» »சீனாவில் இருந்து வழிந்தோடி இந்தியாவில் கொட்டும் அருவி... #Waterfalls 1

சீனாவில் இருந்து வழிந்தோடி இந்தியாவில் கொட்டும் அருவி... #Waterfalls 1

Written By: Sabarish

பக்கத்து மாநிலத்துக்காரனே தண்ணி தர மாட்டீங்குறான், அது எப்படி பக்கத்து நாட்டுல இருந்து தண்ணி அருவியா வந்து நம்ம நாட்டுல கொட்டுதுண்ணு பல கேள்விகள் உங்கள் ஆழ்மனதை துளைக்க ஆரம்பித்து விட்டதா, அட ஆமாங்க.... இங்கே, சீனாவின் எல்லைப் பகுதியில் இருந்து வழிதோடிவரும் தண்ணீர் மிகப் பெரிய அளவில் காண்போரை அப்படியே உரைய வைக்கும் வகையில் அருவியா கொட்டுதுண்ணா பாருங்களேன். சரி வாங்க, அது எங்க இருக்கு, என்னவெல்லாம் சிறப்பு என பார்க்கலாம்.

இந்தியாவின் ஸ்காட்லாந்து

இந்தியாவின் ஸ்காட்லாந்து


கிழக்கு இந்தியாவின் ஸ்காட்லாந்து என அழைக்கப்படும் ஷிலாங்க் வடகிழக்கு மாகாணங்களின் புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாகும். பச்சைப்பசேலென்ற புல்வெளிகள், மலை உச்சிகளைத் தழுவும் மேகங்கள், குளுங்கும் பூக்கள் ஷிலாங்கின் பரபரப்பான நகரவாழ்க்கையும் சேர்த்து நமக்கு மறக்கமுடியாத சுற்றுலா உணர்வை அளிக்கிறது.

AditiVerma2193

சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாத் தலங்கள்


ஷிலாங் பகுதி முழுவதுமே அடர் வனங்களும், ஏராளமான நீர்வீழ்ச்சிகளையும், உயர்ந்த மலை முகடுகளையும் உள்ளடக்கியது. இங்குள்ள எலிஃபண்ட் அருவி, ஷில்லாங் மலைச்சிகரம், ஸ்வீட் நீர்வீழ்ச்சி, லேடி ஹைதரி பூங்கா, வார்ஸ் ஏரி உள்ளிட்டவை மிஸ் பண்ணக்கூடாத சுற்றுலாத் தளங்களாகும். டான் பாஸ்கோ மையம் என்ற அருங்காட்சிகமும் இங்கே முக்கியமான இடமாகக் திகழ்கிறது.

Ashwin Kumar

எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி

எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி


பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி என செல்லமாக அழைக்கப்பட்ட நீர்வீழ்ச்சியில் உள்ள பாறை உன்மையிலேயே பார்ப்பதற்கு மிகப் பெரிய யானை போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இப்பகுதியிலேயே மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்பவர்கள் வழியெங்கும் உள்ள அழகிய சாலைகளையும், இயற்கை காட்சிகளையும் ரசித்தபடியே செல்லலாம்.

Ian Armstrong

நீர்வீழ்ச்சியின் தோற்றம்..!

நீர்வீழ்ச்சியின் தோற்றம்..!


பிரமிக்கவைக்கும் அழகுடன் ஷிலாங்கில் கொட்டும் எலிஃபண்ட் நீர்வீழ்ச்சி உண்மையில் எங்கே தோன்றுகிறது என ஆராய்ந்தீர்கள் என்றால் சற்று வியப்பாகத்தான் இருக்கும். காரணம், சீனாவிற்கு உட்பட்ட எல்லைப் பகுதிகளான லாஷா, நைங்ச்சி, பைசிகா உள்ளிட்ட பணிப் பிரதேசங்களில் இருந்து வழிந்தோடிவரும் நீர் பிரம்மபுத்திரா ஆற்றுடன் கலக்கிறது. அங்கிருந்து கிளை நதிகள் மூலம் உமியம் ஏரி மூலம் எலிஃபண்ட் நீர்வீழ்ச்சியாக ஷிலாங்கில் கொட்டுகிறது.

Akarsh Simha

கைவினைக் கலைஞ்சியம்

கைவினைக் கலைஞ்சியம்


எலிஃபண்ட் பாறையின் ஒரு பகுதி கடும் பூகம்பத்தால் அழிந்துவிட்டது. இங்கே பல வகையான செடிகளும், விலங்குகளும் அதிகளவில் உள்ளது. இப்பகுதியில் உள்ளூர் பெண்களால் நடத்தப்படும் கடைகளில் பிரத்யேக கைவினைப் பொருட்கள் கிடைக்கின்றன.

Darshana Darshu

காசிஸ் ஆதிவாசிகள்

காசிஸ் ஆதிவாசிகள்


காசிஸ், ஜைன்டைஸ், கரோஸ் ஆகிய ஆதிவாசிகள் மேகலயா மாநிலத்தின் முக்கியமான மூன்று பூர்வகுடிகள் ஆவார்கள். காசிஸ் மலைப்பகுதியில் இருக்கும் ஷில்லாங்கில் காசிஸ் இன மக்களே பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இந்தியாவில் மிகவும் அரிதான தாய்வழி உறவுமுறையின்படி வாழும் அம்மக்கள் பெண்குழந்தை பிறப்பதை விசேஷமாக கருதுகிறார்கள். மாப்பிள்ளை பெண் வீட்டுடனே தங்கும் பழக்கமும் இங்கு உள்ளது.

Vikramjit Kakati

ஷில்லாங் வங்காளிகள்

ஷில்லாங் வங்காளிகள்


சைஹ்லெட் மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான வங்காளிகள் இங்கு வசிக்கிறார்கள். ஆங்கிலேயர் காலத்தில் அலுவல் பணிக்காக இங்கே வந்த பல வங்காளிகளுக்கு அடிப்படை வசதிகளை அரசே ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. பாபுஸ் என்றழைக்கப்படும் வங்காளிகள் இப்பகுதியின் வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார்கள். நடுத்தர வர்க்க வங்காளிகளுக்காக பல பள்ளிகளை இங்கே உருவாக்கியிருக்கிறார்கள்.

Ayomoy

எப்போது செல்லாம் ?

எப்போது செல்லாம் ?


குளிர் மற்றும் மழைக்காலத்திற்கு அடுத்து வரும் மாதங்களான மார்ச், ஏப்ரல், மே வரையிலும், செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலும் ஷில்லாங் பயணிக்கலாம்.

Sindhuja0505

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


நாட்டின் பிற பகுதிகளுடன் பல வழிகளில் இணைக்கப்பட்டுள்ள ஷில்லாங் நகருக்கு தேசிய நெடுஞ்சாலை எண் 40ன் வழியாக செல்லலாம். கெளஹாத்தியில் இருந்து இந்த நெடுஞ்சாலை வழியாக ஷில்லாங் செல்லலாம்.

Sujan Bandyopadhyay

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்