• Follow NativePlanet
Share
» »டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் இந்த சுற்றுலாத் தலங்களுக்கு தான் செல்ல வேண்டும் – கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க!

டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டின் இந்த சுற்றுலாத் தலங்களுக்கு தான் செல்ல வேண்டும் – கட்டாயம் மிஸ் பண்ணிடாதீங்க!

ஆண்டின் கடைசி மாதத்தில், தமிழகமெங்கும் மழை பெய்ய, வெயில் சுட்டெரிக்கும் இடங்கள் கூட நம்மை மிதமான மழையுடன் வரவேற்கும் இந்த சமயத்தில் ஒரு குட்டி ட்ரிப் நீங்கள் ஏன் செல்லக் கூடாது? இந்த நேரத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு சென்றால மலைச்சரிவில் நீங்கள் சிக்கிக்கொள்ள நேரிடும். ஆதலால் வரலாற்று சுற்றுலாத் தலங்கள் முதல் பாதுகாப்பான மலைவாசஸ்தலங்கள் வரை தமிழகத்தில் நீங்கள் டிசம்பர் மாதத்தில் பார்க்க வேண்டிய அழகிய சுற்றுலாத் தலங்களின் லிஸ்ட் இதோ!

theni

தேனி

பசுமை மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய மாவட்டமாகும். ஏராளமான ஆறுகள் மற்றும் அணைகளைக் கொண்டுள்ள தேனி 27 காடுகளின் இருப்பிடமாக உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமை குடி கொண்டுள்ளது. சுருளி நீர்வீழ்ச்சி, மேகமலை, கும்பக்கரை அருவி, போடிநாயக்கனூர், பல கோவில்கள் மற்றும் அணைகள் என தேனியில் எங்கு சென்றாலும் அது நமக்கு சுற்றுலாத் தலமே.

கன்னியாகுமரி

தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்து இருக்கும் கன்னியாகுமரி வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு மாவட்டமாகும். ஆகஸ்ட் மாதத்தில் இங்கு செல்லும் போது கோடை வெயில் தணிந்து இதமான வானிலை நிலவுகிறது. திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், தாணுமாலயன் கோவில், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி கடற்கரை, மெழுகு அருங்காட்சியகம், சங்குத்துறை கடற்கரை, ஒலகருவி அருவி ஆகியவை நீங்கள் கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

tirunelveli

திருநெல்வேலி

பல்வேறு புவியியல் அம்சங்களின் சங்கமமாக மலைகள், காடுகள், நெல் வயல்கள், கடல் மற்றும் வறண்ட நிலங்கள் ஆகிய அனைத்தையும் திருநெல்வேலி உள்ளடக்கி சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. திருநெல்வேலி ஒரு பழங்கால குடியேற்றமாக கருதப்படுகிறது. முற்காலப் பாண்டியர்கள், இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மலபார் மற்றும் திருநெல்வேலி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு என பல மன்னர்களின் ஆட்சி புரிந்ததற்கான சான்றுகளை நாம் இங்கே காணலாம். நெல்லையப்பர் கோவில், மணிமுத்தாறு அருவி, பாபநாசம், கழுகுமலை, மாஞ்சோலை, கூந்தங்குலம் பறவைகள் சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், மேலும் பல கோவில்கள் மற்றும் அருவிகள் என நெல்லையில் நீங்கள் பார்ப்பதற்க்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

ஏற்காடு

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஏற்காடு அதன் பரந்த பசுமையான காடுகள், வளமான காபி தோட்டங்கள், தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்காக பெயர் பெற்றது. எமரால்டு ஏரி, மான் பூங்கா, 32 கிமீ லூப் ரோடு, டிப்பரரி வியூ பாயின்ட், லேடி சீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ரோஸ் கார்டன், கோட்டச்சேடு தேக்கு காடு, தாவரவியல் பூங்கா, குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா, பட்டுப் பண்ணை ஆகியவற்றை நீங்கள் இங்கு கட்டாயம் பார்வையிட வேண்டும்.

meghamalai

மேகமலை

'ஹைவேவிஸ் மலைகள்' என்று பிரபலமாக அழைக்கப்படும் மேகமலை, மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு ஆராயப்படாத சொர்க்கமாகும். நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து அமைதியான ஒரு இடைவெளியை நீங்கள் தேடுகிறீர்களானால், மேகமலை உங்களுக்கு ஒரு சரியான தேர்வாகும். மேகமலை வனவிலங்கு சரணாலயம், ஹைவேவி அணை, மேகமலை வியூபாயின்ட், மணலார் அணை, சுருளி நீர்வீழ்ச்சி, இரவங்களார் அணை மற்றும் மகாராஜா மெட்டு ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

சென்னை

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை எப்பொழுதுமே சூடாக இருக்கும் என்று பலர் நினைக்கின்றனர். சென்னையின் வெயிலில் இருந்து தப்பித்து சென்னையின் சுற்றுலாத் தலங்களை காண இதுவே சரியான நேரமாகும். இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை சுவாரஸ்யமாக வடிவமைக்கப்பட்ட கோயில்கள், கடற்கரைகள், கோட்டைகள், பல வகையான வித்தியாசமான உணவகங்களைக் கொண்டுள்ளது.

kollihills1

கொல்லி மலை

'மௌண்டெய்ன் ஆஃப் டெத்' எனப்படும் மிரட்டலான பெயர் கொண்ட இந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கண்கவர் மலைவாசஸ்தலமாகும். இயற்கை அழகும் மத முக்கியத்துவமும் வாய்ந்த கொல்லி மலை தமிழ்நாட்டின் ஒரு ஆராயப்படாத இயற்கை அதிசயமாகும். புகழ்பெற்ற அரபளீஸ்வரர் கோயில், சித்தர் குகைகள், அகயா கங்கை நீர்வீழ்ச்சிகள், தாவரவியல் பூங்கா, மாசிலா நீர்வீழ்ச்சி, மற்றும் செல்லூர் வியூ பாயிண்ட் ஆகியவை இப்பகுதியின் பிரபலமான இடங்களாகும். இப்பகுதியில் பயணிகளை கவரும் வகையில் தமிழக அரசு படகு இல்லம் அமைத்துள்ளது.

மதுரை

தமிழ்நாட்டின் கலாச்சார தலைநகரமான மதுரை தூங்கா நகரமாக சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறது. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், கள்ளழகர் கோவில், கூடல் அழகர் கோவில் என எண்ணற்ற வரலாற்று சுற்றுலாத் தலங்கள் இங்கு உள்ளன. பரபரப்பான பஜார் மற்றும் அருமையான தெரு உணவுகளுடன், மதுரையில் பாரம்பரிய நடைப்பயணங்கள் நாள் முழுவதும் நடத்தப்படுகின்றன. மதுரை சென்றால் கட்டாயம் மதுரை பேமஸ் உணவுகளை சுவைக்க மறக்காதீர்கள்.

மேற்கூறப்பட்ட அனைத்து இடங்களும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுடன் சாலை மார்க்கமாகவும், அருகிலுள்ள நகரங்களின் ரயில் மற்றும் விமான மார்க்கமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிவிடும். ஆகவே, ஆகஸ்ட் மாதத்திலேயே மேற்கூறிய அழகான இடங்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரசித்துவிட்டு வாருங்கள்!

More News

    Read more about: travel tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+