Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் மம்மி இருக்கும் இடம் எது தெரியுமா? அதன் ஆச்சரியமூட்டும் வரலாறை தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

இந்தியாவில் மம்மி இருக்கும் இடம் எது தெரியுமா? அதன் ஆச்சரியமூட்டும் வரலாறை தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

இந்தியாவில் மம்மி இருக்கும் இடம் எது தெரியுமா? அதன் ஆச்சரியமூட்டும் வரலாறை தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

By Bala Karthik

ஹிமாச்சல பிரதேசத்திலுள்ள ஸ்பித்தி பள்ளத்தாக்கின் குளிர்ந்த பாலைவனமொன்றில் க்யூ என்னும் சிறிய குக்கிராமம் காணப்படுகிறது. இந்த இடமானது, பயணிகளால் விலகி செல்லும் ஒரு இடமாக இன்று வரை இருந்து வருகிறது. கடல் மட்டத்திலிருந்து 10,499 அடி உயரத்தில் இந்த கிராமம் அமைந்திருக்க, இந்திய சீனா எல்லை பகுதியின் அருகாமையில் இது காணப்படுகிறது. இந்த இடமானது இயற்கையாக பாதுகாக்கப்பட்டு வரும் மம்மியின் இருப்பிடமாக இந்தியாவில் இருந்து வருகிறது.

இந்தியாவில் மம்மி இருக்கும் இடம் எது தெரியுமா? அதன் ஆச்சரியமூட்டும் வரலாறை தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

Rakesh31277

இந்த க்யூ கிராமத்தில் ஒரு அடையாள பலகை வைக்கப்பட்டிருக்க, அதன்மூலம் சுற்றுலா பயணிகள் இந்த மம்மியை பார்த்து செல்ல உதவுகிறது. இந்த மம்மியை இராணுவம் தோண்டியெடுக்க, 1975ஆம் ஆண்டு இந்த இடத்தில் கல்லறையானது கட்டப்பட்டது. கார்பன் கணக்கின்படி, இந்த சடலமானது சுமார் 500 முதல் 600 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவருடையது என்பது நமக்கு தெரிய வருகிறது.

இந்த மம்மியின் வரலாறு:

உள்ளூர் மக்களின் கூற்றுபடி, இந்த மம்மியின் பெயரானது ஷாங்கா டென்சின் என லாமா என்பவர் மூலம் வைக்கப்பட்டதாக தெரியவருகிறது. இவர் தான் இந்த கிராமத்திற்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தந்தவர் என்பதும் இவர்கள் மூலம் நம் செவிக்கு எட்ட வருகிறது.

இந்தியாவில் மம்மி இருக்கும் இடம் எது தெரியுமா? அதன் ஆச்சரியமூட்டும் வரலாறை தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

இவர்களின் சொல்படி, இந்த லாமா தான் கிராமத்தை தேள்களிடமிருந்து காப்பாற்றுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த லாமா, இறந்த பின்னர் ஒரு வானவில் தோன்றியதாகவும், அதனால் தேள்கள் இவ்விடத்தை அண்டாது எனவும் நம்பப்படுகிறது.

இந்த கிராமத்தில் உள்ளவர்களால், இந்த மம்மியானது வாழும் தெய்வம் என போற்றப்பட, வழிபட்டு பூஜைகளும் செய்வதோடு மரியாதையும் செய்கின்றனர். இந்த மம்மியானது குந்தவைத்த நிலையில் இருக்க, பட்டு அங்கிகள் ஆன ஆடை உடுத்தப்பட்டிருக்கிறது. அவருடைய பற்கள் மட்டும் முடியானது இன்றும் பராமரிக்கப்பட்டுவர, கண்ணாடிக்குள் வைக்கப்பட்டு ஒரு சிறிய அறையில் கோம்பாவிற்கு அருகில் வைக்கப்பட்டிருக்கிறது.

கொள்ளையை தடுக்க, இந்த மம்மியானது மூடப்பட்ட நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்க, கண்ணாடியின் வழியே... வருபவர்கள் பார்த்து வியந்து செல்கின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளின் போது இந்த அறை திறக்கப்பட, அதுவும் அவர்கள் கிராமத்தில் கொண்டாடப்படும் விழாக்களாகவும் அது இருக்கிறது.

இந்தியாவில் மம்மி இருக்கும் இடம் எது தெரியுமா? அதன் ஆச்சரியமூட்டும் வரலாறை தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

க்யூ - நவீனமயமாக்கப்படாத யாரும் தொட்டிராத ஒரு கிராமம்:

மிகவும் அமைதியான மற்றும் அழகான கிராமம் தான் இந்த க்யூ. இங்கே சில வீடுகள் காணப்பட, நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கென்ற வீட்டை சிறிய குடிசைகளாக்கி மாபெரும் இமய மலையில் வாழ்ந்து வருகின்றனர். நவீனமயமாக்கப்படாத இந்த கிராமத்திற்கு பாத யாத்திரை (நடப்பது) தான் ஒரே வழியாக இருக்கிறது. இதனால், இங்கிருப்பவர்கள் தங்களுக்கு தேவையான அன்றாட அத்தியவாசிய பொருட்களை தொலைதூரம் சென்று வாங்கி வருகின்றனர்.

ஸ்பித்தி பள்ளத்தாக்கின் துணை மாவட்ட தலைமையகமாக இருக்கும் காஷா நகரத்திலிருந்து 80 கிலோமீட்டர்கள் தொலைவில் காணப்படும் இந்த க்யூ என்னும் குக்கிராமம், ஷிம்லாவிலிருந்து 430 கிலோமீட்டர் தொலைவிலும், மணலியிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவிலும் குன்ஷும் வழியாக காணப்படுகிறது.

இந்தியாவில் மம்மி இருக்கும் இடம் எது தெரியுமா? அதன் ஆச்சரியமூட்டும் வரலாறை தெரிஞ்சுக்க இதப் படிங்க!!

பள்ளத்தாக்கின் ஆழ்ந்த பகுதியில் காணும் இந்த க்யூ கிராமத்திற்கு, தனியார் பேருந்துகள் இயக்கப்பட, அரசு பேருந்துகளுக்கான உத்திரவாதத்தை நம்மால் அதிகம் தரமுடிவதில்லை. தங்கும் வசதியும் வீடுகளுக்கு தகுந்தார் போல அமைந்திருக்க, அடிப்படை வசதிகொண்ட அறைகள் மட்டுமே இங்கே தங்குவதற்கு ஏதுவாக இருக்கிறது.

இங்கே வாழும் மக்கள் கூச்ச சுபாவத்துடன் ஒடுங்கியே இருக்கும்போதிலும், சிறந்த வழிகாட்டியாக இவர்கள் இருக்கின்றனர். இங்கே தங்குபவர்களுக்கு பொதுவான கழுவும் இடங்களும், விருந்தினர் இடங்களுமென மூன்று வேளை உணவு மட்டும் கூடுதல் தொகைக்கு (Extra Cost) தருகின்றனர்.

இந்த இடத்தை காண சிறந்ததோர் நேரங்கள்:

கால நிலையானது மிகவும் சிறந்ததாக இருக்க, ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் சிறந்ததாக அமைகிறது. சாலைகளும் தெளிவுடன் காணப்பட, இரவு பொழுதும் குளிரற்று மற்ற மாதங்களிலும் இனிமையானதாகவே இருக்கிறது.

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X