» »அடேங்கப்பா... வாயப் பொலக்கவைக்கும் நீர்வீழ்ச்சி #Waterfalls 2

அடேங்கப்பா... வாயப் பொலக்கவைக்கும் நீர்வீழ்ச்சி #Waterfalls 2

Written By: Sabarish

அடர் வனப்பகுதியில் கால்நடையாக சிறிது தூரப் பயணம்... கொஞ்சும் பறவைகளின் ஓசைக் கேட்டுக்கொண்டே, பசுமைக் காற்றை சுவாசித்தபடி மரங்கள் சூழப்பட்ட காட்டின் இடையே திடீரென ஓங்கார ஓசை, கொட்டும் அந்த அருவினைக் காண சற்று திடமான மனநிலையும், விரிந்த கண்களும் தேவை. அப்படியொரு வியப்பூட்டும், உச்சி நரம்பினை சிலிர்க்கள் செய்யும் நீர்வீழ்ச்சிதான் ஜோக் நீர்வீழ்ச்சி. வாருங்கள், அப்படி அங்கே என்னவெல்லாம் உள்ளது ? எப்படிச் செல்வது என பார்க்கலாம்.

எங்கே உள்ளது ?

எங்கே உள்ளது ?


கர்நாடகாவில் இருந்து பங்காபூர் வழியாக சுமார் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஜோக் நீர்வீழ்ச்சி. மேற்குத் தொடர்ச்சியின் சோலைவனக் காடுகளில் இருந்து பெருக்கெடுத்து வரும் நீர் சரவதி வனக் காட்டில் பெரிய நீரோடையாக உருவெடுக்கிறது. அங்கிருந்து அடர் வனக்காட்டின் ஊடாக பயணித்து அருவியாக கொட்டும் காட்சி நிச்சயம் உங்களை பிரம்மிப்பில் ஆழ்த்திவிடும்.

SajjadF

ஜோக் நீர்வீழ்ச்சி

ஜோக் நீர்வீழ்ச்சி


மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளில் இருந்து தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் ஜோக் நீர்வீழ்ச்சியின் அந்த கவின்மிகு காட்சியைக் காண உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் ஆண்டுதோறும் இங்கு படையெடுக்கின்றனர். ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

I, Sarvagnya

அருவிக்கு அழகூட்டும் அம்சங்கள்

அருவிக்கு அழகூட்டும் அம்சங்கள்


அருவியைச் சுற்றிலும் பச்சைப் பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும், செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மெருகேற்றக் கூடியவை. ஜோக் நீர்வீழ்ச்சியின் அழகை பயணிகள் ரசிப்பதற்கு என்றே நிறைய அனுகூலமான பகுதிகள் இருக்கின்றன. அதில் மிகவும் முக்கியமானது வேட்கின்ஸ் தளம். ஜோக் நீர்வீழ்ச்சியைச் சுற்றி இருக்கும் ஸ்வர்ண நதியும், ஷராவதி பள்ளத்தாக்கும் பயணிகள் கண்களுக்கு விருந்தாக அமையும்.

Love Nigam

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


ஜோக் நீர்வீழ்ச்சியைச் சுற்றிலும் தவறவிடக்கூடாத வகையில் பல சுற்றுலா அம்சங்கள் நிறம்பிய தலங்கள் உள்ளன. அதில், சன்செட் பாயிண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, கஜனூர் அணை உள்ளிட்டவை பிரசிதிபெற்றவை.

Abhay kulkarni wiki

ஆகும்பே

ஆகும்பே

ஷிமோகா நகரத்திலிருந்து 90 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஆகும்பே, இங்குள்ள சன்செட் பாயிண்ட் காட்சித்தளத்திற்காக பிரசித்தி பெற்றது. பருவநிலை தெளிவாக உள்ள காலங்களில் இந்த காட்சிமுனைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

Dinesh Valke

பள்ளத்தாக்கு

பள்ளத்தாக்கு


நீரோடைகள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதிகள், புரண்டோடும் ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக்கொண்ட பசுமையான பள்ளத்தாக்குகள் போன்றவற்றை சன்செட் பாயிண்ட் காட்சிமுனையிலிருந்து கண்டு ரசிக்கலாம்.

Jishnu.sen

கஜனூர் அணை

கஜனூர் அணை


துங்கா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கஜனூர் அணை ஷிமோகாவிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது ஒரு முக்கியமான பிக்னிக் தலமாகும். யவரேகொப்பா எனும் இடத்தில் லயன் சஃபாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஆர்வமுள்ளவர்கள் இங்கே கண்டிப்பாக பயணம் செய்ய வேண்டும்.

Vinayak Kulkarni

ரசிக்கும் பயணிகள்

ரசிக்கும் பயணிகள்


கொட்டும் நீர்வீழ்ச்சியினை பாதுகாப்புப் பகுதியில் இருந்து கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்

Kaitha Poo Manam

சிலிர்க்கும் நீர்வீழ்ச்சி

சிலிர்க்கும் நீர்வீழ்ச்சி


பச்சைவனக் காட்டின் ஊடாக நடம் உடலை சிலிர்க்கவைக்கும ஜோக் நீர்வீழ்ச்சி

Arkadeep Meta

நீர்வீழ்ச்சியின் தோற்றம்

நீர்வீழ்ச்சியின் தோற்றம்


அடர்வனக் காட்டில் இருந்து சரவதி வனக் காட்டில் பெரிய நீரோடையாக உருவெடுத்து வரும் நீர்

Abinandhanan

பசுமைக் காடு

பசுமைக் காடு


ஜோக் அருவியும், சூழ்ந்துள்ள பசுமைக் மலைக் காடுகளும்

Abhay kulkarni wiki

அருவியின் அடிவாரம்

அருவியின் அடிவாரம்


அருவியில் இருந்து கொட்டும் நீர் சேகரமாகும் பகுதி. நீச்சல் வீரர்களுக்கு செம பாயின்ட்டுங்க...

Kartik Ramanathan

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


ஷிமோகா சென்றடைய பெங்களர் சிட்டி தல்குப்பா எக்ஸ்பிரஸ், தல்குப்பா எக்ஸ்பிரஸ், ஷிமோகா டவுன் பெங்களூரு சிட்டி எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில் சேவைகள் உள்ளன.

Dheepak Ra

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்