Search
  • Follow NativePlanet
Share
» »காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!

காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!

காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!

By Udhay

ஆன்மீகத்தில் எள்ளளவும் நாட்டமில்லா மனங்களையும் கசிந்துருக வைக்கும் மாய அதிர்வுகளுடனும், எழிற்காட்சிகளுடனும் இந்த காளஹஸ்தி நகரம் பக்தர்கள் மற்றும் பயணிகளை வரவேற்கிறது. ஸ்ரீஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், பரத்வாஜ தீர்த்தம், காளஹஸ்தி கோயில் மற்றும் ஸ்ரீ துர்க்கா கோயில் என்பவை இந்த ஸ்தலத்திலுள்ள குறிப்பிடத்தக்க கோயில்களாகும். விஜயம் செய்ய உகந்த பருவம் காளஹஸ்தி பகுதி வெப்பமான மற்றும் வறட்சியான சீதோஷ்ணநிலையை பெற்றுள்ளது. எனவே கோடைக்காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்ப்பது உத்தமம். எப்படி செல்வது நல்ல போக்குவரத்து வசதிகளை கொண்டுள்ள காளஹஸ்தி நகரத்துக்கு ரயில் அல்லது சாலை மார்க்கமாக சுலபமாக சென்றடையலாம். அமைதி மற்றும் தெய்வீகச்சூழலுடன் தனித்தன்மையான கோயில்கள் நிரம்பி காட்சியளிக்கும் இந்த ஸ்ரீ காளஹஸ்தி நகரம் மனச்சாந்தியை தேடி பயணிக்க விரும்புபவர்களுக்கு மிகவும் ஏற்ற ஸ்தலமாகும்.

காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!

wiki

ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த சஹஸ்ர லிங்க கோயில் நாடெங்கிலுமிருந்து பக்தர்களையும் யாத்ரீகர்களையும் ஈர்க்கிறது. இந்த கோயிலின் பின்னணியில் பல புராணிக ஐதீகக்கதைகள் வழங்கப்பட்டு வருகின்றன. காளஹஸ்தி நகரத்தின் மிக முக்கியமான கோயில்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையையும் இந்த சஹஸ்ர லிங்க கோயில் பெற்றுள்ளது. ஒரு காட்டுப்பகுதியின் நடுவே அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு பின்னால் ஒரு அழகான மலையும் காட்சியளிக்கிறது. கோயிலைச்சுற்றிலும் காணப்படும் இயற்கை எழில் அம்சங்களை ரசிப்பதற்காக ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். சஹஸ்ர எனும் சொல்லுக்கு ஆயிரம் என்பது பொருளாகும். இங்குள்ள சிவலிங்கத்தில் ஆயிரம் லிங்க வடிவமைப்புகள் பொதிக்கப்பட்டிருப்பதால் இதற்கு சஹஸ்ர லிங்க கோயில் எனும் பெயர் ஏற்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு விஜயம் செய்து பூஜித்தால், இப்பிறவியில் மட்டுமல்லாது முற்பிறவியிலும் ஒருவர் சுமந்த பாபங்கள் கழுவப்படும் என்பது ஐதீகம்.

காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!

wiki

ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த துர்காம்பிகா கோயில் துர்க்காம்பிகைக்கான மிகப்பழமையான கோயிலாகும். பெரும்பாலான பெண் தெய்வங்கள் மலையில் வீற்றிருப்பது போல இந்த கோயிலும் ஒரு மலையின் மீது அமைந்துள்ளது. காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு வடக்கே கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரத்தில் ஒரு மலையின்மீது இந்த கோயில் அமைந்துள்ளது. இயற்கை எழிற்காட்சிகள் நிறைந்த இடம் என்பதால் இந்த கோயில் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளால் விரும்பி விஜயம் செய்யப்படுகிறது. அகலமான படிக்கட்டுகள் இம்மலைக்கோயிலின் அடிவாரத்திலிருந்து உச்சி நோக்கி செல்லுமாறு அமைக்கப்பட்டுள்ளன. ஆக்க சக்தியின் ரூபமாக கருதப்படும் இந்த துர்க்காம்பிகை பெண்தெய்வம் உள்ளூர் பக்தர்களால் பெரிதும் பூஜிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பயணிகள் மற்றும் பக்தர்கள் இந்த மலைக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர்.

காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!

wiki

காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோயில் தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று எனும் புகழைக்கொண்டுள்ளது. உண்மையில் இது ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் கோயிலின் ஒரு அங்கமேயாகும். இங்கு குடி கொண்டிருக்கும் வரதராஜ ஸ்வாமியை வணங்க ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் இங்கு விஜயம் செய்கின்றனர். சமீபத்தில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றபோது இந்த கோயில் அனைவரது கவனத்தையும் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. அதாவது புதுப்பிப்பு பணிகள் நடைபெற்றபோது இங்கிருந்த ஒரு அறையில் ஒரு பெரிய மரக்கதவு கண்டறிப்பட்டது. இந்த கதவைத்திறந்து பார்த்தபோது உள்ளிருந்த இருட்டறைக்குள் பல விலை மதிக்கமுடியாத அரும்பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இப்படி புதையல் கண்டெடுக்கப்பட்ட தகவல் காட்டுத்தீ போன்று பரவவே பொக்கிஷங்களை பார்க்கும் ஆர்வத்தில் பக்தர்கள் கோயிலை முற்றுகை இட்டனர். இருப்பினும் புதையலைப்பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

காளகஸ்தியில் என்னென்ன கோவில்களெல்லாம் இருக்கு பாருங்க!

wiki

ஸ்ரீ காளஹஸ்தி நகரத்தில் உள்ள இந்த சதுர்முகேஸ்வரா கோயில் சிவன் மற்றும் பிரம்மா ஆகிய இருவருக்கும் அமைக்கப்பட்டுள்ள கோயிலாகும். இந்த இரு கடவுளர்கள் குறித்த ஒரு புராணக்கதைக்காக பெயர் பெற்றுள்ள இந்த கோயில் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயமாகும். புராணிக ஐதீகக்கதைகளின்படி, பிரம்மாவின் ஆக்கும் சக்தியை மரத்துப்போக வைத்திருந்த சில பாவங்களை போக்கிக்கொள்ள இந்த ஸ்தலத்தில் அவர் கடும் தவம் இருந்ததாகவும், இறுதியில் சிவபெருமான் பிரம்மாவின் பாவங்களை போக்கி அருளியபின் பிரம்மா தனது உயிர்ப்படைப்பு தொழிலை தொடர்ந்தார் என்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த கோயிலின் சிறப்பம்சமாக இங்குள்ள சிவலிங்கத்தில் நான்கு முகங்கள் நான்கு திசைகளையும் நோக்கியவாறு உள்ளன. சதுர்முகம் என்பதற்கு நான்கு முகங்கள் என்பது பொருளாகும். சைவ மார்க்கத்தில் பற்றுடையவர்கள் ஒவ்வொரு வருடமும் இந்த கோயிலுக்கு வருகை தருவதை வழக்காமாக கொண்டுள்ளனர். இந்த கோயிலின் சுவர்களின் சிவபெருமான் சம்பந்தப்பட்ட புராணச்சம்பவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

More News

    Read more about: travel andra
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+