» »ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சுனார் கோட்டை... புதைந்து கிடக்கும் மர்மங்கள்..!!

ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த சுனார் கோட்டை... புதைந்து கிடக்கும் மர்மங்கள்..!!

Written By: Sabarish

பொதுவாகவே மன்னர்காலத்திய கோட்டைகள் பல நுணுக்கமான கட்டமைப்புகளையும், வியக்கத்தக்க கலைநயத்தையும் கொண்டிருக்கும். பெரும்பாலும், போர்க்காலத்தில் பதுங்கிச் செல்ல, செல்வங்களை பதுக்கி வைக்க என ரகசிய வழிகளும், அறைகளும் கூட கோட்டையின் ஓர் அங்கமாக இருக்கும். அத்தகைய பல மர்மங்கள் நிறைந்த கோட்டைகளுள் ஒன்றுதான் உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள சுனார்க் கோட்டை. அப்படி அங்கு என்னதான் உள்ளது என பார்க்கலாம் வாங்க...

சுனார் கோட்டை

சுனார் கோட்டை


பிரம்மாண்ட தோற்றமும், கொள்ளைகொல்லும் அழகும் கொண்டதுதான் சுனார் கோட்டை. இதற்கு, சந்திரகாந்தா சுனார் கோட்டை என்ற பெயரும் உண்டு. இக்கோட்டையின் அடியில் சுனார் நகரம் உள்ளது. கோட்டையும், நகரமும் மத்திய கால வரலாற்றில் மிகவும் பிரசிதிபெற்றது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தால் பராமரிக்கப்பட்டு வரும் இதனைக் காண ஆண்டுதோறும் வரலாற்று ஆய்வாலர்களும், சுற்றுலாப் பயணிகளும் வந்தவண்ணம் இருப்பர்.

Joy1963

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


உத்திரப் பிரதேச மாநிலத்தில் இருந்து சுமார் 314 கிலோ மீட்டர் தொலைவில் மிர்சாபூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சுனார் கோட்டை. கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த கோட்டை வாரணாசி நகரத்திலிருந்து தென்மேற்கில் 14 கிலோ மீட்டர் தொலைவிலும், மிர்சாபூர் நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. முகல்சராய் - கான்பூர் மற்றும் தில்லி - ஹவுரா இருப்புப்பாதை வழித்தடத்தில் சுனார் தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.

Anonymous

வரலாறு

வரலாறு


கி.பி. 1029 ஆண்டில் சகாதேவன் என்ற மன்னரால் மணற்கலைக் கொண்டு கட்டப்பட்டது சுனார் கோட்டை. பின், ஆப்கானிய சூர் பேரரசர் செர் ஷா சூரியா, முகலாயப் பேரரசர்களான உமாயூன், அக்பர், அயோத்தி நவாப்பு உள்ளிட்டோர்களால் கி.பி. 1772ம் ஆஷ்டு வரையில் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. இதன் பின் பிரிட்டிஷ் ராஜ் ஆட்சியாளர்களால் இந்தியா சுதந்திரமடைந்த 1947 வரை பயன்படுத்தப்பட்டது.

Ustad Abdul Ghafur Breshna

ஆயுதக்கிடங்கான கோட்டை

ஆயுதக்கிடங்கான கோட்டை


விந்திய மலைத்தொடரின் அருகில் 280 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இக்கோட்டை அமைந்துள்ள பகுதி நக்சல்பாரிகளின் ஆதிக்கம் மிக்கதாகும்.
தற்போது, கோட்டை உத்திரப் பிரதேச மாநில அரசு காவல் துறையின் ஆயுத கிடங்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எந்த நேரத்திலும், தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதால் கோட்டை பாதுகாப்பு படைகளால் மிகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Utkarshsingh.1992

மணற்கற்கோட்டை

மணற்கற்கோட்டை


சுனாருக்கு உட்பட்ட பகுதியில் இயற்கையாகக் கிடைக்கும் மணற்கற்களைக் கொண்டு மூன்று அடுக்குகளாக கோட்டை சுவர்கள் கட்டப்பட்டுள்ளது. கோட்டையின் வடக்கு நுழைவாயில் கங்கை ஆற்றைக் நோக்கி அமைந்துள்ளது.

Sabbir Sohan

சூழ்ந்து நிற்கும் பீரங்கிகள்

சூழ்ந்து நிற்கும் பீரங்கிகள்


சுனார் கோட்டையில் உள்ள முக்கிய அரண்மனையின் மேற்பகுதிகளில் பல பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆடம்பர அறைகளும், சுற்றுறிலும் ஏராளமான குடியிருப்புகளும் அமைந்துள்ளது. கோட்டையின் உட்பகுதியில் திறந்த வெளி அரங்காக சோனா மண்டபம் உள்ளது. 28 தூண்களைக் கொண்டுள்ள இது இந்துக் கட்டிடக் கலைநயத்தில் கட்டப்பட்டுள்ளது.

Anupamg

மர்மப் பாதைகள்

மர்மப் பாதைகள்


சோனா மண்டபத்திற்கு செல்ல நான்கு வாயில்களும், ஒரு சுரங்கப்பாதையும் உள்ளது. இந்தச் சுரங்கப் பாதையில் வழியாக சில மீட்டர் சென்றால் திறக்காத நிலையில் ஓர் இரகசிய அறை உள்ளது. இங்கே சகாதேவ காலத்து பொற்செல்வங்கள், விலைமதிப்பற்ற ஆபரணங்கள், பேர்க் காலத்து ஆயுதங்கள் உள்ளிட்டவை பதுக்கப்பட்ட நிலையில் இருப்பதாக தொல்லியல் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

Aminesh.aryan

படிக்கிணறு

படிக்கிணறு


கோடியின் ஒரு பகுதியில் அரச குடும்பத்தினர் நீராடுவதற்கு என ஓர் படிக் கிணறும் கட்டப்பட்டுள்ளது. சுமார், 6 மீட்டர் சுற்றளவு, 61 மீட்டர் ஆழமும் கொண்ட இந்த கிணறுக்கு அருகில் உள்ள கங்கை ஆற்றில் இருந்து ஊற்று மூலம் நீர் வரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது தொழில்நுட்பத்தின் உட்சமாக கருதப்படுகிறது.

Harsh Patel

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சுனார் கோட்டையின் மிக அருகில் உள்ள விமான நிலையம் லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையமாகும். இது சுமார் 48 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுனாரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் மிர்சாபூரில் ரயில் நிலையம் உள்ளது. சென்னையில் இருந்து சங்கமித்திரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ், யெஸ்வந்பூர்- பட்லிபுத்ரா வார ரயில், பாகமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளது.

Anup Sadi

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்