» »தமிழ்நாடு ஏன் எல்லோருக்கும் புடிக்குது ?

தமிழ்நாடு ஏன் எல்லோருக்கும் புடிக்குது ?

Written By: Staff

புகழ்பெற்ற எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் இந்தியாவைப் பற்றி ஒரே வரியில் அழகாக சொன்னார் - இந்தியாவில் மட்டும் நீங்கள் போரடித்து சாக முடியாது என்று.

மிகச் சரி இல்லையா. எத்தனை விதமான மக்கள், மதங்கள், பழக்க வழக்கங்கள், உணவு வகைகள், மாநிலங்கள், நகரங்கள். பேருந்தில், ரயிலில், சகல இடங்களில் மக்கள் கூட்டம், பரபரப்பு. உங்கள் ஆயுசு முழுதும் சுற்றினாலும் இந்தியாவின் முழு பரிமாணத்தை காண முடியாது. அந்த அளவிற்கு பரப்பளவில், கலாச்சாரத்தில் பெரியது இந்தியா. இத்தனை இருந்தும், இந்தியா சுற்றுலா துறையில் 52'ஆவது இடத்தில்தான் இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதற்குள் போக வேண்டாம். நம் கேள்வி, இந்தியாவில் எந்த மாநிலம் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது ?

ஒரு நொடி ஊகியுங்கள்!!

கடவுளின் தேசமான கேரளாவா ? காஷ்மீரா ? டெல்லியா ?

இல்லை நம் தமிழ் நாடுதான்!

சென்னை மெரினா கடற்கரை

சென்னை மெரினா கடற்கரை

Photo Courtesy :KARTY JazZ

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Photo Courtesy :எஸ்ஸார்

கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

கங்கைகொண்ட சோழபுரம் கோவில்

Photo Courtesy :Ssriraman

ஊட்டி ரயில்

ஊட்டி ரயில்

Photo Courtesy :Wikipedia

ராமேஸ்வரம்- பாம்பன் தீவு

ராமேஸ்வரம்- பாம்பன் தீவு

Photo Courtesy :KARTY JazZ

கொடைக்கானல்

கொடைக்கானல்

Photo Courtesy :Marcus334

ஏர்காடு ஏரி

ஏர்காடு ஏரி

Photo Courtesy : Riju K

குற்றாலம் மெயின் அருவி

குற்றாலம் மெயின் அருவி

Photo Courtesy :Mdsuhail

ஹொக்கனேக்கல் நீர்வீழ்ச்சி

ஹொக்கனேக்கல் நீர்வீழ்ச்சி

Photo Courtesy : Mithun Kundu

சிதம்பரம் நடராஜர் கோவில்

சிதம்பரம் நடராஜர் கோவில்

Photo Courtesy :Raghavendran

பிச்சாவரம் காடுகள்

பிச்சாவரம் காடுகள்

Photo Courtesy :KARTY JazZ

வேலூர் கோட்டை

வேலூர் கோட்டை

Photo Courtesy :Fahad Faisal

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Photo Courtesy : Wikipedia

திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை

Photo Courtesy :Ravivg5

ஆயிரங் கால் மண்டபம்

ஆயிரங் கால் மண்டபம்

Photo Courtesy :Rengeshb

ஒரு தமிழராக பெருமைப்படத்தக்க விஷயம், சுற்றுலா துறையில் தமிழ் நாடுதான் அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. வெறும் உள் நாட்டு சுற்றுலா பயண்கள் மட்டுமல்ல, அதிக அளவில் வெளிநாட்டினர் விரும்பி வரும் இடமும் தமிழ் நாடுதான்.

மற்ற மாநிலங்களைவிட ஏன் தமிழ் நாட்டிற்கு வர எல்லோரும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் ? இதற்கு சோழர்களுக்குத் தான் நம் நன்றி சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள கோவிலின் கட்டுமானம் உள்ளூர் முதல் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வரை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. அதுமட்டுமல்ல, பழங்கால கோட்டைகள், கோவில்கள், நீர் வீழ்ச்சிகள், மலை வாசஸ்தங்கள், ஊட்டி ரயில், ஆறுகள், கடல்கள், காடுகள் என்று அனைத்தும் ஒருங்கே கொண்ட மாநிலம் தமிழகம்.

Read more about: tamilnadu, tourism