» »நயாகராவைப் பார்க்க அமெரிக்கா போகனும்னு அவசியம் இல்லைங்க, இங்க வந்தாலே போதும்...

நயாகராவைப் பார்க்க அமெரிக்கா போகனும்னு அவசியம் இல்லைங்க, இங்க வந்தாலே போதும்...

Posted By: Sabarish

PC : Saffron Blaze

நீர்வீழ்ச்சி என்றாலே துள்ளும் மனம் படைத்தோர் இங்கு ஏராளம். பசுமைக் காட்டின் நடுவே, கொஞ்சும் அழகுடன் கொட்டும் நீரில் விளையாட விரும்பாதோர் இங்கும் யாரும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக, பல இளைஞர்களுக்கு மிகப் பெரிய நீர்வீழ்ச்சிக்குச் சென்று நீண்டநேரம் செலவிடனுங்குறது ஒரு வாழ்நாள் கனவாகவே கூட இருக்கலாம். அப்பப்பட்ட மனதைப் பறிக்கும் நீர்வீழ்ச்சிப் பற்றிதாங்க இந்தக் கட்டுரையில் நாம பார்க்கப்போறோம்.

கொட்டும் அழகு

கொட்டும் அழகு

PC : Kurumban

மூன்றில் ஒரு பங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ள நம்நாட்டில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் நாம் அறிந்ததே. வற்றிய ஆறுகள், தேக்கங்கள், காலநிலை மாற்றம் என பெரும்பாலான பகுதிகள் வறண்ட நிலையிலேயே காட்சியளிக்கின்றது. இருப்பினும் இந்தியாவில் ஒரு சில ஆறுகளும், அருவிகளும் ஆர்ப்பரித்து ஓடி வருவது நாட்டின் வளமைக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இந்தியாவில் நாயாகரா

இந்தியாவில் நாயாகரா

PC : Kalaiarasy

கிழக்கு அமெரிக்காவில் எப்படியொரு நயாகராவோ, அதேப்போன்றுதாங்க கிழக்கு இந்தியாவிலும் ஒரு நயாகரா இருக்கு. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகலத்தில், 100 மீட்டர் உயரத்தில் இருந்து கொட்டும் நீரைப் பார்த்தால் வியந்துபோவீர்கள். அப்படியொரு அழகான நீர்வீழ்ச்சிதான் சித்ரகொடே.

பிரமிக்கும் ரம்மியம்

பிரமிக்கும் ரம்மியம்

PC : Vinay nihal

இந்தியாவிலேயே மிக அழகான நீர்வீழ்ச்சி என பெயர்பெற்றது இந்த சித்ரகொடே நீர்வீழ்ச்சி. இதன் ரம்மியமான அழகு என்னவென்றால் பருவ மலைக் காலத்தில் மொத்த நீர்வீழ்ச்சியும் நிறைந்து கொட்டுவதே. இதன்காரணமாகவே இந்தியாவின் நயாகரா என சித்ரகொடே அருவி புகழப்படுகிறது.

நிறம்மாறும் நீர்வீழ்ச்சி

நிறம்மாறும் நீர்வீழ்ச்சி

PC : Iamg

பருவகால மாற்றத்திற்கு ஏற்ப தனது நிறத்தினை மாற்றிக்கொள்ளும் வல்லமை கொண்டது இந்த நீர்வீழ்ச்சி. வெயில்காலத்துல வெள்ளை நிறமாகவும், பணிக்காலத்தில் இளம் மஞ்சள் நிறமாகவும், மலைக் காலத்தில் சிவப்பு நிறமாகவும் சித்ரகொடே அருவி நிறம்மாறி காட்சியளிக்கும்.

அப்படி என்ன சிறப்பு இருக்கு தெரியுமா ?

அப்படி என்ன சிறப்பு இருக்கு தெரியுமா ?

PC : Anup29

உலகப்பிரசித்தி பெற்ற அமெரிக்காவில் உள்ள நயாகராவை போன்றே பிரமாண்டமான நீர்ப்பரப்பானது பரந்து உயர்ந்த பாறை அமைப்புகளிலிருந்து அரை வட்ட வடிவில் காணப்படும் பள்ளத்தாக்கில் செங்குத்தாக சரிந்து புரளும் பிரம்மாண்ட அற்புதக்காட்சிதான் இந்த சித்ரகொடே. பார்த்த முதல் கணமே உடலெங்கும் சிலிர்க்க வைக்கும் இயற்கையின் விஸ்வரூப தரிசனமாக இந்த நீர்வீழ்ச்சியைக் கூறலாம்.

எங்க இருக்கு ?

எங்க இருக்கு ?

PC : Engshubham

சத்திஸ்ஹர் மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாக உள்ளது சித்ரகொடே. சுற்றுலா பயணிகளால் பெரிதும் விரும்பப்படும் இந்த நீர்வீழ்ச்சி அடர்ந்த காடுகளின் வழியே ஓடி வரும் இந்திரவதி ஆற்றின் கிளையாகும். மழைக்காலத்தில் நீர்வீழ்ச்சியின் முழு பிரம்மாண்டத்தை கண்டு ரசிக்க முடியும் என்பதால் அக்காலகட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.

எப்போது செல்லாம் ?

எப்போது செல்லாம் ?

PC : Ksh85

கோடைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சியில் சிறு, சிறு அருவிகளாக மட்டுமே ஆங்காங்கே விழுகிறது. இருப்பினும் இந்தக் காலகட்டத்தில் நீர்வீழ்ச்சியின் விளிம்புகள் பாறை அமைப்புகள் போன்றவற்றை நன்கு பார்த்து ரசிக்கலாம். படகு சவாரி செய்ய இதுவே ஏற்ற காலமாக உள்ளது.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள ஜக்தல்பூரிலிருந்து 38 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த சித்ரகொடே நீர்வீழ்ச்சி. சாலை வழியாக மட்டுமே இப்பகுதிக்கு செல்ல முடியும். பூங்காவின் நுழைவாயிலில் வனக்காவல் அதிகாரியின் அனுமதி பெற்ற பிறகே இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல முடியும். குளிர்காலத்திலிருந்து கோடைக்காலம் வரை இப்பகுதிக்கு விஜயம் செய்யலாம். ஜூலையில் தொடங்கும் மழைக்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதை தவிர்த்தல் நல்லது.

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

PC : Aashishsainik

ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 36 கி.மீ தூரத்தில் கங்கேர்காடி தேசியப்பூங்காவின் உள்ளே அமைந்துள்ள கங்கேர் தாரா எனும் நீர்வீழ்ச்சி, பஸ்தர் மாவட்டத்தில் கங்கேர் காட்டி என்னுமிடத்தில் உள்ள தீரத்கர் அருவி உள்ளிட்டவை சத்தீஸ்கர் மாநிலத்தில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களாக உள்ளன.