» »தீபாவளி நாளில் இப்படி செய்தால் உங்கள் காட்டிலும் பணமழைதான்!

தீபாவளி நாளில் இப்படி செய்தால் உங்கள் காட்டிலும் பணமழைதான்!

Written By: Udhaya

எல்லாருக்கும் செல்வம் வந்து சேரவேண்டும், வீட்டில் வளம் கொழிக்கவேண்டும். நினைப்பவையாவும் நடக்கவேண்டும் என்பதுதானே வேண்டுதலாக இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் சுக, துக்கங்கள் இருக்கத்தான் செய்யும். அதை கடந்து வருவோருக்குத்தான் வாழ்வில் இனிமை பிறக்கும் என்பது நாம் அறிந்ததுதான். சரி தீபாவளி நெருங்கிவிட்டது. ஷாப்பிங் முதல் சகல விசேச நிகழ்வுகளும் படிப்படியாக நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன.

வழக்கமாக இரண்டு தினங்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை இந்த வருடம் இப்போதே கலைகட்டிவிட்டதாக தெரிகிறது. ஆம். எங்கே பார்த்தாலும் ஆரவாரம், பெருமகிழ்ச்சி.

தீபாவளி நாளில் செய்யக்கூடிய லட்சுமி குபேர பூஜையால் நாம் பல்வேறு பலன்கள் எளிதில் பெறமுடியும். தனது தாயிடம் இருந்து நவநிதியங்களைப் பெற்ற குபேரரை தீபாவளி நாளில் வழிபடுவோருக்கு அவர் சகல செல்வங்களையும் அள்ளித்தருவார். ஸ்ரீலட்சுமி தேவியை பூஜிப்பவர்கள் அனைத்து செல்வங்களையும் அதாவது பொருள் செல்வம் மட்டுமின்றி, வீடு நிறைய தானியங்கள், மக்கட் செல்வம், தைரியம், வீரம், அறிவுச் செல்வம் அனைத்தையும் பெற்று வாழ்வில் பரிபூரண ஆனந்தத்தை அடைய முடியும்.

சரி அப்படி வணங்கவேண்டியவர்கள் வீட்டில் வைத்து வெறுமையாக வணங்கினால் போதாது. அதற்கென்றுதானே கோயில்களை கட்டிவைத்துள்ளனர் முன்னோர்கள். வாருங்கள் உங்கள் ராசிக்கேற்ற செல்வம் அள்ளித்தரும் கோயில்களுக்கு பயணிப்போம்.

 தீபாவளி தினத்தன்று ராசிபலன்

தீபாவளி தினத்தன்று ராசிபலன்

மேஷ ராசியினர்களே.. உங்களுக்கு குரு பெயர்ந்ததிலிருந்து நல்ல வருடம் தொடங்கியிருந்தது. ஆனால் இந்த தீபாவளியன்று நீங்கள் கவனத்துடன் இருக்கவேண்டும். சூரியனும், செவ்வாயும், சுக்கிரனும் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் இருப்பதால் சில தொந்தரவுகள் வந்து சேரும். அதே நேரத்தில் குரு உங்களை காப்பாற்றுவார். நீங்கள் அருகிலுள்ள குரு கோயிலுக்கு சென்று வருவது சிறந்தது.

AbhisekSharmaRoy

 ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில்

திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு சென்றுவாருங்கள். இது அம்பிகை தவம் புரிந்து சிவபெருமானை திருமணம் புரிந்த திருத்தலம் மேலும்
தட்சிணாமூர்த்தித் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.

Rsmn

நவக்கிரகத் தலம்

நவக்கிரகத் தலம்

நவக்கிரக தலங்களில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாக விளங்குகிறது. குரு ஸ்தலமாக விளங்கும் ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் சுமார் 1900 வருடங்களுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

செல்வம் தரும் லட்சுமி

செல்வம் தரும் லட்சுமி


தீபாவளி தினத்தன்று செய்யப்படும் லட்சுமி குபேர பூஜையினால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். தீபாவளி தினத்தில் நிச்சயம் செய்யவேண்டிய பூஜையாக இது பார்க்கப்படுகிறது.

செல்வம் தரும் லட்சுமி

செல்வம் தரும் லட்சுமி

சூரியன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது முதலிய கிரகங்களுக்கு ராசி மாற்றம் இல்லை. அதாவது இவை இப்போதுள்ள அதே இடத்தில் இருக்கின்றன. அதே நேரத்தில் சந்திரன் மட்டும் ராசி மாற்றம் அடைகின்றான்.

 சூரியன் மற்றும் செவ்வாய்

சூரியன் மற்றும் செவ்வாய்

ரிஷிப ராசி நேயர்களே, உங்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருப்பதால், நல்ல விசயங்கள் நடந்தாலும், ஆறாமிடத்தில் அமர்ந்திருக்கும் குரு உங்களுக்கு கடன் சுமையை ஏற்படுத்தப்போகிறார். இதிலிருந்து மீண்டு வர நீங்கள் அருகிலுள்ள கோயிலுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும்.

Os Rúpias

கவலை கொள்ளவேண்டாம்!

கவலை கொள்ளவேண்டாம்!

நீங்கள் இந்த தீபாவளி தினத்தில் மகிழ்ச்சியாக இருக்க நிச்சயமாக தடை இருக்காது. உங்களுக்கு நிறைய பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் நல்லதே நடக்கும் என்று துணிச்சலோடு வீறுநடை போடுங்கள். உங்கள் மன அமைதிக்காக கோயிலிக்கு சென்று வாருங்கள்.

உங்கள் பகுதிக்கு அருகிலுள்ள கோயிலுக்கு சென்று வருவதால் சிக்கலின் வீரியம் குறையும். அதே நேரத்தில் உங்களால் முடியுமெனில் இங்கு குறிப்பிட்டுள்ள கோயில்களுக்கு செல்லுங்கள். அப்போதுதான் உங்கள் காட்டிலும் பணமழை கொட்டோ கொட்டென்று கொட்டும்.

 திருமணத் தடை நீங்க திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில்

திருமணத் தடை நீங்க திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில்

ரிஷிப ராசிக்காரர்கள் செல்லவேண்டிய கோயில்களில் முதன்மையானது இதுவாகும். திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் வட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம்.திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது.

பா.ஜம்புலிங்கம்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்

சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்

இது தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். இக்கோயிலில் சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர்.

முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன்சுவாமி' எனப் புகழ் பெற்று காணப்படுகிறார்.

பா.ஜம்புலிங்கம்

அருகிலுள்ள கோயில்

அருகிலுள்ள கோயில்

இக்கோயிலுக்கு அருகேயுள்ள மற்றொரு முருகன் கோயில் ஏரகரம் கந்தநாதசுவாமி கோயிலாகும். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் ஏரகம் சுவாமிநாதசுவாமி கோயில் உள்ளது.

மயிலம் முருகன் கோயில்

சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், திண்டிவனம் அருகில் உள்ள மயிலம் தலத்துக்குச் சென்று முருகனை வழிபடலாம்.


பா.ஜம்புலிங்கம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி


மிதுன ராசிக்காரர்கள் தீபாவளி தினத்தன்று நல்லது செய்து திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. முடியாதவர்கள் முன்கூட்டியோ அல்லது தீபாவளி கழிந்தோ செல்லுங்கள். அதே நேரத்தில், தீபாவளி தினத்தன்று லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும்.

Nsmohan

கொளஞ்சியப்பர் கோயில்

கொளஞ்சியப்பர் கோயில்

விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது இந்த கோயில். இங்கு முருகர் சுயம்பு வடிவில் காணப்படுகிறார். இங்கே நடைமுறையில் இருக்கும் "பிராது" எனும் வழக்கு பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவை சிறப்புக்குரியதாகும்.

கி. கார்த்திகேயன்

காஞ்சி காமாட்சியம்மன் கோயில்

காஞ்சி காமாட்சியம்மன் கோயில்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள காமாட்சியம்மன் கோயில் ஒரு சக்தி தலமாகும். அதிலும் சக்திக்கான தனிப்பட்ட கோயிலாகும். இக்கோயிலில் காமாட்சி அம்மன் இங்கே இரண்டு காலையும் மடித்து பத்மாசன யோக நிலையில் அமர்ந்திருப்பது மிகச் சிறப்பானதொரு அம்சமாகும். அவரது ஒரு கையில் கரும்பு வில்லினையும், தாமரை மற்றும் கிளியினை இன்னொரு கையிலும் கொண்டுள்ளார்.

IM3847

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் என்பது திருவில்லிபுத்தூரில் அமைந்துள்ள பழமையானதாகும். மேலும், பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் ஆகியோர் அவதரித்த திருத்தலம். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்து மத வைணவ கோவில் ஆகும்.

Balaji.B

 குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்

குற்றாலம் குற்றாலநாதர் திருக்கோயில்

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் அமைந்துள்ள குற்றாலநாதர் கோயில் மிகவும் சிறப்புவாய்ந்த கோயிலாகும். இத்தலத்தில் திருமால் வடிவிலிருந்த மூர்த்தியை அகத்தியர் சிவலிங்கமாக மாற்றினார் என்பது தொன்நம்பிக்கை.

Booradleyp1

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து கோயில்களுக்கும் எப்படி செல்லலாம் என்று முக்கிய சுற்றுலா வழிகாட்டி இதுவாகும். முதலில் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில். கும்பகோணத்திலிருந்து அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம். ஏறக்குறைய 18 கிமீ தூரம் கொண்டது இந்த கோயில். மேலும் திருவாரூர், தஞ்சாவூர், திருச்சியிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

 திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயிலுக்கு எப்படி செல்லலாம்?

திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயிலுக்கு எப்படி செல்லலாம்?

மயிலாடுதுறையிலிருந்து வெறும் 12 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

 கொளஞ்சியப்பர் கோயிலுக்கு எப்படி செல்லலாம்?

கொளஞ்சியப்பர் கோயிலுக்கு எப்படி செல்லலாம்?

விழுப்புரத்திலிருந்து 81 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். குறைந்த பட்சம் 1 மணி நேரத்தில் சென்றுவிடலாம். விழுப்புரம் மட்டுமல்லாது, உளுந்தூர்பேட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

இன்பம் பொங்கும் தீபாவளி

இன்பம் பொங்கும் தீபாவளி

இங்கு குறிப்பிட்டுள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று வழிபட்டால், பிணி, மூப்பு, துன்பம் தொலையும். அல்லது தீபாவளி தினத்தன்று சுக்லாம் பரதரம் சொல்லி கணபதியை வணங்கியபின், குபேர பூஜை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியையும் அவளால் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தையும் உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வின் துன்பங்கள் விலகி ஓடும்.

மகாலட்சுமி - குபேரன்

மகாலட்சுமி - குபேரன்


செல்வம் செழிக்கும் தரித்திரம் நீங்கி செல்வம் செழிக்க ஒவ்வொரு இல்லத்திலும் மகாலட்சுமி- குபேரனுடைய பூஜையை பூஜை விதிப்படி செய்து வந்தால் மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் திருமகளின் அருள் கடாட்சம் மட்டுமின்றி அவளால் நிரந்தர செல்வந்தனாக மாற்றப்பட்ட ஸ்ரீ குபேரனுடைய அருளும் கிடைக்கப்பெற்று வாழ்வு தழைத் தோங்கும் என்பதே உண்மை.

இந்த மூனு ராசிக்காரர்களுக்கும்

இந்த மூனு ராசிக்காரர்களுக்கும்

இந்த மூனு ராசிக்காரர்களுக்கும் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டுமாம்!

தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வயது வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடி தீர்க்கும் பண்டிகை என்றால் அது தீபாவளிதான்.