» »கேரளாவின் "கொடுங்கள்ளூர் காளி"யைப் பற்றிய விசித்திர உண்மைகள்!!

கேரளாவின் "கொடுங்கள்ளூர் காளி"யைப் பற்றிய விசித்திர உண்மைகள்!!

By: Bala Karthik

தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டு பத்ரகாளி வடிவத்தில் காணப்படும் கொடுங்கள்ளூர் ஸ்ரீ குரும்பா பகவதி ஆலயம், மிகவும் பழமை வாய்ந்ததோர் ஆலயமாகும். இந்த தெய்வத்தை 'ஸ்ரீ குரும்பா' எனவும் அன்பாக 'கொடுங்கள்ளூர் அம்மா அல்லது கொடுங்கள்ளூரின் தாய்' என அவள் பக்தர்களால் அழைக்கப்படுகிறது.

இங்கே காணப்படும் சிலையானது தேவியின் ருத்ர உருவத்தில் காட்சியளிக்க, எட்டு கைகளை கொண்டு ஒவ்வோர் கைகளிலும் ஒவ்வொரு ஆயுதம் ஏந்தி இருக்கிறாள். ஒரு கையில்...அரக்கன் தருகனின் தலையை வைத்திருக்க, மற்றுமொரு கரத்தில் மணியையும், அடுத்த கரத்தில் வாளையும், அதற்கு அடுத்த கரத்தில் சிலம்பு என அவள் பார்ப்பதற்கு படும் பயங்கரமாக காட்சியளித்து பக்தர்களுக்கு அருள் வழங்குகிறாள்.

இருப்பினும், இன்று வரை என்று இந்த ஆலயமானது கட்டப்பட்டது என யாருக்கும் தெரியவில்லை என்பது தான் விசித்திரமான உண்மை. சிலரோ, தேவி ஆலயமாக இருப்பதற்கு முன்பு இந்த ஆலயமானது புத்த கோம்பாவாக இருந்தது என்றும் சொல்கின்றனர். ஆதர கூற்றுகளின்படி, சிவபெருமானின் ஆலயம் தான் தேவி ஆலயத்தை காட்டிலும் பழமை வாய்ந்த ஒன்று என்றும், அதன்பின்னர் ஆலயத்தின் தோற்றத்தில் இவை சேர்க்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 புராணங்களின் கூற்று:

புராணங்களின் கூற்று:

புராணங்களின் படி, பல நூற்றாண்டுக்கு முன்னர் இந்த சந்நதியானது கட்டப்பட்டதாகவும், அதுவும் சிறப்பு வாய்ந்த காரணத்திற்காக நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மற்றுமோர் புராணத்தின்படி, கேரளாவை பரசுராமர் தோற்றுவிக்க, அவர் தருகா என்னும் அரக்கனால் தொந்தரவுகளை சந்திக்க தொடங்கியதாகவும், அதனால், அந்த அசூரனின் ஆட்டங்களுக்கு முடிவுகட்ட எண்ணிய அவர், சிவபெருமானை நினைத்து தவம் மேற்கொண்டுள்ளார் என்றும்... அவர் சக்தியை நோக்கி தன் வழிபடுதலை தொடங்க சொல்ல, அவள் பத்ரகாளி வேடமிட்டு அந்த அரக்கன் தருகாவை துவம்சம் செய்ய, அதனால் பரசுராமர் மரியாதை நிமித்தமாக சக்திக்கு அங்கேயே ஒரு ஆலயம் அமைத்ததாகவும் வரலாறு கூறுகிறது.

மற்றுமோர் பிரசித்திபெற்ற புராணமாக, இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரத்தின் நாயகியான கண்ணகியின் கதை அமைகிறது. கற்புக்கரசி கண்ணகி, பெரும் தொழில் வளம் கொண்டவரின் மகனான கோவளனை மனமுடிக்க...ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்க்கையானது வரண்ட பாலைவனமாய் மாறிவிட, அவனை கவர்ந்த நாட்டிய மங்கை மாதவி என்பவள் மனதில் சரணடைந்தான் கோவளன்.

Aruna Radhakrishnan

 புராணங்களின் கூற்று:

புராணங்களின் கூற்று:

மாதவி, தன் மனதின் திருப்திக்கு கோவலனை முடிந்தளவு உபயோகித்துகொண்டு அதன் பின்னர் அவனை வீட்டை விட்டு வெளியே துரத்தினாள். வெட்கம் கொண்ட கோவலன், வேறு வழியற்று முகம் பார்க்க அருகதையற்று கண்ணகியை அடைய, அவள் தங்களுடைய வாழ்க்கை சிறக்க அவள் அணிந்திருந்த சிலம்பினை விற்றுவருமாறு கோவலனிடம் கூறினாள். மதுரையில் அவர்களுக்கு பிடித்த மாதிரியான ஒரு வாழ்க்கையானது சிலம்பினை விற்று, அதில் கிடைக்கும் நிதியில் தன்னையும், தன் கணவனையும் கரை சேர்க்கும் என நம்பினாள் கண்ணகி.

அதே நேரத்தில், விதியானது வேறு வழியில் விளையாட...நகரத்தின் பொற்கொல்லன் ஒருவன் இராணியின் முத்து பதித்த சிலம்பை திருடி சென்றான். இதனை அறியாத கோவலன், அதே பொற்கொல்லனிடம் சென்று கண்ணகியின் காற் சிலம்பை விற்பதற்கு விலை பேச, அது இராணியின் சிலம்புக்கு ஒத்திருந்தது. அந்த பொற்கொல்லன் ஒரு சதித் திட்டத்தை தீட்டி, இராணியின் சிலம்பை திருடியது கோவலன் தான் என சிக்கவைக்க எண்ணினான். அவன் போட்ட திட்டப்படி, கோவலனை பிடித்து நீதிமன்றத்துக்கு இழுத்துவர, சிலம்பை கோவலன் திருடியதாய் கூறிய மன்னன் அவன் தலையை துண்டிக்க ஆணையிட்டார்.

இதனை தெரிந்துகொண்ட கண்ணகி, தன் கணவனை காப்பாற்ற வேகமாக நீதிமன்றம் வர...அதற்குள் விதியானது அப்பாவி அவனை சதி வலையில் சிக்க வைத்து அகல இயலாமல் உயிரையும் பறித்து சென்றது. அவள் கொதித்தெழுந்த மனம் கொண்டு ராஜாவிடம் மற்றுமோர் சிலம்பினை உடைக்க சொல்ல, கண்ணகியின் சிலம்பு தன் கணவன் குற்றம் அற்றவன் என்பதை அங்கிருந்தவர்களுக்கு நிரூபித்து ஒட்டுமொத்த இராஜ்ஜியத்தையும் தீக்கிரையாக பொசுக்கி தள்ளியது. இந்த சம்பவங்கள் நடந்தேறி, மதுரையை எரித்த கண்ணகி இந்த இடத்திற்கு வந்ததாகவும்...தேவியை வணங்கியபடி இருந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அதனால், தேவி சிலையை அத்தகைய கோணத்தில் கண்டே இன்று வரை அங்கு வருபவர்கள் வணங்குவதாக சொல்லப்படுகிறது.

Krishnakumarsnm

 சிறு உருவ சந்நிதி:

சிறு உருவ சந்நிதி:

ஆலயத்தின் இடது புறத்தில் ஒரு தனித்துவமிக்க சந்நிதி காணப்பட, அது வைசூரிமாலாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது. இந்த கோவிலானது இடைக்காலத்தில் கட்டியதாகவும் அதன் மேற்கூறை திறந்த நிலையில் காணப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே காணப்படும் தெய்வங்கள் பெரியம்மையையும், சின்னம்மையையும், கூகைக்கட்டையும், மற்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்த வல்லதாகும். இதனை உற்றுநோக்கி நாம் பார்த்தால், தேவிக்காக காணப்படும் சிலையானது சிதைந்திருக்க, எத்தகைய எதிர்கால சிறப்பம்சங்களும் அற்றதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே வரும் பக்தர்கள், மஞ்சளையும், கருமிளகையும் காணிக்கையாக அம்மனுக்கு செலுத்த, அதனால் அவள் தோல் வியாதியிலிருந்து அவர்களை காப்பாற்றுவதாகவும் நம்பப்படுகிறது.

வலது பக்கத்தில் மற்றுமோர் சிறிய ஆலயம் காணப்பட, அது க்ஷேத்ராபாலகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒன்று என்றும் தெரிய வருகிறது. இவர் தான் இந்த ஆலயத்தின் தெய்வங்களுக்கும், தேவியை வழிபடும் பக்தர்களுக்கும் காவலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் ஒரு சிறிய ஆலயம் காணப்பட, அது தவிண்டுமுத்தி அல்லது உமி பாட்டிக்கு அர்ப்பணிக்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இந்த சிலையானது உமியால் மூடப்பட்டிருக்க, அதன்படி அழகிய காட்சியை பக்தர்களுக்கு தந்து மனதை அமைதிபடுத்துகிறது இந்த ஆலயம்.

Balamurugan Srinivasan

 சிறு உருவ சந்நிதி:

சிறு உருவ சந்நிதி:


ஆஸ்துமா, காசநோய் போன்ற பல மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், இந்த தவிண்டுமுத்தி ஆலயத்தின் அருளால் குணமடைவதாகவும், அதனால், இங்கே வரும் பக்தர்கள் உமி தூளையும் காணிக்கையாக தருவதோடு, சிலைமேல் பூசப்படும் உமியை ஒரு சிட்டிகை அளவுக்கு எடுத்துகொண்டு உடம்பில் பூசிகொள்ள...ஆஸ்துமா, காசநோய் போன்ற பல மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைகிறது என்றும் சொல்லப்படுகிறது.

முக்கிய தெய்வத்தை அடுத்து ஆலய கருவறையானது அமைந்து முக்கிய தெய்வத்துக்கு நிகராக வடக்கு திசையை நோக்கி காணப்படுகிறது. இங்கே சப்தமத்ருகா அல்லது எழு தாயின் வீடுகள் காணப்படுவதாக தெரிய வருகிறது.

Ssriram mt

 பரணி திருவிழா:

பரணி திருவிழா:


கேரளாவில் கொண்டாடப்படும் முக்கிய ஆலய திருவிழாக்களுள் ஒன்று தான் இந்த பரணி திருவிழாவாகும். இந்த திருவிழாவானது, மலையாள மாதத்தின் கும்ப லக்னத்தில் பரணி நட்சத்திரத்தில் தொடங்கி, ஏழு நாட்கள் நடைபெற, பரணி நட்சத்திரத்தின் மீன லக்னத்தில் இது முடிவடைகிறது. அதனால் இதனை ‘மீன பரணி' என்றும் அழைப்பர். பொதுவாக, இந்த திருவிழாவானது மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் நடைபெறுகிறது.

இந்த விழாவானது கோழிக்கல்லு மூடல் என்னும் சம்பிரதாயத்தில் தொடங்க, சேவலானது தியாகம் செய்யப்பட்டு அதன் இரத்தத்தை சிந்த வைக்கப்படுகிறது. இந்த பயிற்சியானது செய்யப்பட, உள்ளூர் வசிப்பிட வாசிகள் யாரும் இந்த விழாவில் பங்கேற்பதில்லை என்பது தான் சுவாரஷ்யமான ஒரு தகவல். இந்த ஆலயத்துக்கு தயக்கத்துடன் வந்தாலும் ஏழு நாட்கள் இந்த ஆலயம் மூடப்பட்டு திருவிழா முடிந்தே திறக்கப்படுகிறது.


Ssriram mt

 பரணி திருவிழா:

பரணி திருவிழா:


இந்த விழாவின் மற்றுமோர் முக்கிய அங்கமாக காவு தீண்டல் காணப்படுகிறது. இங்கே காணப்படும் புரவலர் தெய்வமாக க்ரங்கனோர் அரச குடும்பம் இருக்க, இந்த விழாவின் முக்கியமாக இராஜா காணப்படுகிறார். அவர் ஆலமரத்தை சுற்றி கட்டப்பட்டிருக்கும் நடைமேடையின் உச்சியில் நின்று, பட்டு குடையை விரிக்க, ஆலயத்தின் சுற்றாடலில் சாதி, சமய... பிரிவினையற்று யார் வேண்டுமென்றாலும் உள்ளே நுழைவதற்கான ஒரு சைகையாக அது எடுத்துகொள்ளப்படுகிறது.

அதன்பின்னர், பக்தர்கள் அந்த ஆலயத்தை மூன்று முறை தன் கைகளில் குச்சியினை தாங்கிகொண்டு சுற்றிவர, அதன்பிறகு தான் ஆலயத்தின் உள்ளே அவர்கள் செல்கின்றனர். இந்த சம்பிரதாயமானது தருகா அரக்கனை கொன்றதற்கான அடையாளமாக கொண்டாடப்பட, குச்சிக்கு பதிலாக அன்று வாள் ஏந்தி அவனை இவ்விடத்தில் பலி தீர்த்ததை அச்சம்பவம் நினைவுபடுத்துகிறது.

Challiyan

 பரணி திருவிழா:

பரணி திருவிழா:

இந்த சம்பிரதாயத்தின் போது, இதனை தேவியின் அசரீரியாக அல்லது வெள்ளிச்சாபாடியாக எடுத்துகொள்ளப்பட, ஆலயத்திற்கு வந்து அம்மனுக்கு சிகப்பு நிற ஆடை உடுத்தி அழகுபார்க்கப்படுகிறது. அவளை பேய் பிடித்ததாக நினைக்கப்பட, கோவிலை சுற்றி ஓர் இசைகருவியின் முழக்கம் வாசிப்பதோடு அனைவரும் ஓடி வருகின்றனர், அந்த ஒலியானது காற்றில் கிழித்துகொண்டு நிற்க, வாள்களின் சத்தமும் அதற்கு ஈடு இணையுடன் காற்றில் வீசப்படுகிறது. சிலர் வாளால் தங்கள் தலையில் பட்ட காயங்களில் இருந்து வரும் ரத்தத்தை சிந்த, அதனால் உண்டாகும் அசரீரியானது ஓலக்குரலாய் கேட்க, அது தான் அம்மனுக்கு பிரியம் என்றும் சொல்லப்படுகிறது.

commons.wikimedia.org

Read more about: travel, temple