» »சிக்கிம் மாநிலத்தில் காணக் கிடைக்காத அழகிய பள்ளத்தாக்கு லாக்கன்!! அதைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!

சிக்கிம் மாநிலத்தில் காணக் கிடைக்காத அழகிய பள்ளத்தாக்கு லாக்கன்!! அதைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!

Written By: Balakarthik Balasubramanian

சிக்கிம் மாநிலத்திலுள்ள அழகிய பள்ளத்தாக்கான லாக்கன் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? கொஞ்சம் கீழ் நோக்கி தான் சுட்டெலியை நகர்த்தி பாருங்களேன். இங்கே காணும் இடங்கள், உள்ளூர் பழங்குடியினரின் வாழ்க்கை முறை என பலவற்றை பார்த்து வயடைத்துதான் போவீர்கள்.

வடக்கு மாவட்டத்தின் சிக்கிமில் காணப்படும் இந்த அழகிய இடம் காட்சிகளை கண்களுக்கு தந்து மனதை இதமாக்க துடிக்கிறது. லாக்கன், இங்குள்ள ஒரு அழகிய நகரமாகும். இங்கே காணும் பல இடங்கள் சுற்றுலா பயணிகளின் பார்வையை புத்துணர்ச்சி அடையசெய்து சுவாசத்தால் மனதை நெருட செய்கிறது. இங்கே நாம் பார்க்கும் லாசுங் மடாலயம், நம் மனதில் பல கேள்விகளை உருவாக்கி ஆச்சரியத்தின் வாயிலாக பதிலை தருகிறது. இங்கே நம் கருவிழிகளை குளிரூட்டும் அழகிய காட்சிகளும், பசுமையான காடுகளும் நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்கிறது என்று பெருமை நிரம்ப நாம் கூறலாம். மக்கள் தொகை அரிதான இந்த நகரம், புனித குருதொங்க்மாருக்கும் ஸோ லாமூ ஏரிகளுக்கும் நுழைவாயிலாக அமைந்து நம்மை வியப்பை நோக்கி இழுத்து செல்கிறது.

சிக்கிம் மாநிலத்தில் காணக் கிடைக்காத அழகிய பள்ளத்தாக்கு லாக்கன்!! அதைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!

Vickeylepcha

இந்த லாக்கன்... வட சிக்கிம் நெடுஞ்சாலையில் காணப்படும் இந்தோ - டைபன் எல்லைகளுக்கு அருகில் அமைந்து நம் மனதை காட்சிகளால் ஆள்கிறது. இங்கே ஹிமாலய புத்த மதத்தின் நியிங்க்மா ஒழுங்குமுறை, நம்பிக்கையுடன் வேறூன்றி நிற்கிறது. லாக்கன் மடாலயம் இங்கே கிராமத்தின் உச்சியில் அமைந்து காட்சிகளை நம் கண்களுக்கு தெளிவுபடுத்துகிறது. இங்கிருந்து நாம் பார்க்க...நம் பார்வைக்கு லாக்கன் சூவும் ஆல்பைன் காடுகளும் தென்படுகிறது என்று நாம் உண்மையை உரைக்க இவ்வுலகிற்கு சொல்லி பெருமை அடையலாம்.

அடிவாரத்திலிருந்து 9022 அடி உயரத்தில் காணப்படும் இந்த லாக்கன் பகுதி...லாசுங்கை விட உயர்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலுமே...ஆப்பிள் பழத்தோட்டங்களும், ஆல்பைன் காட்சிகளும் நம் கருவிழிகளுக்கு காட்சியளித்து மனதை அமைதியடைய செய்கிறது. சிக்கிமின் வடப்பகுதியில் தொடங்கும் இந்த சுவாரஷ்யமான பயணம்...சிறிய குக்கிராமத்தில் காணும் வசீகர காட்சிகளுடன் இனிதே ஆரம்பித்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இங்கே நம்மை புத்துணர்ச்சி கொள்ள செய்யும் தூய காற்று மனதை இயற்கையை கொண்டு வருடி...வித விதமானதோர் உணர்வினை நமக்கு தருகிறது.

லாக்கன் பகுதியை நாம் காண ஏதுவான மாதங்கள் தான் யாவை?

சிக்கிம் மாநிலத்தில் காணக் கிடைக்காத அழகிய பள்ளத்தாக்கு லாக்கன்!! அதைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!

carol mitchell

மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான காலங்கள் இந்த இடத்தை நாம் காண ஏதுவாக அமைந்து நம்மை இயற்கையின் பிரம்மிப்பை நோக்கி இழுத்து செல்கிறது. இங்கே வெப்பத்தின் தாக்கம்... மிதமானதாகவும், லேசானதாகவும், கடும் மழைபொழிவும் கொண்டதாய் வருடாவருடம் அமைந்து நம் மனதை வருடுகிறது. இருப்பினும் இந்த வானிலை மாற்றங்கள் ஒருபோதும் நம்மை பாதிப்பதில்லை என்பதே உசிதமானதொரு விஷயமாகும். இங்கே குளிர்காலத்தின் போது அதன் தாக்கம் கடுமையானதாக இருக்க...வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து பூஜ்ஜியத்தை எட்டுகிறது. அதனால்...இந்த குளிர்காலத்தில் மட்டும் பயணத்தை நாம் தவிர்ப்பது மிகவும் நல்லதாகும்.

தீ பிக் பாஸ்:

இந்த லாக்கன் என்னும் பெயர் "தீ பிக் பாஸ்" என மொழிபெயர்க்கப்படுகிறது. உயரத்தில் அமைந்திருக்கும் காரணத்தால் இப்பெயர் கொண்டு அழைக்கப்பட...இந்த இடம் அழகிய பாதைகளை கொண்ட காட்சியுடன் மனதை வசீகரிக்கும் அழகிய மலைப்பகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த பயணத்தின் ஓர் பாதையான பசுமை ஏரியும் கஞ்சன்சுங்கா தேசிய பூங்காவும் லாக்கன் பயணத்தின் முதற்பகுதியில் அமைந்து நம்மை மகிழ்வித்து மனதை சிறகில்லாமலே பறக்க செய்கிறது.

சிக்கிம் மாநிலத்தில் காணக் கிடைக்காத அழகிய பள்ளத்தாக்கு லாக்கன்!! அதைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!

Giridhar Appaji Nag Y 

பூட்டியாவில் காணப்படும் சிறிய குக்கிராமமான இந்த பகுதி...திபெத்திய குடியேற்றங்களின் முதன்மை இடமாக விளங்குகிறது. இந்த இடம் சுமார் 150 குடும்பங்களின் அழகிய வாழ்க்கையை பிரதிபலித்து வாழ்வியல் கலாச்சாரத்தின் பெருமையை தாங்கிகொண்டிருக்க...இந்த கிராமத்தின் ஓர் பகுதிமட்டும் குளிர் சூழ என்னேரமும் காட்சியளிக்கிறது. ஆகையால்...கோடைக்காலத்தின் வேட்கையை தணிக்க இந்த இடம் பெரிதும் உதவுகிறது என இந்த இடத்தை பற்றி நம்மால் பெருமையுடன் கூறமுடியும். திபெத்திய எல்லையுடன் சேர்ந்த ஆல்பைன் மேய்ச்சல்களும்...நம் மனதை காட்சிகளால் குளிரூட்டி மனதை அமைதிகொள்ள செய்கிறது.

சுற்றுலா பயணிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த லாக்கன், 2000 ஆண்டின் இறுதியில் தொடங்கப்பட்டதாகும். அதன்பிறகு சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவான பல வசதிகளை நிறுவி நம் மனதை காட்சிகளால் நெகிழ செய்து பயணத்தை சிறப்பிக்கிறது. இயற்கை அன்னையின் அழகால் கவரப்படும் சுற்றுலா பயணிகள்...அவள் மடியில் தவழ்ந்து இயற்கையின் புகழ் பாடி அவள் பாதங்களை வழிபடுகிறார்கள் என்றே கூற வேண்டும். இதன் அடிவாரத்தில்...சோப்தா பள்ளத்தாக்கில் பயணத்திற்கான ஆயத்தபணிகள் தொடங்க...குருதொங்கோமா ஏரியுடன் கூடிய அழகிய காட்சிகளால் மனதை ஆரவாரம் கொள்ள செய்கிறார்கள் இங்கு வரும் சுற்றுலா பயணிகள்.

சிக்கிம் மாநிலத்தில் காணக் கிடைக்காத அழகிய பள்ளத்தாக்கு லாக்கன்!! அதைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!

Retlaw Snellac

உறை நதி:

இங்கிருந்து நாம் குருதொங்மர் ஏரியை எட்டலாம். ஹிமாலய பகுதியில் காணப்படும் ஒரு புனித ஏரி என்னும் பெருமைக்குறிய ஏரி தான் இந்த குருதொங்மர் ஏரியாகும். இந்த லாக்கன் கொம்பாவை அடையும் நாம்...பூட்டானியர்களின் எளிய வாழ்க்கை அழகை கண்டு வியந்து போகிறோம் என்றே சொல்ல வேண்டும். இந்த பகுதியை காண வெளி நாட்டவருக்கு எல்லைப் பகுதிகள் தனியே அமைக்கப்பட...சிறப்பு முன்பதிவின் மூலம் அவர்கள் இந்த ஈடுஇணையற்ற இயற்கையின் அழகை கண்டு மகிழலாம் என்கின்றனர் இங்குள்ள உள்ளூர்வாசிகள்.

இங்கு காணப்படும் "தங்கு" என்னும் பகுதி நம் களைப்பை மறந்து இளைப்பார உதவ...சோப்தா பள்ளத்தாக்கின் இடுக்கில் நம் மனதை தொலைத்து அழகிய காட்சியால் சரணாகதி அடைகிறோம் என்றே கூற வேண்டும். இங்கிருந்து நடைப்பயணத்தின் மூலம் உறை நதியையும் அடைந்து குளிர்காலத்தில்... காட்சிகளால் மனதை இதமாக்கிகொள்ள முடிகிறது.

சிக்கிம் மாநிலத்தில் காணக் கிடைக்காத அழகிய பள்ளத்தாக்கு லாக்கன்!! அதைப் பற்றி தெரிஞ்சுக்கோங்க!!

carol mitchell

மேலும் இங்கே சமீபத்தில் படையெடுக்கப்பட்ட கான்கீரீட் காட்சிகளையும் நம்மால் காணமுடிகிறது. இந்த லாக்கன் மலைப்பகுதி கிராமத்தில் காணப்படும் வீடுகளின் அமைப்பு...மரங்களால் ஆகி காணப்பட, உறுதியான கல் தளங்கள் மற்றும் பதிவுக் கொட்டகைகளையும் நம்மால் காண முடிகிறது. இங்குள்ள மரங்களை குளிர்காலத்தின் போது எரிபொருளின் தேவைக்காக சேமித்து வைக்கவும் மக்கள் முடிவு செய்கின்றனர். வண்ணங்கள் தீட்டப்பட்ட அழகிய திபெத்திய பானி ஜன்னல் பலகைகளும், அழகான பிரார்த்தனை கொடிகளும் நம்மை ஆச்சரியபட வைத்து இடத்தின் மீதிருந்த எதிர்ப்பார்ப்பை அதிகரித்து ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது.

Read more about: travel