» »வனக்கிராமம் போக பிடிக்குமா உங்களுக்கு? இப்படி ஒரு இடத்திற்கு ட்ரை பண்ணுங்களேன்!!

வனக்கிராமம் போக பிடிக்குமா உங்களுக்கு? இப்படி ஒரு இடத்திற்கு ட்ரை பண்ணுங்களேன்!!

By: Balakarthik Balasubramanian

வங்காளத்தின் க்ராண்ட் பள்ளத்தாக்கின் இருப்பிடமான சந்திரகோனாவின் நிலப்பரப்பானது மிட்னாபூர் மேற்கில் காணப்பட, அதன் வளமானது குறைந்தும், வறண்டும் காணப்படுகிறது. சந்திரகோனாவின் சிறிய குக்கிராமமானது மிகவும் முக்கியம் வாய்ந்து காணப்பட, ராஜ்புட் ஆட்சியின்போது 16ஆம் நூற்றாண்டில் தழைத்தோங்கிய ஒரு இடம் என்றும் நமக்கு தெரிய வருகிறது. ஐன் இ அக்பரி என்பவரால் இவ்விடத்திற்கு இப்பெயர் வந்ததாகவும், முகலாய பேரரசரின் அக்பர் ஆட்சிகாலத்தில் அதற்கான பதிவு காணப்பட்டதாகவும் நமக்கு தெரிய வருகிறது.

கடந்த கால மகிமைகள் பேசப்பட மறுத்து மறந்துபோனாலும்...இங்கே சில நொறுங்கிய மாளிகைகளும், சில டெரகோட்டா கோவில்களும் இந்த காடுகளில் காணப்பட, நகரத்தின் விளிம்புகள் பாதிப்புடன் காணப்படுகிறது. ஆனால், இன்று வரை இந்த இடமானது மிகவும் சௌகரியமான அடித்தளத்தை கொண்டு கணவாய்களும், காங்கோனி தண்டாவின் ஆழ்பள்ளத்தாக்குகள் என காணப்படுகிறது.

வனக்கிராமம் போக பிடிக்குமா உங்களுக்கு? இப்படி ஒரு இடத்திற்கு ட்ரை பண்ணுங்களேன்!!

அதன்பிறகே இந்த இடமானது வங்காளத்தின் க்ராண்ட் பள்ளத்தாக்கு என்றழைக்கப்பட்டது. இங்கே சோர்வாக காணப்படும் மேற்கு மிட்னாபூரிலிருந்து க்ராண்ட் பள்ளத்தாக்கின் மேற்கு வனமென மாயாஜால பயணத்தினை நாம் மேற்கொள்ள, சிவப்பு நிற பாறை நிலங்களானது கீழ்க்காணும் நம்பமுடியாத பள்ளத்தாக்கினை நோக்கி நம்மை அழைத்து செல்கிறது. மேலும் சீரற்ற பாறைகளும் செந்நிற களிமண்ணுடன் காணப்பட, காலை கதிரவன் எழுச்சியில் அழகிய சிவப்பு வரையறைகளும் நம்மை வெகுவாக கவர்வதோடு அடிவானத்தையும் ஆள (நிரம்ப) தொடங்குகிறது.

ஜாலமிக்க அனுபவம்:

உங்களது வலது பக்கத்தின் கீழே தூரம் செல்ல, தெள்ள தெளிவாக சிலப்பதி நதியானது நம் கண்களுக்கு கர்வமின்றி காட்சியளிக்கிறது. அங்கிருந்து நாம் கடந்து செல்ல பள்ளத்தாக்குகளின் தரையை நாம் அடைகிறோம். இந்த பள்ளத்தாக்கானது மாவை போன்ற வெள்ளை நிற மணற்கட்டுகளை கொண்டிருக்க, அங்கிருந்து அழகிய வரையறை பகுதியை நாம் கீழே செல்வதன் மூலம் அடைகிறோம். அவ்விடம் நம் மனதினை கரைத்து மாயாஜாலத்தால் மனதினை கட்டிப்போட்டு செல்லவிடாமலும் தடுக்கிறது.

வனக்கிராமம் போக பிடிக்குமா உங்களுக்கு? இப்படி ஒரு இடத்திற்கு ட்ரை பண்ணுங்களேன்!!

மேலிருந்து நாம் கடந்து செல்ல இந்த பள்ளத்தாக்குகளில் மனதினை தொலைத்து தேட, அருகில் காணப்படும் இடமானது எண்ணற்ற கலவைகளை கொண்டு மனதில் ஓர் புதுவித உணர்வினை படர செய்கிறது. இங்கே வீசும் இயற்கை காற்றும், விழும் நீர்துளிகளுமென இணைந்து நம்மை தள்ள இங்கே செலவிடும் நம் நேரமானது காலத்தால் அழியாத காட்சியாக கண்ணாடி மனதில் பதிந்து உளியால் நினைவுகளை செதுக்குகிறது. பாறை கணவாயில் செதுக்கப்பட்டிருக்க, நிலப்பரப்புகளும் மனதில் பரவசத்தை அள்ளி தெளிக்கிறது.

யார் ஒருவர் இங்கே வருவதன் மூலம் கீழே ஆழத்தில் கன்கோனியை அடைகின்றனரோ அவர்கள் இங்கே வண்ணம் மாறும் காட்சிகளின் முன் மனதினை தொலைக்கின்றனர் என்பதே உண்மை. துரு போன்ற சிவப்பு நிறமும் என சில மஞ்சள் நிற சாயல்களையும் இங்கே நாம் காண...வெளிறிய தானிய நிறத்தில் தொடங்கி புத்திசாலித்தனமான தங்க நிறத்தை, அது நமக்கு பரிசளிக்கிறது.

வனக்கிராமம் போக பிடிக்குமா உங்களுக்கு? இப்படி ஒரு இடத்திற்கு ட்ரை பண்ணுங்களேன்!!

அதிகாலை பொழுதில் கதிரவனின் கதிர்களானது மூலையை ஆக்கிரமிக்க, பள்ளத்தாக்கையும் அவை சூழ்கிறது. அதோடு, வெவ்வேறு வடிவமைப்புகளில் அது காணப்பட பாறை முகப்புகள் பள்ளம் கொண்டு காட்சியளிக்கிறது.

சிலப்பதி நதி:

நாம் இங்கே வளைந்து நெளிந்து நம் பயணத்தில் செல்ல, இங்கே ஓடும் ஒரு நதியானது நம் மனதினை இதமாக்க, பள்ளத்தாக்குகள் சில செதுக்கப்பட்டு மாடிகள் போல் ஆழத்தில் காட்சியளிப்பதும் நம் கண்களை கொள்ளை கொள்கிறது. இந்த பயணமானது நம்மை சிலப்பதி நதியின் விளிம்பை நோக்கி அழைத்து செல்ல, இங்கே மீன்பிடி வீரர்களை நம்மால் பார்க்க முடிகிறது. அவர்கள் கணுக்கால் அளவு தண்ணீரில் நிற்க, கைகளில் பிடி வலைகளையும் தாங்கிகொண்டிருக்கின்றனர். அவர்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, பாரம்பரிய வலைகளின் உதவியுடன் மீனை தேடி செல்ல, வரும்பொழுது வலை முழுக்க மீன் குவிந்துதான் கிடக்கிறது.

அதன்பின்னர், அங்கே செல்பவர்கள் பாறைகளால் வடிவமைக்கப்பட்ட தூண்களை பார்க்க, அதனை குகைகளானது சூழ்ந்திருக்கிறது. ஆம், இங்கே வியப்பூட்டும் குகையானது காணப்பட, செதுக்கப்பட்ட தூண்களும் முகட்டின் அருகாமையில் ஒரு நுழைவாயிலும் காணப்படுகிறது. அங்கே நாம் செங்குத்தான பக்க அறையை நோக்கி செல்ல, உள்ளூர் வாசிகளின் மூலம் பகசூரா குகை பற்றிய கதையையும் நாம் தெரிந்துக்கொள்கிறோம்.

மஹாபாரதத்தின் கதையான இது, பாண்டவர்கள் வனவாசம் சென்றபொழுது அவிழ்க்கப்பட்ட முடிச்சுகளெனவும் சொல்லப்படுகிறது. ஆம், பாண்டவர்கள் தன் தாயுடன் இங்கே வந்ததாகவும், இங்கே அவர்களை பகசூரா திகிழடைய செய்து பயம் காட்டியதாகவும் தெரிகிறது.

பகசூரா குகை:

அரக்கன் ஒருவன் மிகவும் எளிமையாக உணவு உண்ண ஆசைக்கொண்டு, ஒவ்வொரு நாளும் தன் அருகில் இருக்கும் கிராமத்தில் ஒவ்வொருவரை அவன் வேட்டையாடி அந்த மாமிசங்களை குகைக்கு எடுத்து வந்துள்ளான். பாண்டவர்கள் ஒரு பிராமண குடும்பத்துடன் தங்கியிருக்க, அவர்கள் அரக்கனுக்கு தியாகம் செய்ய வேண்டிய நாள் வந்திருக்கிறது.

வனக்கிராமம் போக பிடிக்குமா உங்களுக்கு? இப்படி ஒரு இடத்திற்கு ட்ரை பண்ணுங்களேன்!!

குந்தியின் கூற்றுபடி, பீமன் போவதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறான். அதனால், பீமனுக்கும் அந்த அரக்கனுக்கும் ஓர் சண்டை உருவாக, பீமன் அரக்கனை வென்று அந்நாள் அடக்கினான். அந்த நாள் முதல் அவன் பாறையாக சுருங்க, அதன்பிறகு பள்ளத்தாக்கானது உருவாகியதாக உள்ளூர் புராணங்கள் உரைக்கிறது.

இந்த பள்ளத்தாக்கிற்கு நாம் காலை பொழுதிலோ அல்லது மதியத்தை கடந்தோ வருவதன் மூலம் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தை நம்மால் இங்கே பார்த்து மனமகிழ முடிகிறது. இந்த இடங்கள், வார விடுமுறையின் போது கூட்டம் நிரம்பி வழிந்து இருக்க, கொல்கத்தாவிலிருந்து இந்த நகரமானது 133 கிலோமீட்டரில் காணப்பட, சந்திரகோனா கிராமத்திலிருந்து 34 கிலோமீட்டர் தொலைவில் இந்த பள்ளத்தாக்கானது காணப்படுகிறது.

Read more about: travel, tour