Search
  • Follow NativePlanet
Share
» »வைகாசியில் இந்த ராசிக்காரங்க லட்சாதிபதி ஆனியில அந்த ராசிக்காரங்க குரோர்பதி

வைகாசியில் இந்த ராசிக்காரங்க லட்சாதிபதி ஆனியில அந்த ராசிக்காரங்க குரோர்பதி

வளம் தரும் வைகாசி அள்ளித் தரும் ஆனினு நிறைய நன்மைகளும் தீமைகளும் ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கு வந்தாலுமே... வைகாசி முடியுற தருவாயில இந்த மூனு ராசிக்காரங்களுக்கு அள்ள அள்ள குறையாத வளமும், ஆனியில செழிக்க ச

By Udhaya

வளம் தரும் வைகாசி அள்ளித் தரும் ஆனினு நிறைய நன்மைகளும் தீமைகளும் ஒவ்வொரு ராசிக்காரங்களுக்கு வந்தாலுமே... வைகாசி முடியுற தருவாயில இந்த மூனு ராசிக்காரங்களுக்கு அள்ள அள்ள குறையாத வளமும், ஆனியில செழிக்க செழிக்க செல்வமும் கிடைக்கப்போகுது. இது கால நிலைய பொறுத்து மாறுபடும். விவசாயம் செழிக்கும். சாதுர்யமான முடிவுகள் கிடைக்கும். ஆனா ஒன்னு.... இதெல்லாம் நிகழணும்னா நீங்க கீழ்காணும் கோயில்களுக்கு போயிட்டு வரணும். இங்க குறிப்பிடுற கோயில்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையானவை மட்டுமல்லாது நம் முன்னோர்கள் தங்கள் அறிவியலால் ஆராய்ந்து கட்டிய கோயில்களாகும். இந்த கோயில்களுக்கெல்லாம் ஒரு தரிசனம் போயிட்டு வாங்க. அப்றம் உங்க வாழ்க்கையே வசந்தமா மாறிடறத உணருவீங்க.

அருள்மிகு சாரங்கபாணிநாதர் ஆலயம்

அருள்மிகு சாரங்கபாணிநாதர் ஆலயம்

108 திவ்ய தேசங்கள் எனப் படும் 108 வைணவ ஆலயங்களில் ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயமும் ஒன்று. 12 ஆழ்வார்கள் தமது பாடல்களில் இக்கோவிலைப் பற்றியும் இக்கோவிலில் உள்ள பெருமாளைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளனர். இக்கோவில் மிகப்பழமையானதோடு மட்டுமல்லாமல், தென்னிந்தியாவிலேயே உள்ள மகாவிஷ்ணுவின் ஒரே ஆலயம் இதுவாகும். ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் இதன் ஆன்மீக முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ளது. 147 அடி உயரமுள்ள மிகப் பிரம்மாண்டமான இராஜ கோபுரத்துடன் இக்கோவில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறது. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மகாவிஷ்ணுவின் சிலையானது ஆதிசேஷன் தலைமீது படம் எடுத்துக் கொண்டு நிற்க, பெருமாளானவர் ஒரு ரதத்தின் மீது அனந்தசயன நிலையில் இருப்பதுபோன்ற சிலையாகும். இங்குள்ள தாயாரின் பெயர் கோமளவல்லித் தாயாராகும்.

Adam63

எப்படி செல்வது

எப்படி செல்வது

தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாரங்கபாணிநாதர் ஆலயம் ஒரு பெருமாள் கோவிலாகும். கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்திற்கும் குறைவான தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது . எனவே கும்பகோணம் இரயில்வே நிலையத்திலிருந்து பேருந்து மூலமாகவோ, ஆட்டோ மூலமாகவோ இக்கோவிலை சென்றடையலாம்.

Ssriram mt

ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில்

ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில்

இந்த மேதா தட்சிணாமூர்த்தி கோவிலில் உள்ள சிலை நந்தி தேவரின் மேல் யோகாசனம் செய்யும் நிலையில் ஒருவர் அமர்ந்திருப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையின் வலது கை ஞான முத்திரையையும், இடது கை ஒரு புத்தகத்தை ஏந்தியபடியும் உள்ளது. இந்த கோவிலின் வரலாறு நீங்கலாக, இதன் சுற்றுப்புறமும் பார்வையாளர்களை கவரும் எழிலுடையதாக உள்ளது. வாரி வழங்கும் கொடையுள்ளமுடைய வள்ளலார் என்றழைக்கப்படும் ஸ்ரீ வதனீஸ்வரர் உள்ள ரிஷப மண்டபத்தில், அவருடன் ஞானாம்பிகையும் உள்ளார். இந்த கோவில் வளாகத்தில் இருந்தவாறு தெரியும் காவிரி நதியின் இயற்கையழகு பார்ப்பவர்களுக்கு இயற்கையின் மீது மரியாதையை அதிகப்படுத்தும்.

Ssriram mt

மேதா தட்சிணாமூர்த்தி

மேதா தட்சிணாமூர்த்தி

காவிரி நதியின் வடக்கு கரையில் அமைந்துள்ள ஸ்ரீ வதனீஸ்வரர் கோவில் பரவலாக வள்ளலார் கோவில் என்று அழைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கான இந்த கோவிலுடன் ஒரு புராண கதையும் தொடர்பு பெற்றுள்ளது. ஒரு முறை சிவபெருமானின் முதல்வரான நந்தி தேவர் தன்னுடைய வலிமையைப் பற்றி கர்வப்பட்டார். அவருக்கு பாடம் புகட்ட நினைத்த சிவபெருமான் அவரது தலையில் ஒரு முடியை வைத்து விட்டார். இந்த முடியின் எடை தாங்க முடியாமல் திண்டாடிய நந்தி தேவர் தனது தவறை உணர்ந்தார்.

விஜயகிருஷ்ணன்

கோதண்டபாணிராமர் திருக்கோயில்

கோதண்டபாணிராமர் திருக்கோயில்


திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட இக்கோயிலில், ராமரின் கதையை எடுத்துக்கூறும் வகையில் அமைக்கப்பெற்ற மிகப்பெரும் சிலைகள் பல உள்ளன. இக்கோயிலுக்கு வந்தால், அது அயோத்திக்குச் சென்று வந்ததற்கு ஈடாகும். ராவணனைத் தோற்கடித்தபின், ராமன், சீதை, லஷ்மணன், ஹனுமான் மற்றும் அவர்தம் படைவீரர்கள் தங்கிச் சென்ற இடத்திலேயே இக்கோயில் எழுப்பபட்டுள்ளது என்று சான்றோர் கூறுகின்றனர். அயோத்திக்கு சரியான நேரத்தில் செல்லமுடியாததால் ராமனின் முடிசூட்டுவிழா இவ்விடத்திலேயே நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் ராமநவமி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் இக்கோயிலில் வந்து வழிபட்டுச் சென்றால், அவர்தம் வாழ்வின் இன்னல்கள் அனைத்தும் மறைவதாக நம்பப்படுகிறது.

எங்குள்ளது

எங்குள்ளது

இக்கோயில் அயோத்தியாபட்டினத்தில் அமைந்துள்ளது. ராமரின் பாதத்தடங்கள் இங்குள்ளதால் இக்கோயிலுக்கு இந்த பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயிலின் மிகச் சிறந்த சிற்பக் கலைக்காக, இது மிகவும் போற்றப்படுகிறது. இங்குள்ள தூண்கள், தட்டினால் இசை எழுப்பக்கூடிய தனித்தன்மை வாய்ந்தவைகளாகும்.

அஷ்ட லிங்கங்கள்

அஷ்ட லிங்கங்கள்


எட்டு லிங்கங்கள் எனப்படும் அஷ்ட லிங்கங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும், ஆணைமலை அடிவாரத்தில் அமைந்து இருக்கின்றன. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், வருண லிங்கம், நிருதி லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசானிய லிங்கம் உள்ளிட்ட எட்டு லிங்கங்கள் இங்கு உள்ளன. அஷ்ட லிங்கங்கள் இருப்பதால் திருவண்ணாமலை நகரம் புனிதமும், ஆன்மீகமுமான காரியங்களை எதிரொலிக்கிறது. மகான்களையும், பக்தர்களையும் இந்த லிங்கங்கள் ஈர்க்கின்றன. இந்த லிங்கங்களுக்காக இங்கு எட்டு சன்னதிகள் இருக்கின்றன.

எங்கெங்குள்ளது

எங்கெங்குள்ளது


இந்த மலை அடிவாரத்தில் 14 கி.மீ. சுற்றளவில் இந்த சன்னதிகள் அனைத்தும் இடவெளிவிட்டு கட்டப்பட்டு இருக்கின்றன. தங்கள் வேண்டுதல்களை ஏறெடுப்பதற்காக பக்தர்கள் இந்த மலையை சுற்றி செல்கிறார்கள். ஒவ்வொரு லிங்கத்தையும் வேண்டுவதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். ஒவ்வொரு லிங்கமும் 12 சந்திர ராசிகளோடு தொடர்பு உடையனவாக கருதப்படுகின்றன. மலையை சுற்றி வந்து வழிபடும் கிரிவலத்தின் ஒரு பகுதியாக இந்த எட்டு லிங்கங்களையும் வழிபடுகிறார்கள்.

சந்திர சூடேஸ்வரர்

சந்திர சூடேஸ்வரர்

இந்த கோவில் அமைந்துள்ள உயரத்திலிருந்து ஒசூர் நகரத்தின் சுற்றுவட்டக் காட்சியையும் காண முடியும். இங்கிருக்கும் வானியல் கவனிப்பு மையத்திலிருந்து நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளி கற்களின் பயணங்களையும் காண முடியும். இந்த கவனிப்பு மையமும், கோவிலும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத உண்மைகளை தரும் இடங்களாக உள்ளன. வானியல் கவனிப்பு மையத்தில் அறிவியல் மற்றும் வானியல் ரீதியிலான உண்மைகளின் அடிப்படையிலான கணிப்புகளும், கோவிலில் ஜோதிடம் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையிலான கணிப்புகளும் நமக்கு கிடைக்கின்றன. உங்களுடைய நம்பிக்கை எதுவாக இருந்தாலும் அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரரின் அருள் உங்களுக்கு கிடைக்கும்.

Sridhartn

எப்படி செல்வது

எப்படி செல்வது

ஓசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் NH-7-ல் மலைக்குன்றுகளின் மீது அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை சந்திர சூடேஸ்வரர் திருக்கோவிலின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் யாராலும் சென்று அறியப்படாதவையாகும். இங்கு எழுப்பப்பட்டுள்ள வானியல் கவனிப்பு மையம் மற்றும் குழந்தைகள் பூங்கா ஆகியவை வழிபாடு மட்டுமல்லாமல் பொழுதுபோக்கிற்காகவும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களாக உள்ளன. தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால் இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ஒசூர் வழியாக வேறு இடங்களுக்கு செல்பவர்களாக இருப்பார்கள். இந்த கோவிலின் அமைவிடமும், அருகிலுள்ள எழில் கொஞ்சும் பூங்காவும் இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகளின் வண்டிகளை நிறுத்திச் செல்ல ஏற்ற தாக்கத்தை தருகின்றன.

Arulghsr

 அக்னீஸ்வரர்

அக்னீஸ்வரர்

சிவனும் பார்வதியும் இவ்விடத்தில் திருமணம் செய்வதை பிரம்மா தன் கனவில் கண்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்விடத்தில் அக்னீ சிவபெருமானை குறிப்பதால், அக்னீஸ்வரர் என்கிற பெயர் உருவானது. பிரம்மதேவன் வழிபட்ட பிரம்ம லிங்கம் இங்கே பாதுகாக்கப்பட்டு வருகின்றது. சிவபெருமானே இங்கு சுக்ரனாக இருப்பதாக கூறப்படுவதால், இங்கே சுக்ரனுக்கு என்று ஒரு தனிப்பட்ட சந்நிதி இல்லை. அக்னீஸ்வரர் கோவிலில் 2 பிரகாரங்கள் இருக்கின்றன. காளிகாமர் மற்றும் மனகஞ்சரரர் ஆகியவை இவ்விடத்தின் மற்ற தளங்கள் ஆகும். விஜயநகர் மற்றும் சோழர் காலத்தில் செதுக்கப்பட்ட கல்வெட்டுகளையும், சிவகாமி மற்றும் நடராஜர் சிலைகளையும் இக்கோவிலில் காணலாம். நடராஜர் சபாவை முக்தி மண்டபம் என்று அழைப்பார்கள்.

கஞ்சனூரின் அக்னீஸ்வரர் கோவில்

கஞ்சனூரின் அக்னீஸ்வரர் கோவில்

காவிரி நதியின் வடக்கு கரையோரத்தில் கஞ்சனூரின் அக்னீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது கும்பகோணத்தில் இருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவில் இருக்கின்றது. இக்கோவில் வெள்ளி கிரத்திற்கு (சுக்ர தேவன்) அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது 9 நவக்கிரக கோவில்களில் 6வது நவக்கிரக ஸ்தலம் ஆகும். இக்கோவிலின் முக்கிய தெய்வங்கள் சிவனும் பார்வதியும். இதில் சிவபெருமான் இங்கே அக்னீஸ்வரர் வடிவத்திலும், பார்வதி கற்பகாம்பாள் வடிவத்திலும் பக்தர்களால் வணங்கப்படுகிறார்கள். ஒருவருடைய ஜாதகத்தின் காரணமாக சுக்கிரன் அல்லது வெள்ளி கிரகம் அவர்களுக்கு தீங்கு இழைக்காதபடி, பரிகாரங்கள் செய்வதற்காக இங்கே திரளான மக்கள் கூடுகின்றார்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X