Search
  • Follow NativePlanet
Share
» »காஷ்மீரின் இந்த விசயங்கள் பற்றி தெரியுமா?

காஷ்மீரின் இந்த விசயங்கள் பற்றி தெரியுமா?

By Udhaya

இமயமலையின் அடி வாரத்தில் வீற்றிருக்கும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அழகிற்காக உலகம் முழுவதும் புகழ்பெற்றது. காஷ்மீர் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் ஜம்மு ஆகிய மூன்று முக்கிய பகுதிகளைக் கொண்டது இந்த மாநிலம். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாவுக்காகவும், ஆன்மீகத்துக்காகவும் மக்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். பிரம்மாண்டமான மலைத் தொடர்கள், பளிங்கு போன்ற தெளிவான ஓடைகள் கோவில்கள், பனிப்பாறைகள் மற்றும் தோட்டங்கள் ஜம்மு காஷ்மீரின் அழகிற்கு அழகு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளன. வருடம் முழுவதும் ஜம்மு காஷ்மீரை சுற்றிப் பார்க்கலாம் என்றாலும் மார்ச் முதல் அக்டோபர் வரையில் பயணப்படுவதே உகந்ததாக கருதப்படுகிறது. இம்மாதங்களில் நிலவும் மிதமான தட்பவெட்ப நிலை சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றவாறு இருக்கிறது. குளிர்கால விளையாட்டுகளில் ஆர்வமுள்ளவர்கள் பனி சூழ்ந்திருக்கும் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை இங்கு வரலாம். செப்டம்பர் முதல் மார்ச் வரை சூடான பருவநிலை நிலவுவதால் அந்த பருவமும் சுற்றிப்பார்ப்பதற்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. இங்கு நிறைய கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் இந்து, இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களும் அடக்கம் ஆகும். அவை என்னவெல்லாம் என்று இந்த பதிவில் காணலாமா?

அமர்நாத்

அமர்நாத்


ஸ்ரீநகரிலிருந்து, சுமார் 145 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அமர்நாத், இந்தியாவின் பிரதான யாத்ரீக ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து, சுமார் 4175 அடி உயரத்தில் அமைந்துள்ள இத்தலம், இந்துக்கள் வணங்கும் அழிவுக் கடவுளான சிவபெருமானின் பக்தர்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இங்கு, இயற்கையாக அமையப்பெற்றுள்ள பனியினாலான சிவலிங்கம், முக்கிய ஈர்ப்பு அம்சமாக திகழ்கிறது.

அமர்நாத் யாத்திரை, அமர்நாத் குகை, ஷேஷ்நாக் ஏரி ஆகியன இங்குள்ள முக்கிய ஸ்தலங்கள் ஆகும்.

Gktambe

அவந்திஸ்வாமி கோயில்

அவந்திஸ்வாமி கோயில்

அவந்திப்பூர், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் உள்ள முதன்மையான ஒரு சுற்றுலாத் தலமாகும். சிவன் கோயிலான சிவ-அவந்தீஷ்வரா மற்றும் விஷ்ணு கோயிலான அவந்திஸ்வாமி-விஷ்ணு, ஆகிய அதன் இரு பழமையான கோயில்களுக்கு, அவந்திப்பூர், மிகவும் பிரபலமானதாகும். இவ்விரு கோயில்களும், 9-ம் நூற்றாண்டில், அவந்திவர்மன் என்ற மன்னனால் கட்டப்பட்டுள்ளன. சிவ- அவந்தீஷ்வரா கோயில், இந்து மத நம்பிக்கைகளின் படி, அழிவுக் கடவுளாக வணகப்படும் சிவனுக்காகவும், அவந்திஸ்வாமி-விஷ்ணு கோயில், இந்துக்களின் காக்கும் கடவுளான விஷ்ணுவுக்காகவும் கட்டப்பட்டுள்ளன. இக்கோயில்களின் கட்டுமானத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாணிகள், கிரேக்க பாணியை ஒத்துள்ளன. இந்த யாத்ரீகத் தலங்கள், தற்போது, சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றன. சிவ-அவந்தீஷ்வரா கோயில், இவ்விடத்தை ஆண்ட, "புத்ஷிகன்" என்றும் அழைக்கப்படும் சிக்கந்தர் சுல்தானால், ஒரு முறை, தாக்கப்பட்டுள்ளது.

Magentic Manifestations

ஸ்ரீ நகர்

ஸ்ரீ நகர்

ஸ்ரீ நகரில் காணப்படும் சில மசூதிகளும், கோவில்களும் 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானவையாகும். சுங்கராச்சார்யா கோவில் மற்றும் ஜியேஸ்தேஸ்வரா கோவில் ஆகியவை இந்த நகரத்தின் மிகப் பிரபலமான கோவில்களாகும். ஜாமா மசூதி, ஹஸ்ரத்பல் மசூதி மற்றும் அகுந்த் முல்லா மசூதி ஆகியவை பரவலாக அறியப்பட்ட மற்றும் முதன்மையான சுற்றலா தலங்களாகும். உலகம் முழுவதுமிருந்து பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் முகலாய தோட்டங்களான நிஷாத் பூங்கா, ஷாலிமார் பூங்கா, அச்சாபல் பூங்கா, சஸ்மா சாஹி மற்றும் பாரி மஹால் ஆகியவையும் இந்நகரத்தில் இருக்கின்றன. இந்நகரத்தின் இயற்கை எழிலுக்கு மெருகூட்டுவதாக இந்த முகல் தோட்டங்கள் விளங்குகின்றன.

Akshey25

வைஷ்ணவ தேவி கோவில்

வைஷ்ணவ தேவி கோவில்

வைஷ்ணவ தேவி கோவில் ஒரு குகைகோவிலாகும். இது இந்து மத தாய் கடவுள் வைஷ்ணவ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலின் முக்கிய ஈர்ப்பானது வைஷ்ணவ தேவியின் மூன்று அவதாரங்களை, சித்தரிக்கும் சிலைகள் உள்ளன; அதாவது மகாகாளி, நேரம் மற்றும் இறப்பின் இந்து கடவுள், மகா சரஸ்வதி, இந்துக்களின் அறிவு கடவுள் மற்றும் மகாலட்சுமி, இந்துக்களின் செல்வம் மற்றும் அதிர்ட்ஷ்ட கடவுள்.

ஜம்முவிற்கு வருகை தர திட்டமிடும் சுற்றுலா பயணிகள் வைஷ்ணவ தேவி கோவில், ரகுநாத் கோயில், முபாரக் மண்டி அரண்மனை, மான்சர் ஏரி, பஹு கோட்டை, மற்றும் அமர் மஹால் போன்ற இடங்களை தவறவிட்டுவிட கூடாது.

Deepak

ஹஸ்ரத் கங்கா பாபா ரிஷி கோவில்

ஹஸ்ரத் கங்கா பாபா ரிஷி கோவில்

போஷ்கர் கிராமத்தில் பாலாபோரா என்ற இடத்தில் அமைந்துள்ள ஹஸ்ரத் கங்கா பாபா ரிஷி கோவில் புத்காம் மாவட்ட கல்லறைகள் மத்தியில் பிரசித்து பெற்றதாக உள்ளது. இந்த கோவில் பாபா ரிஷிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. இவர் 360 மசூதிகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான மதகுகளை கட்டியவர் என்று நம்பப்படுகிறது. இவர் மாரஸில் இருந்து இடம்பெயர்ந்த பிறகு பாலாபோராவில் தங்கியிருந்தார். உள்ளூர் வாசிகளின் கூற்றுபடி அவரின் வாழ் நாளில் சுமார் ஆயிரத்திற்கு அதிகமான மரக்கன்றுகளை நட்டார் என்று அறியப்படுகிறது. அவற்றில் ஒன்று பெரிய மரமாக சுமார் 40 மீ அகலம் கொண்டதாக வளர்ந்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் பிரார்த்தனை செய்வதற்காக அதிக எண்ணிக்கையில் இந்த திருத்தலத்திற்கு வந்து செல்கின்றனர்.

wiki

Read more about: travel temple summer
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X