Search
  • Follow NativePlanet
Share
» »நாக தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்! இன்றே செல்லுங்கள்!

நாக தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்! இன்றே செல்லுங்கள்!

நாக தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்! இன்றே செல்லுங்கள்!

பலருக்கும் இந்த நாக தோஷம் என்னும் சர்ப்ப தோஷம் குறித்த சந்தேகம் கொண்டுள்ளனர். இவ்வாறான தோஷம் கொண்டவர்களுக்கு தொடர்ந்து திருமணம் தடைபட்டுக் கொண்டே வரும், திருமணம் ஆகியும் குழந்தை பிறக்க தாமதமாகும்.

ஆனால் இதற்கான சரியான பரிகாரம் என்னவென்று அறியாமல் பலரும் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பர். நீங்களும் இதுபோன்ற தோஷத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால் உடனே இத்தலத்திற்கு சென்று பரிகாரம் செய்து வாருங்கள்.

காளஹஸ்தி

காளஹஸ்தி

சென்னையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது காளஹஸ்தி திருத்தலம். காளத்தி வேடனான கண்ணப்ப நாயனார் முக்தி பெற்ற இடமாக இது கருதப்படுகிறது. இத்தலத்தில் காளத்திநாதர் நாகலிங்க வடிவில் அருள்பாலிப்பது தல சிறப்பாக உள்ளது. இறைவன் நாக வடிவமாகக் காட்சி தருவதால், இது ராகு, கேது பரிகாரத்தலமாகவும் திகழ்கிறது.

Kalyan Kumar

தினமும் பரிகாரம்

தினமும் பரிகாரம்

அன்றாடம் இத்தலத்தில் ராகு காலத்தின் போது தோஷ பரிகார பூஜை நடைபெறுகிறது. இக்கோவிலின் ஒரு பகுதியில் உள்ள ராகு, கேது சாந்தி நிலைய மண்டபத்தில் இந்த பூஜை நடத்தப்படுகிறது. மண்டபத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து பரிகார பூஜை செய்யலாம். இது மட்டுமின்றி, கோவிலின் உள்ளேயே மற்றுமொரு பரிகார பூஜையும் நடத்தப்படுகிறது. இதில், மாங்கல்ய தோஷம், சர்ப்ப தோஷம், ராகு, கேது தசாபுக்தி நடப்பவர்கள் இப்பூஜையில் கலந்து கொள்ளலாம்.

Rajachandraa

திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம்

நாக தோஷத்திற்கு ஏற்ற மிகச் சிறந்த பரிகாரத்தலமாகத் திகழ்வது திருநாகேஸ்வரம். கும்பகோணத்திற்கு கிழக்கே காரைக்கால் செல்லும் வழியில் இத்தலம் உள்ளது. மிகப் பெரிய கோவிலான நாகேசுவரம் கோவிலில் நாற்திசைக் கோபுரங்களும், மண்டபங்களும், அரிய சிற்பங்களும் காணப்படுகின்றன. குறிப்பாக, சந்நிதி நிறைந்த கூட்டம் கால சர்ப்பதோஷம், நாக தோஷம், ராகுதசை, இராகுபுத்தி இவற்றினால் முன்னேற்றம் காண இயலாதவர், இத்தலத்தில் ராகுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து சாந்தி பெற தினமும் இங்கு திரள்கிறார்கள்.

Ssriram mt

நாகநாதமூர்த்தி

நாகநாதமூர்த்தி

இத்தல கருவறையில் சண்பகாரணி மூலவராக வீற்றுள்ளார். இவரே நாகநாதமூர்த்தி என்ற பெயரிலும் மூர்த்தி கரகமாக அருள்பாலிக்கிறார். ஐந்து தலை பாம்பு வழிபட்ட மூர்த்தி ஆதலினாலே நாகநாதர் என்ற பெயரையே சிறக்கத் தாங்கியருளுகிறார். இத்தலத்தில் பரிகாரம் செய்ய நாக தோஷம் உடனே விலகிவிடும்.

Shanmuga67

திருப்பாம்புரம்

திருப்பாம்புரம்

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் திருபாம் புரம் பாம்பு புரேஸ்வர் ஆலயம் உள்ளது. திருப்பாம்பரம் ராகு - கேது நிவர்த்தி தலமாகும். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது தல நம்பிக்கை.

Aravind Sivaraj

வழிபாடுகள்

வழிபாடுகள்

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8-ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

Ssriram mt

கீழ்ப்பெரும்பள்ளம்

கீழ்ப்பெரும்பள்ளம்

கேதுவுக்கான பரிகார தலத்தமாக நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி வட்டத்தில் கீழ்ப்பெரும் பள்ளம் என்ற இடத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயம். கோவிலின் முன்பு நாகத் தீர்த்தம் அமைந்துள்ளது. அதன் கீழ்க்கரையிலும், மேல்கரையிலும் அரசும் வேம்பும் உள்ளது. நாகதோஷ முள்ளவர்கள் இம்மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்யலாம். கோவிலைச் சுற்றி உயரமான மதில்கள் உள்ளன.

எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி

நாகதோஷ வழிபாடு

நாகதோஷ வழிபாடு

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயத்தில் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மருந்தாக வழிபடப்படுகிறது. வீடுகளில் விஷ பூச்சிகள் வராமல் இருக்க வெள்ளியினாலான பாம்பு, தேள் போன்ற உருவங்களை உண்டியலில் செலுத்துகிறார்கள். இவ்வாறு செலுத்தினால் நாகதோஷம் நீங்கப்பெறுவர்.

Rsmn

திருவேற்காடு தேவி ஸ்ரீகருமாரி அம்மன்

திருவேற்காடு தேவி ஸ்ரீகருமாரி அம்மன்

சென்னையில் இருந்து பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில், வேலப்பன் சாவடி என்ற இடத்திற்கு அருகே திருவேற்காடு பகுதியில் உள்ளது தேவி ஸ்ரீகருமாரி அம்மன் திருத்லம். இங்கு தேவி ஸ்ரீகருமாரி அம்மன் இரண்டு வடிவம் கொண்டு பக்தர்களை காக்க எழுந்தருளியுள்ளாள். ஓர் உருவத்தில் நாகப்பாம்பாக தோற்றம் அளித்து காக்கின்றாள். இரண்டாவது உருவத்தில், அம்பிகையாக- சுயம்புவாக அழகிய உருக்கொண்டு, நம்பும் பக்தர்களை பரிவுடன் காக்க தோன்றியுள்ளாள்.

thiruverkadukarumari

 நாகபுற்று வழிபாடு

நாகபுற்று வழிபாடு

கருமாரி அம்மன் ஆலயத்தின் அருகிலேயே கரு நாகப்புற்று ஒன்றும் உள்ளது. பக்தர்கள் இந்தப் புற்றில் பால் ஊற்றி வழிபடுகின்றனர். அம்பிகை நாகரூபமாக இருப்பதாலும், புற்று வழிபாடு இருப்பதாலும் ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்கு தங்களது தோஷம் நீங்க வழிபடலாம்.

thiruverkadukarumari

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+