Search
  • Follow NativePlanet
Share
» »அண்ணாமலையார் கோவில் மட்டுமல்ல - திருவண்ணாமலையில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கு தெரியுமா?

அண்ணாமலையார் கோவில் மட்டுமல்ல - திருவண்ணாமலையில் சுற்றிப் பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கு தெரியுமா?

திருவண்ணாமலை என்றாலே நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சிவனின் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான அருணாசலேஸ்வரர் கோவில் மட்டும் தான்! திருவண்ணாமலை வரலாறு மற்றும் ஆன்மீகத்தில் மூழ்கியிருக்கும் தலமாக இருந்தாலும் திருவண்ணாமலையைச் சுற்றி ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்!

1

ஸ்ரீ ரமண ஆசிரமம்

இயற்கை எழில் கொஞ்சும் சூழலுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீ ரமண ஆசிரமம் திருவண்ணாமலையில் தியானம் செய்வதற்கும் உள் அமைதியைக் காண்பதற்கும் ஏற்ற இடமாகும். இந்த ஆசிரமத்தில் ருசியான சாத்விக உணவையும் ருசிக்கலாம். ஆசிரமத்தில் தனித்துவமான மற்றும் அரிய புத்தகங்களைக் கொண்ட ஒரு நூலகமும் உள்ளது. கூட்டத்திலிருந்து ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் இந்த இடம் சரியான தேர்வாகும்.

2

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை நகரத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சாத்தனூர் அணை, ஒரு அற்புதமான பொறியியல் அதிசயமாகும். அணைக்கு அருகே இயற்கை ஆர்வலர்கள் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இனிமையான பூங்காக்கள், மீன் கிரோட்டோ மற்றும் ஒரு பெரிய முதலைப் பண்ணை ஆகியவை அமைந்துள்ளது. திருவண்ணாமலை நகரத்திலிருந்து சிறிது தொலைவில் உள்ள சாத்தனூர் அணையை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் ஒரு நாள் பயணத்தில் பார்வையிட இது ஏற்ற இடமாகும்.

3

படவீடு

கோயில்களின் கிராமம் என்றும் அழைக்கப்படும் படவீடு திருவண்ணாமலையிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பெரிய மற்றும் சிறிய கோயில்களைத் தவிர, சோழப் பேரரசின் தலைவர்களாக இருந்த சம்புவராயர்களின் 13 ஆம் நூற்றாண்டு அரண்மனையின் சுவடுகளை காண பார்வையாளர்கள் இங்கே வர வேண்டும்.

5

செஞ்சி கோட்டை

பிரபலமாக செஞ்சி கோட்டை என்று அறியப்படும் கம்பீரமான கோட்டை மூன்று வெவ்வேறு மலை உச்சி கோட்டைகள், தடித்த சுவர்கள் மற்றும் பாறைகளால் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மராட்டிய மன்னரான சிவாஜி, "இந்தியாவின் மிகவும் அசைக்க முடியாத கோட்டை" என்று பெயரிடும் அளவிற்கு இந்த கோட்டை வலுவானதாக இருந்துள்ளது.

6

யோகி ராம் சுரத்குமார் ஆசிரமம்

திருவண்ணாமலையில் உள்ள மிக அழகான இடங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த புனித ஆசிரமம் விசிறி சாமியார் ஆசிரமம் என்றும் அழைக்கப்படுகிறது. சுவாமிஜியின் பச்சை சிலை கோவிலின் முக்கிய ஈர்ப்பாக உள்ளது, இருப்பினும், பார்வையாளர்கள் வேதங்களைப் பற்றி அறிந்துக்கொள்ள இந்த ஆசிரமம் வாய்ப்பளிக்கிறது.

6

விருபாக்ஷா குகைகள்

திருவண்ணாமலையில் உள்ள இந்த தனித்துவமான குகை ஆசிரமம் இந்து சின்னமான 'ஓம்' வடிவத்தில் உள்ளது. மலையின் சரிவில் புனித நீரூற்றுகள் உள்ளன. 13 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற துறவியான விருபாக்ஷ தேவாவின் நினைவாக இந்த குகைகள் பெயரிடப்பட்டதாகத் தெரிகிறது, அவர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கு கழித்ததாகக் கூறப்படுகிறது.

7

ஸ்கந்தாஷ்ரமம்

அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் ரமணா ஆசிரமத்திற்கு அருகில், திருவண்ணாமலையில் துறவி ரமணர் தங்கியிருந்த குகைகளில் இதுவும் ஒன்று. இந்த இலக்கை அடைய, ஒருவர் நீண்ட தூரம் மலையேற வேண்டும். மேலே இருந்து பார்க்கும் பார்வை நிச்சயமாக உங்களை மெய் சிலிர்க்க வைக்கும். ஸ்கந்தாஸ்ரமம் ஒரு தனித்துவமான கோவில் என்பதை நீங்கள் பார்த்த உடனேயே உங்களால் உணர்ந்திட முடியும்.

8

மமாரா குகைகள்

மமாரா குஹாய் என்ற சொல்லுக்கு 'மரக் குகைகள்' என்று பொருள். இது திருவண்ணாமலை மலைப்பகுதியில் உள்ள ஒரு ஆன்மீக ஸ்தலமாகும். ஆன்மீக ஞானி ஸ்ரீ ரமண மகரிஷி ஆறு வருடங்கள் தவம் மற்றும் தியானம் செய்த குகை இது என்று நம்பப்படுகிறது.

இந்த எல்லா இடங்களுக்கும் மேல் புனிதமானது, மிகவும் பார்வையிடத்தகுந்தது ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் என்பதையாரும் மறுக்க முடியாது.

More News

    Read more about: tiruvannamalai tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+