» »திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவில்

Written By: Staff

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் இருக்கும் சுப்பிரமணிய சுவாமி கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற தமிழ் கடவுளான முருகனுக்குரிய அறுபடை வீடுகளில் இரண்டாம் படை எனப் போற்றப்படும் மிகச் சிறப்புமிக்க கோயிலாகும்.

Karthikeyan

இந்த முருகன் கோவிலின் விஷேசமே இதன் இருப்பு தான்; கடற்புரத்தில் அமைந்திருப்பது கோவிலுக்கு ஒரு தனித்துவமான அடையாளத்தைத் தருகிறது. தமிழ் நாட்டில் கடற்கரையையொட்டி அமைந்திருக்கும் ஒரு சில கோவில்களில் முக்கியமான கோவில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்.

Rajagopuram

Photo Courtesy : Sa.Balamurugan

மற்ற அறுபடை வீடுகளில் ஐந்தும் மலைமீது வீற்றிருக்க இந்த ஒன்று மட்டும் வங்காள விரிகுடா கடலின் அருகே இருக்கிறது.

இந்தியாவில் மிகப் பெரிய கோவில் வளாகங்கள் கொண்டவைகளில் திருச்செந்தூர் கோவிலும் ஒன்று.

தமிழ் நாடு மட்டுமல்ல வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் அதிகம் ஈர்க்கும் ஒரு முக்கிய முருகன் கோவில் இது. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, ஆஸ்த்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

seashore

Photo Courtesy : Aravind Sivaraj

மற்ற கோவிலைப் போல இந்த கோவில் மன்னர்களால் கட்டப்பட்டதல்ல; மாறாக, மூன்று துறவிகளால் கட்டப்பட்டது.

இந்துக் கோவில்களிலேயே கிழக்குப்புற வாசல் இல்லாமல் மேற்குப்புற வாசல் கொண்ட கோவில்.

தமிழ்நாட்டில், சான்றிதழ் பெற்ற நான்காவது கோவில் இது.

தமிழ்நாட்டிலேயே கருவறை தரை மட்டத்திற்கு கீழ் இருக்கும் ஒரே கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில்.

entrance

Photo courtesy : Rajarajan _Tamilian

1646 முதல் 1648 வரை இரண்டு ஆண்டுகள் தச்சு கிழக்கு இந்திய‌ கம்பேனி திருச்செந்தூர் முருகன் கோவிலை ஆக்கிரமித்திருந்தது. பின்னர், நாயக்க மன்னர்களின் முயற்சியால் மீண்டும் பக்தர்களுக்கு கோவில் திறந்துவிடப்பட்டது.

beach

Photo Courtesy : Tamizhparithi Maari

இந்தக் கோவிலின் சிறப்பம்சம் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் கிழக்கு திசையில்தான் இருக்க‌ வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது.

Read more about: thiruchendur murugan temples

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்