» »நமக்கு தஞ்சாவூர் எப்படியோ கர்நாடகாவுக்கு இந்த ஊர். மலைக்கவைக்கும் அற்புதங்கள்!.

நமக்கு தஞ்சாவூர் எப்படியோ கர்நாடகாவுக்கு இந்த ஊர். மலைக்கவைக்கும் அற்புதங்கள்!.

Written By: Udhaya

தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சத்தினரை போல கர்நாடகத்திலும், மராத்தியத்திலும் கோலோச்சியவர்கள் சாளுக்கிய வம்சத்தினர் ஆவர். 6ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை மத்திய இந்தியாவை ஆண்ட இவர்களின் ஆட்சி காலத்தில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த நகரில் ஒன்றாக இருந்திருக்கிறது பட்டடக்கல். இன்றும் சாளுக்கியர்கள் காலத்தில் கட்டப்பட்ட வார்த்தைகளில் விவரிக்க முடியாத சிற்பவேலைப்பாடுகள் கொண்ட கோயில்கள் இந்நகரில் இருக்கின்றன. அவற்றைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

பட்டடக்கல்

பட்டடக்கல்

கர்நாடக மாநிலத்தில் அதன் தலைநகரான பெங்களூருவில் இருந்து 514கி.மீ தொலைவில் பட்டடக்கல் நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் தான் கி.பி 6ஆம் நூற்றாண்டிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை சாளுக்கியர்களின் தலைநகராக இருந்திருக்கிறது.

Ms Sarah Welch

10 கோயில்கள்

10 கோயில்கள்


சாளுக்கிய மன்னர்களின் காலத்தில் இங்கே ஏராளமான கோயில்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில்கள் திராவிட, நாகர, ரேகா, பிரசடா போன்ற வெவ்வேறு கட்டிடக்கலைகளின் சங்கமமாக திகழ்கின்றன. பட்டிடக்கல்லில் இருக்கும் 10 கோயில்களில் நான்கு கோயில்கள் திராவிட கட்டிடக்கலை முறைப்படியும், நாகர் கட்டிடக்கலை அமைப்பின்படி நான்கு கோயில்களும், ஜைன முறைப்படி ஒரு கோயிலும், நாகர் மற்றும் திராவிட கட்டிடக்கலையின் கலவையில் ஒரு கோயிலும் கட்டப்பட்டிருக்கின்றன.

Shivajidesai29

 கலைகள்

கலைகள்

சாளுக்கியர்களின் ஆட்சிகாலத்தில் பட்டிடக்கல்லில் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டிருக்கின்றன. இந்நகருக்கு கிசுவோளை, ரக்தபுரா, பட்டட கிசுவோளை போன்ற பல்வேறு பெயர்கள் இருந்திருக்கின்றன. பட்டடக்கல் நகரில் தான் சாளுக்கிய மன்னர்களின் முடிசூட்டு விழா நடைபெற்றதாக வரலாற்று குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளன.

Mukul Banerjee

உலக புராதன சின்னம்

உலக புராதன சின்னம்


1987ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக பட்டடக்கல் சிற்பங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டடக்கல்லில் இருக்கும் சில முக்கிய கோயில்களை பற்றியும் அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

Ms Sarah Welch

வெற்றிச்சின்னம்

வெற்றிச்சின்னம்

காஞ்சியை ஆண்ட தமிழ் மன்னர்களான பல்லவர்களை தன் கணவர் இரண்டாம் விக்கிரமாதித்தன் வெற்றிகொண்டதன் நினைவாக கட்டப்பட்டதே இந்த விருபாக்ஷா கோயில் ஆகும். எல்லோராவில் இருக்கும் கைலாசநாதர் கோயில் இக்கோயிலை மாதிரியாக கொண்டே கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

Sanyam Bahga

சங்கமேஸ்வரர் கோயில்

சங்கமேஸ்வரர் கோயில்


பட்டிடக்கல்லில் இருக்கும் மிகப்பழமையான கோயிலான சங்கமேஸ்வரர் கோயில் விஜயாதித்தன் என்ற சாளுக்கிய மன்னனால் கட்டப்பட்டிருக்கிறது. மூன்றடுக்கு விமான கோபுரத்தை கொண்டிருக்கும் இக்கோயில் விருபாக்ஷா கோயிலை போன்றே திராவிட கட்டிடக்கலை அமைப்பின்படி கட்டப்பட்டிருக்கிறது.

Ms Sarah Welch

 மல்லிகார்ஜுன கோயில்:

மல்லிகார்ஜுன கோயில்:

விருபாக்ஷா கோயிலை ஒட்டியே இந்தமல்லிகார்ஜுன கோயில் அமைந்திருக்கிறது. மன்னன் இரண்டாம் விக்கிரமாதித்தனின் இரண்டாவது மனைவியான திரிலோகமகாதேவியால் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலினுள் நரசிம்மர், இராமாயண மற்றும் மகாபாரத கதைகள் சுவர்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

MP Bharath Kumar

காசிவிஸ்வநாதர் கோயில் :

காசிவிஸ்வநாதர் கோயில் :

8ஆம் நூற்றாண்டில் நாகர் கட்டிடக்கலை அமைப்புப்படி கட்டப்பட்டது இந்த காசிவிஸ்வநாதர் கோயில் ஆகும். மல்லிகார்ஜுன கோயிலுக்கு வடக்கே அமைந்திருக்கும் இக்கோயில் இன்று சிதலமடைந்து காணப்படுகிறது.


Maheshwaran S

 எப்படி அடைவது?

எப்படி அடைவது?

பல உள்ளூர் மற்றும் மாநில அரசுப்பேருந்துகள் படாமி, ஏஹோல் மற்றும் பெங்களூர் நகரங்களிலிருந்து பட்டடக்கல் ஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து இயக்கப்படும் இந்த பேருந்துகள் சாதாரணக்கட்டணத்தைக் கொண்டுள்ளன. படாமி ரயில் நிலையம் நகர பட்டடக்கல் பகுதியிலிருந்து 24 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. இது இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் நல்ல முறையில் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் அல்லது உள்ளூர் பேருந்துகள் மூலம் நகருக்குள் பயணம் மேற்கொள்ளலாம்.

Arian Zwegers

Read more about: travel, temple, karnataka