» »ஜிபியில் உள்ள மனதை வசியப்படுத்தும் மலைத் தொடர்கள் பற்றிய ஒரு பார்வை!!

ஜிபியில் உள்ள மனதை வசியப்படுத்தும் மலைத் தொடர்கள் பற்றிய ஒரு பார்வை!!

Written By: Balakarthik Balasubramanian

மற்றவர்களை போல நானும், சிலர் வந்து செல்லும் மிகவும் குறைவாக பார்க்க கூடிய இடங்களை தேடினேன். நான் தேடும் இடம் பற்றி சொல்ல வேண்டுமெனில்...இடம் முழுவதும் பச்சை பசேல் என காட்சியளிக்க, இயற்கை அழகை ஒட்டுமொத்தமாக பெற்று, நம்மை அவள் மடியில் தாலாட்டி தூங்க வைக்கும் எழில் மிகுந்த அழகிய இடத்தை தான் நான் தேடினேன். இந்த பெரு நகரங்களில் காணும் கான்கீரீட் காடுகளை பார்த்து, பார்த்து கண்கள் பூத்துவிட, இங்கிருந்து தப்பித்து பச்சை பசேல் என சூழ்ந்திருக்கும் அழகிய காடுகளை தேடி ஓட நான் ஆசை கொண்டேன்.

என் விருப்பங்களை பூர்த்தி செய்ய சஹயாத்ரி சிறந்த இடமாக அமைந்தது. இருப்பினும், என் தேடல் தாகம் தனியாமல் இருக்க, மறைந்திருக்கும் மாணிக்கமான ஜிபியை பற்றி நான் ஆராய்ந்தேன். அந்த பெயர் என் மனதில் ஒரு வித ஈர்ப்பை ஏற்படுத்த, விரைவாக கூகுலின் உதவியுடன் அந்த இட புகைப்படங்களை கண்டேன். அவற்றை கண்ட என் மனம், ஜிபியை பயணத்துக்காக தேர்ந்தெடுத்து அதன் அழகு மத்தியில் சரணடைந்தது. இந்த இடம், ஹிமாச்சல பிரதேசத்தின் தொலைதூரத்தில் காணப்படும் ஒரு பள்ளத்தாக்காகும்.

நான் சற்றும் தாமதிக்காமல், குள்ளுவுக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தேன். இந்த விமான நிலையம், மிகவும் அருகில் காணப்பட, அங்கிருந்து சாலை போக்குவரத்தின் வாயிலாக அவ்விடத்தை அடைய ஆசை கொண்டேன். பூந்தர் விமான நிலையத்திலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் தான் இது காணப்படுகிறது. என் பயணத்தில் நான் கண்ட முதற் காட்சியாக மரவீடுகள் அமைய, அங்கே சில அடுக்கு உயரத்தில் மாடிகளும் காணப்பட, மேலும் உயர்ந்த சரிவுகளில் கொத்தாகவும் காணப்பட்டது.

 பழங்காலத்து கட்டிடக்கலை:

பழங்காலத்து கட்டிடக்கலை:

ஹிமாச்சல பிரதேசத்தின் பஞ்சர் பள்ளத்தாக்கு, பழங்காலத்து கட்டிடக்கலையுடன் ஈர்க்கும் பாணியில் காணப்படுகிறது. இங்கே காணப்படும் நெளிந்திருக்கும் சிற்பங்கள், ஒளியின் ஆதரவுடன் மிளிரும் மேல்மாடம் ஆகியவை நிலப்பரப்புகளுடன் அழகிய காட்சியை கண்களுக்கு தருகிறது. ஜிபியில் காணப்படும் சிறிய குக்கிராமம் பயண ஆர்வலர்களின் கண்களுக்கு புலப்படாதவாறு அமைந்திருக்க, ஆனால், இந்த கிராமமோ இங்கே வருபவர்களுக்கு கூடாரங்கள் அமைக்கவும், விருந்தினர் வீடுகளை கொண்டும்...இந்த இடத்தை பற்றிய பல தகவல்களை நாம் தெரிந்துகொள்ள பெரிதும் உதவுகிறது.

ஜிபியை சுற்றி மலைகள் காணப்பட, அந்த மலைகளை பைன் மரங்களும், கேதுரு மரங்களும் சூழ்ந்திருக்கிறது. இங்கிருந்து நாம் ஒரு மணி நேரம் பயணம் செய்ய, நம்மால் சிறந்ததோர் இமாலய தேசிய பூங்காவை இங்கே பார்க்க முடிகிறது. இங்கிருந்து அழகிய ஜலோரி வழிகளில் நாம் சிறு பயணம் செல்ல, ஜிபி அற்புதமான அடித்தளத்தை அமைத்து தந்து நம்மை அன்புடன் வரவேற்று மலை ஏறுதல், பறவையை காணுதல், மீன் பிடித்தல், அல்லது வெளிபுறங்களில் சுற்றி ரசித்து செல்லுதல் என பல சிறப்பம்சங்களை நம் மனதிற்கு தருகிறது.

Binny V A

பழங்காலத்து கட்டிடக்கலை:

பழங்காலத்து கட்டிடக்கலை:


நான் எனக்கான விருந்தினர் வீட்டின் உள்ளே சென்றேன். எந்த நிகழ்ச்சி நிரலும் இல்லை என்பதால் சாதாரணமாக அந்த இடத்தை நான் சுற்றி பார்த்தேன். நான் தங்கியிருந்த இடத்தை பார்க்க, அங்கே காணப்பட்ட கையால் வரைந்த வரைபடம் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. ஆம், அந்த வரைபடம் தான் நான் செல்ல வேண்டிய பயண பகுதி என்பதை புரிந்துகொண்டேன்.

ஜிபி என்னும் இடத்தின் பெயரை உச்சரிக்க, நம் உதடுகள் உரசுகையிலே மனதில் ஏதேதோ மகிழ்ச்சி தான் பூக்கிறது. இங்கே வரும் மக்கள், இந்த மலையின் சுவாரஸ்யத்தை ரசிக்கும்போதிலும்...மலை வாசஸ்தளங்களுக்கான அலங்காரமற்று அமைதியாகவே இந்த இடம் தென்படுகிறது. இந்த இடமானது சுற்றுலா பயணிகள் குறைவாக வந்து செல்லும் ஒரு இடமென்பதால்...நம்மால் இதன் விளம்பில் நின்று இயற்கையின் அழகை ரசிக்கவும் முடிகிறது.

Bleezebub

 உச்சியில் நின்று ரசிக்க வேண்டிய கடிகார உயரத்தின் அழகு:

உச்சியில் நின்று ரசிக்க வேண்டிய கடிகார உயரத்தின் அழகு:


என்னுடைய முதல் 4 கிலோமீட்டர் உலாவாக, சேனி கிராமத்தில் நான் என் வழிகாட்டியாளருடன் சென்றேன். அந்த குக்கிராமத்தை சுற்றி மலையின் சரிவுகளில் தேவதாரு மரங்கள் அடர்த்தியாக கவர்ந்து காணப்பட, அது என் கண்களுக்கு குளிர்ச்சியான காட்சிகளாக அமைந்தது. அந்த நேரத்தில் சிறியதொரு மாற்றத்தை மட்டுமே நான் உணர்ந்தேன்.

உயர்ந்த பைன் மரங்களின் மத்தியில் நான் நடக்க, நாங்கள் கிராமத்தின் எல்லைப்பகுதியை அடைந்தோம். அங்கே நாங்கள் உயரத்தில் கண்ட கடிகார கோபுரம் எங்களை முதற் பார்வையிலே இயற்கையோடு சேர்த்து கட்டிபோட்டது. அந்த அமைப்பானது ஐந்து மாடிகளை கொண்டிருக்க, அந்த வீடுகள் குறுகியதாகவும் தென்பட்டது. அந்த கோபுரமானது, செங்கல் சுவர் கொண்டு தாங்கி நிற்க, மர பதிவுகள் அதனை வலுப்படுத்தியது.

Ankitwadhwa10

உச்சியில் நின்று ரசிக்க வேண்டிய கடிகார உயரத்தின் அழகு:

உச்சியில் நின்று ரசிக்க வேண்டிய கடிகார உயரத்தின் அழகு:

இந்த கோபுரத்தில் ஒரு இரகசிய சுரங்கபாதையானது அடியில் காணப்படுகிறது. நாங்கள் ஒரு செங்குத்தான மாடியின் வழியாக மேல் ஏறினோம். அந்த மாடியானது மிகப்பெரிய மரத்துண்டுகளை கொண்டு செதுக்கப்பட்டிருந்தது. அந்த கோபுரத்தின் உள்ளே யோகினி சன்னதி என்ற ஒன்றும் காணப்படுகிறது. அந்த கோபுரம், பகடி கட்டிடக்கலை என்பதற்கு அரிதானதோர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது. இது இமாச்சல பிரதேசத்தின் குள்ளு மற்றும் கங்க்ரா மாவட்டங்களில் காணப்படுகிறது
கட்டடம் கட்டுபவர்கள்.

பலகைகள் மற்றும் கற்களை கொண்டு அடுக்குகளாக கட்ட, அவை பிணைந்திருப்பதையும் அங்கிருப்பவர்களுக்கு நான் ஆச்சரியத்துடன் தெரிவித்தேன். இதனால், சுற்றுசூழல் பாதுகாப்பானது தாங்கப்படுவதையும் அங்கிருந்தவர்கள் உணர்ந்தனர். இந்த முறையானது சாய்னி கோபுரத்துக்கு உதவ, ஏறத்தாழ 40 மீட்டர்கள் இது உயரமாக நூற்றாண்டுகளை கடந்து காணப்படுகிறது. இதனால், 1905ஆம் ஆண்டு ஆட்டிவித்த காங்க்ரா நில நடுக்கத்திலிருந்தும் தப்பிப் பிழைத்தது.

அந்த கோபுரத்துக்கு எதிரில், சாய்னி கோட்டையானது இடிபட்டு தகர்ந்த நிலையில் காணப்படுகிறது. இதுவும் அதே பாணியில் கட்டப்பட்ட ஒன்றாகும். அந்த கோட்டை இன்று கிருஷ்ண ஆலயமாக தென்படுகிறது. கோபுரத்தின் மற்றும் ஒரு புறத்தில் சேமிப்பு கிடங்கு வீடு காணப்படுகிறது. இங்கே, ஸ்ரீநிஃபா ரிஷியின் மத கலைப்பொருட்களை நம்மால் பார்க்க முடிகிறது. இவர் தான் பஞ்சார் பள்ளத்தாக்கின் முக்கிய தெய்வமாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ankitwadhwa10

 புனித ஏரி:

புனித ஏரி:

அழகிய செங்குத்தான பயணம் வாயிலாக, ஜிபியிலிருந்து ஜலோரிக்கு நாம் செல்கிறோம். இது ஒரு துரோக திருப்பங்களாக அமைய, இதன் வழியே நாங்கள் பயணித்துகொண்டிருந்தோம். இந்த நடைபாதை எங்கள் பயணத்திற்கு முன்னோடியாக இருந்தது. இது, மேல் வழியிலிருந்து குறுக்கே எதிர்புறத்தில் சென்றது. அப்படியே செல்ல, அது செரோயுல் ஏரியை அடைந்தது. மற்றுமோர் வழியாக, இடிபட்ட ஒரு பழங்காலத்து கோட்டையான ராக்பூர் கோட்டை தென்படுகிறது.

நாம் அழகிய ஐந்து கிலோமீட்டர் பயணத்தின் வாயிலாக செரோயுல் ஏரியை அடைகிறோம். மலைமுகடினை நாம் கடந்து செல்ல வெற்று மலையுச்சி ஒன்று வெளியில் வந்து எட்டிபார்க்கிறது. அதன் எல்லைகள் பச்சை பசேல் என காட்சியளிக்க, அதன் வழியாக நாம் அழகிய கருவாலி மரங்கள் நிறைந்த காடுகளை அடைகிறோம். ஒரு புல்வெளி பாதையில் நாம் செல்ல, அங்கே காணும் குட்டையில் அமர ஆசைகொண்டோம். அந்த குட்டையை சுற்றி சிகரங்கள் சிதைந்து காணப்பட, கற்றை மேகங்கள் எங்களை சுற்றி காணப்பட்டது.

இப்படி நாம் நடந்து சென்று, இறுதியாக செரோயுலின் தூய்மையான தண்ணீரை கண்டு மனம் துள்ளுகிறோம். இந்த ஏரியை புனித தன்மையுடன் நாம் கருத, அதன் ஆற்றங்கரையில் ஒரு சிறிய சன்னதியும் காணப்படுகிறது. நாம் மீண்டும் திரும்பும் வழியில், மதிய வேலையில் வனத்தை பனி மூடி காட்சியளிக்க, அதன் நிறமானது சாம்பல் வண்ணத்தில் காணப்படுகிறது. சூரிய ஒளியானது செல்ல, செல்ல காடுகளில் நிசப்தம் நிலவி, நம் மனதில் ஒரு ஆச்சரியம் ததும்பி அமைதிபடுத்துகிறது.

Travelling Slacker

 இடிபாடுகளுடன் காணும் ரகுபூர் கோட்டை:

இடிபாடுகளுடன் காணும் ரகுபூர் கோட்டை:

இந்த ரகுபூர் கோட்டை இடிந்து காணப்பட, இதன் உச்சியிலிருந்து நாம் பார்க்க செராஜ் பள்ளத்தாக்கின் அழகினை நம்மால் காண முடிகிறது. ஜலோரி வழியிலிருந்து 4கிலோமீட்டர் நாம் செல்ல, இந்த இடிபாடுகளுடன் காணப்படும் கோட்டையின் சுவர்கள் கம்பீரமாக நின்று நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து கீழே அடர்ந்த காடுகளின் வழியே நாம் செல்ல, செங்குத்தான ஏற்றத்தை நாம் அடைகிறோம். அங்கிருந்து நாம் நீண்ட தூரம் திறந்த புல்வெளிகளின் வழியே நடந்து செல்கிறோம்.

Ankitwadhwa10

இடிபாடுகளுடன் காணும் ரகுபூர் கோட்டை:

இடிபாடுகளுடன் காணும் ரகுபூர் கோட்டை:


மாலைப் பொழுதில் பனிகள் மூட, வானமானது சற்று சோர்வுடனே காணப்படுவதோடு, மூடியும் காணப்படுவது நம் நடையில் ஒரு வித நளின உணர்வை ஏற்படுத்துகிறது. அந்த அழகிய மாலைபொழுதின் வெளிச்சத்தில் வானம் திறந்து காணப்பட, அது நிலப்பரப்பின் மங்கலை மாற்றி மனதை இதமாக்குகிறது. அடுத்து 18 கிலோமீட்டர் நாம் நீண்ட தூரம் பயணிக்க, செரோயுளையும், ரகுப்பூரையும் கடக்கும் கலைப்பில் சோர்வு நம்மை தொற்றிகொள்கிறது. என் பாத யாத்திரையின் இறுதி தடத்தை நான் ரசித்து வானவில்லை நோக்கி குதிக்க, அது என் வாழ்க்கையை நோக்கி நான் குதித்ததோர் அழகிய உணர்வினை தந்து மனதை குஷிப்படுத்தியது.

Nathan Pratyksh Khanna

Read more about: travel, hills