Search
  • Follow NativePlanet
Share
» »ஏன் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுவதில்லை தெரியுமா?

ஏன் இந்தியர்கள் இந்த நாடுகளுக்கு எல்லாம் சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுவதில்லை தெரியுமா?

இந்திய சுற்றுலாப் பயணிகள் அமெரிக்கா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, சிங்கப்பூர் என உலகின் ஒரு நாட்டையும் விட்டு வைக்காமல் சுற்றி வருகின்றனர். ஆனால் இந்தியர்களும் கூட ஒரு சில நாடுகளை பார்க்காமல் விட்டு வைத்துள்ளனர். அந்த நாடுகள் எல்லாம் பொதுவாகவே மிகவும் குறைவான சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை பெறுகிறது. இந்தியர்கள் செல்ல விரும்பாத அந்த நாடுகளின் லிஸ்ட் இதோ!

1

சோமாலியா

உலகிலேயே மிகவும் ஆபத்தான நாடாக அடிக்கடி பார்க்கப்படுகிறது இந்த சோமாலியா. சோமாலிலாந்து, பன்ட்லேண்ட் மற்றும் சோமாலியா ஆகிய மூன்று பிரிவுகளை அடக்கிய சோமாலியா ஒரு சுயமாக அறிவிக்கப்பட்ட நாடாகும். சோமாலியாவிற்கு உண்மையிலேயே வருகை தருவதை நாம் கருத்தில் கொண்டால், ஒவ்வொரு ஆண்டும் சோமாலியாவிற்கு 100க்கும் குறைவான பார்வையாளர்கள் வருகிறார்கள். பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணத்தினாலேயே பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதில்லை.

2

ஏமன்

சவூதி அரேபியாவை ஒட்டிய உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள நாடான ஏமன், ஒட்டோமான்களின் கீழ் இருந்து இறுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து சுதந்திரம் பெற்ற நாடாகும். அற்புதமான சுற்றுலா தலமாக இருந்த ஏமன் உள்நாட்டு கலவரம் மற்றும் அரசியல் பதற்றம் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இங்கு வர விரும்புவதில்லை. ஏமன் ஒரு ஆண்டிற்கு 500க்கும் குறைவான சுற்றுலாப் பயணிகளை மட்டுமே காண்கிறது.

3

துவாலு

உலகின் 4வது சிறிய நாடான துவாலுவில் வெறும் 11,000 மக்கள் மட்டுமே வாழ்கின்றனர். அழகிய சிறு நாடாக துவாலு இருந்தாலும் கூட, அதிகரித்து வரும் வெப்பநிலையால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த நாடு விரைவில் கடலுக்கடியில் சென்று விடும் என்ற செய்தியை நாம் கூட அடிக்கடி ஊடகங்களில் பார்த்து வருகிறோம். இந்த நாட்டை சுற்றிப் பார்க்க ஆண்டிற்கு 2000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே வருகை தருகின்றனர்.

4

கிரிபாட்டி

மற்றொரு பசிபிக் தீவு நாடான கிரிபாட்டி 33 தீவுகள் மற்றும் மூன்று தீவுக் குழுக்களால் ஆன சிறிய அழகான நாடாகும். 3.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள பவளப்பாறைகள் தீவை தனித்துப்படுத்தி அழகாக காட்டுகின்றது. கிரிபாட்டி தீவுகள், மற்ற நாடுகளிலிருந்து, நவீன தொழில்நுட்பங்களுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் கிரிபாட்டி உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது.

5

மார்ஷல் தீவுகள்

மார்ஷல் தீவுகள் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள எரிமலைத் தீவுகளின் தொடர் ஆகும். ஆஸ்திரேலியாவிற்கும் ஹவாய்க்கும் இடையில் எங்கோ தொலைந்து போன ஒரு வகையான நடுப்பகுதி போல இருக்கும் இந்த தீவுகளில் மொத்தமாக 60,000 மக்கள்தொகை மட்டுமே உள்ளது. பிரபலமான தீவுகள் போல அல்லாமல் மார்ஷல் தீவுகள் தொழில்நுட்பத்தில் இருந்து தொலைதூரத்தில் அமைந்துள்ளதால் ஆண்டிற்கு 6000 சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

6

நௌரா

நௌரா பெரும்பாலும் 'உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடு' என்று முத்திரை குத்தப்படுகிறது. ஆஸ்திரேலியா, நௌராவை தமது சட்டவிரோத குடியேற்றவாசிகளை வடிகட்ட ஒரு தளமாகப் பயன்படுத்துவதால் 70% இப்போது வாழத் தகுதியற்றதாக உள்ளது என்று அறிக்கைகள் கூறுகிறது.

7

சாவோ டோம்

மேற்கு ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடாவில் அமைந்துள்ள சாவோ டோம் மற்றும் பிரின்சிப் ஆகிய இரண்டு தீவுகளால் ஆனது, சீஷெல்ஸுக்குப் பிறகு ஆப்பிரிக்காவின் இரண்டாவது சிறிய நாடாக உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல், இயற்கை சீற்றங்கள் போன்ற காரணிகளுக்காக இங்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர விரும்புவதில்லை.

8

மாலி

உள்ளூர்மயமாக்கப்பட்ட மோதலாக ஆரம்பித்தது, மேற்கு ஆபிரிக்க நாட்டில் எல்லை தாண்டிய இனச் சுத்திகரிப்பு என விரிவடைந்து, ஐ.நா. தனது வரலாற்றில் மிக மோசமான அமைதி காக்கும் பணியை மேற்கொள்ள வழிவகுத்தது இந்த மாலி. கடுமையான பாலைவனத்தால் சூழப்பட்ட ஒரு சோலை, மாலி ஒரு வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, இருப்பினும் உள்நாட்டு கலவரத்தினால் இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதில்லை.

9

ஆப்கானிஸ்தான்

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானில் சோவியத் படையெடுப்பு முதல் அமெரிக்க படையெடுப்பு, தலிபான் வரை ஏகப்பட்ட கலவரங்கள் அந்நாட்டில் நிகழ்ந்து வருகிறது. கலாச்சாரம், உணவு, இயற்கைக்காட்சிகள் என பல விஷயங்கள் இருந்தாலும் ஆப்கானிஸ்தான் செல்ல எந்தவொரு சுற்றுலாப் பயணிக்கும் அச்சம் வரும் தானே.

10

மைக்ரோனேசியா

100,000க்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டு மைக்ரோனேசிய கூட்டாட்சி தீவுகள், மிகவும் அழகான தீவுகளாக உள்ளன. இந்த தீவுகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால் அனைத்து சேவைகளும் கொஞ்சம் விலை உயர்ந்ததாக காணப்படுகிறது. அதனாலேயே இங்கு எந்த சுற்றுலாப் பயணியும் இங்கு வருகை தருவது இல்லை.

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+