Search
  • Follow NativePlanet
Share
» »கேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்! எளிமையான ஏழு யோசனைகள்!

கேர்ள் பிரண்ட்ஸோட கார்ல பிக்னிக் போனா இப்படி போகணும்! எளிமையான ஏழு யோசனைகள்!

கேர்ள் பிரண்டோட கார்ல ரெம்ப தூரம் பயணம் செய்ய ஆசையா? அட காருக்கு எங்க போவேன்னு நினைக்குற சொட்சம் பேரும், அட காதலிக்கு எங்க போவேன்னு நினைக்குர லட்சம் பேரும் இந்த கட்டுரைய படிங்க.

நீங்க ரொம்ப தூரம் பயணிக்கும் வகையில ஒரு சிறப்பான பயணத்துக்கான சூப்பரான யோசனைகள் இங்க குறிப்பிடப் பட்டுருக்கு. சரி நீங்க எப்ப உங்க காதலியோட கார் பயணத்த தொடரப் போறீங்க.

மின்னணு கருவிகளும் சார்ஜர்களும்

மின்னணு கருவிகளும் சார்ஜர்களும்

கருவிகள் இல்லை என்றால் நாம் முழுவதும் தொலைந்துவிடுவோம். நம்மை நாள் தோறும் இயக்குபவைகளே லேப்டாப்பும், மொபைல் போனும்தான். மெயில் இல்லை, வாட்ஸ்ஆப் இல்லை என்றால் அவ்வளவுதான். இதனால் உங்கள் தொலைத் தொடர்பு அலை பேசி கருவிகளை மறக்காமல் எடுத்து வைக்கவேண்டும். அத்துடன் அதற்கு தேவையான சார்ஜர்கள், மற்ற உபகரணங்கள் ஆகியவற்றையும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதெல்லாம் மிக முக்கியம்

இதெல்லாம் மிக முக்கியம்

பவர்பேங்க் என்று அழைக்கப்படும் மின் சேமிக்கும் கலன், லேப் டாப் இன்வெர்டர்ஸ், மின்சாரம் இல்லாத காலங்களில் பயன்படும், டேப்லெட் அல்லது ஐபேட்ஸ், திரைப்படங்கள், கூடுதல் பேட்டரிகள், ஜிபிஎஸ் தொழில் நுட்பத்துடன் மேப், கேமரா உபகரணங்கள் இவை எல்லாவற்றையும் மறக்காமல் எடுத்துக் கொண்டு உங்கள் காதலியையும் அழைத்துச் செல்லுங்கள் ஒரு அழகிய பிரம்மிப்பான சாலை பயணம்.

இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்

இளையராஜாவையும் ஏ ஆர் ரஹ்மானையும் உடன் அழைத்துச் செல்லுங்கள்

உங்கள் சாலைப் பயணம் மிகவும் அழகான முறையில் அமையும். ஆனால் தொடர்ந்து ஓட்டிக் கொண்டே இருக்கமுடியாது. சிறிது நேரமாவது உங்களுக்கு ஓய்வு எடுக்க வேண்டும் எனத் தோன்றும். அப்போது இளையராஜா பாடல்களை ஒலிக்க விட்டு ஓய்வெடுங்கள். முதல் கியரில் ஜிவிபி பாடல்களையும், இரண்டாவது கியரில் விஜய் ஆண்டனி பாடல்களையும் தெறிக்க விட்டு, அடுத்தடுத்து ஜிப்ரான், சநா ஆகியோரின் பாடல்களில் திளைத்திருங்கள். டாப் கியரில் எகிறும் போது ஏ ஆர் ரஹ்மான் அவராகவே வந்து செல்வார். அனிருத்தையும், ஹிப்பாப் ஆதியையும் ஏன் விடுகிறீர்கள் அவர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள். இனிமையான பயணத்தில் இன்னிசையும், மெட்டிசையும்,துள்ளலிசையும் கலந்து சிலிர்ப்பாட்டமும், குத்தாட்டமும், தட்லாட்டமும் கோலாகலமாக கொண்டாடுங்கள்.

நாவினை சிலிர்க்கச் செய்யும்

நாவினை சிலிர்க்கச் செய்யும்

சாலைப் பயணம் செல்லும் போது கண்கள் வெளியில் நோக்கி பல தரப்பட்ட உணவுகளை நாடிச் செல்ல உங்கள் நாவினை நடனமாடச் செய்யும். அந்த உணவுகளின் மணமோ உள்ளிருந்து மூளையைக் குடைந்து நாவின் சுவை மொட்டுக்களை விரைக்கச் செய்து சுவையினை இப்போதே சுவைக்க மூளைக்கு கட்டளையிடும்.

நீங்களும் உங்கள் காதலி ஆசைப்பட்டு விட்டார் என்பதற்காக ஓடி ஆடி அதை வாங்கி, கிடைக்கிற கேப்பில் காதல் செய்வோம் வா என்று அதை ஊட்டி விடுவீர்கள்.

காரை நிறுத்துவதற்கு முன்பாகவே கால்கள் தன்னுடைய ஓட்டத்தை தயார் நிலைப் படுத்தும். காசு கொடுப்பதற்கு முன்பாகவே சூடான கார பண்டங்களும், சுவையான இனிப்பு பண்டங்களும் தொண்டைக் குழியை நிரப்பியிருக்கும். இப்படியெல்லாம் செய்தால் என்ன நடக்கும்?

மருத்துவ உதவி பெட்டி

மருத்துவ உதவி பெட்டி

தலைவலி, குமட்டல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட சிறு வகை தொல்லைகளுக்கு நீங்களே சிறு மருத்துவ உதவிப் பெட்டி தயார் செய்து அதில் தேவையான மருந்துகளை இட்டு வைத்திருங்கள்.அது நல்ல பலனளிக்கும்.

கொசுக்களிடமிருந்தும்,. சூரிய வெப்பத்திடமிருந்தும் உங்களையும் உங்கள் காதலியையும் காக்கும் தேய்ப்பான், தெளிப்பான்களையும் கைவசம் வைத்திருத்தல் அறிவுறுத்தத்தக்கது. நீங்கள் உங்கள் காதலியின் மேல் செலுத்தும் அக்கறையில் அவர் அப்படியே ஐஸாக கரைந்துவிடுவார். அப்றம் உங்களுக்கும் ஜாலி தானே..

அவசரகால உதவிப் பெட்டி

அவசரகால உதவிப் பெட்டி

உங்களுக்கு எப்போதும் நல்ல எதிர்காலம்தான் அமையும். உங்கள் மனதைப் போலவே நீங்களும் நன்றாகவே இருப்பீர்கள். ஆனால் எதிரில் வருபவர்கள் உங்களைப் போலவே கவனத்துடன் இருப்பார்கள் என்று உறுதிபட எடுத்துக் கொள்ளமுடியாதுதானே. அதுவும் இந்த உலகத்திலேயே மிகவும் உங்களை நேசிக்கும், உங்களால் நேசிக்கப்படும் காதலியுடன் செல்லும்போது, அதற்காகவே நீங்கள் சில அவசர கால விசயங்களைத் தயாராக வைத்திருப்பது மிகவும் சிறந்ததாகும்.

என்னெல்லாம்

என்னெல்லாம்


பிளாஸ் லைட், முதல் உதவிப் பெட்டி, நீர் பாட்டில்கள், மாத்திரைகள், போர்வைகள், மழைக்கான உடைகள், கைக்குட்டைகள் என இவற்றை தேவைக்கும் ஒன்று அதிகமாக காரில் அவசர காலத்தில் எடுக்க வசதியாக பொருத்தி வைத்திருத்தல் நலம்.

உங்கள் இருவரில் யாருக்கேனும் ஒரு வருக்கு ஆபத்து நேரிட்டால் மற்றொருவரை சிரமத்துக்குள்ளாகாத வாறு காப்பதற்காகவாவது இந்த அமைப்பு பயன்படும் அல்லவா?

மாற்று உடைகள்

மாற்று உடைகள்


நாளுக்கு நாள் வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. உங்கள் காதலியுடன் பயணப்படும்போது உங்கள் சுகாதாரத்தில் அவரும் அதிக அக்கறை வைத்திருப்பார்தானே. அவரின் மேல் உங்களுக்கும் அக்கறை இருக்கும் அல்லவா? அப்போது மழையில் நனைந்தாலோ குளிரில் நடுங்கினாலோ வழித் தவறி புயலையோ, சூறாவளியையோ சந்திக்க நேர்ந்தாலோ அதை எதிர் கொள்ளும் வகையில் உடை அணிவது தேவைதான்.

உணவு மற்றும் நீர்

உணவு மற்றும் நீர்


வழி தவறினாலோ, வழியில் விடுதிகள் எதுவும் இல்லை என்றாலோ உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் தவித்திடும் நிலைமை ஏற்படும். இதனால் உணவு மற்றும் நீர் எப்போதும் இருப்பு இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அதிக பட்சம் நீருக்காவது உத்திரவாதம் இருக்கவேண்டும்.

கார் உபகரணங்கள் & டாக்குமன்ட்ஸ்

கார் உபகரணங்கள் & டாக்குமன்ட்ஸ்


இதுவரை இங்கே குறிப்பிடப்பட்டதோடு மட்டுமல்லாமல், காருக்கான உபகரணங்களையும் சரியாக எடுத்து வைத்திருத்தல் அவசியமாகும். அவசரகால பெட்டி, கூடுதல் வண்டி சக்கரம், உபகரணப் பெட்டி, வார்னிங் டிரையங்கள், பிரேக்டவுன் கவர் என அனைத்தையும் கொண்டிருத்தல் வேண்டும்.

பியுசி எனும் பொல்யுசன் அண்டர் கண்ட்ரோல், வண்டி பதிவு சான்று, உங்கள் அடையாள அட்டை, மற்றும் பல வண்டிக்கான புத்தகங்களையும் தவறாமல் எடுத்து வைத்திருக்கவேண்டும்.

Read more about: travel tips
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X