், பக்தர்களை கவரும் முக்கிய இடமாக இது இருக்கிறது.

நடைதிறப்பு

காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Ssriram mt

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்

அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில்

திருமணச்சேரி அருகே இருக்கும் அருள்மிகு கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. புராணத்தின்படி சிவபெருமானை மணந்துகொள்வதற்காக பார்வதி தேவி இங்கு மறுபிறப்பு மேற்கொண்டதாக நம்பப்படுகின்றது. 3.5 ஏக்கர்கள் நிலப்பரப்பில் கோவில் வளாகம் பெரிதாக அமைக்கப்பட்டு இருக்கின்றது. காலை 6 மணி முதல் மதிய 12 மணி வரை, பின்னர் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோவிலில் வழிபடலாம். வாழ்க்கை துணை கிடைக்காதவர்கள் அடிக்கடி வந்து போகும் ஒரு இடமாக இக்கோவில் திகழ்கின்றது. சிவபெருமான் நடராஜராக இருக்கும் ஒரு ஸ்தலமும், தக்‌ஷணாமூர்த்தி, பிரம்மா தேவன், சுவாமி லிங்கோத்பவார் மற்றும் துர்க்கா தேவி ஆகியோருக்கும் ஒவ்வொரு ஸ்தலங்களும் இருக்கின்றன. வரதராஜ ஸ்வாமிகளின் துணைவியரான பூ தேவியும், ஸ்ரீ தேவியும் வரதராஜ ஸ்வாமிகளோடு இந்த சந்நிதியில் வழிபடப்படுகின்றார்கள். இக்கோவிலுக்கு திருவிழாக்காலங்களில் வருகை தருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். கார்த்திகை தீபம், நவராத்திரி, ருத்ர தரிசனம் மற்றும் திருக்கல்யாணம் ஆகியவை இக்கோவிலில் கொண்டாடப்படும் விசேஷித்த பண்டிகைகள் ஆகும்.


நடைதிறப்பு

காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

படம் : கி. கார்த்திகேயன்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்