Search
  • Follow NativePlanet
Share
» »தீர்ப்புக்காக ஓபிஎஸ் சென்ற கோவில்! வெற்றி மேல் வெற்றி தரும் ஐஸ்வர்ய மகாலட்சுமி!

தீர்ப்புக்காக ஓபிஎஸ் சென்ற கோவில்! வெற்றி மேல் வெற்றி தரும் ஐஸ்வர்ய மகாலட்சுமி!

தீர்ப்புக்காக ஓபிஎஸ் சென்ற கோவில்! வெற்றி மேல் வெற்றி தரும் ஐஸ்வர்ய மகாலட்சுமி!

By Udhay

திருச்சி மாவட்டம் வெள்ளூர் அருகே அமைந்துள்ளது இந்த திருக்காமஸ்வரம் கோவில் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. இதன் மூலவர் திருக்காமேஸ்வரர் ஆவார். தாயார் சிவகாமசுந்தரி. இந்த கோவிலுக்கு பல சிறப்புகள் உண்டு. வேண்டியவர்களுக்கு அருளும் சிவகாமசுந்தரி இந்த கோவிலின் சிறப்புக்களில் ஒன்றாவார். தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் இந்த கோவிலுக்கு சென்றதாலேயே அவருக்கு வெற்றி எப்போதுமே தன்வசப்படுகிறது என்றும் கூறுபவர்கள் இருக்கிறார்கள். நீங்களும் தொடர்ந்து வெற்றி பெற இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்.

இந்த பதிவில் திருக்காமேஸ்வரர் கோவில் - வரலாறு, நேரம், முகவரி மற்றும் புகைப்படங்கள்பற்றியும், எப்படி செல்வது என்பன பற்றியும் குறிப்பிட்டுள்ளோம். எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

கோவிலின் சிறப்பம்சம்

கோவிலின் சிறப்பம்சம்


மகாலட்சுமி அம்மன் இந்த கோவிலில் சிவ பெருமானை வழிபட்டதாக கூறப்படுகிறது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்பவர்கள் மற்றும் வாங்குபவர்கள் இந்த கோவிலில் வந்து வழிபட்டு செல்கிறார்கள். வெற்றி மேல் வெற்றி குவிக்க இந்த கோவிலுக்கு வந்து பூசை செய்துவிட்டு செல்கிறார்கள்.

Nsmohan

வரலாறு

வரலாறு

இந்த கோவிலின் வரலாறு மிகவும் சுவாரசியமானது. தட்சன் யாகம் நடத்திய கதை எல்லாருக்கும் தெரியும்தானே. அதாவது சிவனை விட தான் எந்த விதத்திலும் குறைந்தவனில்லை என யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் சிவனுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. எனினும் தட்சனின் மகளாகிய பார்வதி தேவி சென்று அவமானப்பட்டு திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்டு சிவபெருமான் பார்வதியை சுட்டெரித்தாராம்.

Ssriram mt

நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்


வெள்ளிக்கிழமை விடியற்காலை 6 முதல் 7 மணிக்குள் 16 வகையான அபிஷேகம் செய்து, 16 நெய்தீபம் ஏற்றி, 16 செந்தாமரை மலர்கள் சாத்தி, வில்வமரத்தோடு சேர்த்து 16 முறை வலம் வர எல்லா தோஷங்களும் நீங்கி, வெற்றி மேல் வெற்றிகள் குவியுமாம்.

Nsmohan

வழிபாடும் வேண்டுதலும்

வழிபாடும் வேண்டுதலும்


மனக்குழப்பம், தோல்வி, ஏமாற்றம், வெற்றியில் தடை, திருமணம் குழந்தைப் பேறு குழப்பம், காரியத்தடை முதலியன நீங்க இந்த கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். திருமணம் நடப்பதற்கு இங்கு வந்து ஜாதகத்தை வைத்து வழிபடுகிறார்கள்.
Nsmohan

பழமையும் கட்டிடக்கலையும்

பழமையும் கட்டிடக்கலையும்

கிபி ஆறாம் நூற்றாண்டில் இந்த கோவில் புணரமைக்கப்பட்டுள்ளது. முதலாம் விஜயாதித்த சோழன் காலத்தில் புணரமைக்கப்பட்டது என்று கல்வெட்டு குறிப்புகள் கூறுகின்றன ஆனால், இதைக் கட்டியவர் யார் என்பது தெரியவில்லை.
இந்த கோவிலுக்கு தெற்கு மற்றும் கிழக்கு திசைக்கு ஒன்று என இரண்டு வாசல்கள் இருக்கின்றன.

Nsmohan

மற்ற தெய்வங்கள்

மற்ற தெய்வங்கள்

திருக்காமேஸ்வர கோவிலில் இருக்கும் மற்ற தெய்வங்களில் தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை ஆகியவர்களும், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர் ஆகியோரும் அடங்கும்.
Nsmohan

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

இந்த கோவிலின் நடை காலை 9 மணிக்கு திறக்கப்படுகிறது. முற்பகல் 11மணி வரை திறந்திருக்கும் நடை வாசல் அடைக்கப்பட்டு பின் 6 மணிக்கு திறக்கப்படுகிறது. இரவு 7.30 மணிக்கு பூசைக்கு பின் மீண்டும் நடை அடைக்கப்படும்.

Logic riches

எப்படி செல்வது

எப்படி செல்வது


திருச்சியிலிருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த கோவில். இது முசிறி அருகே அமைந்துள்ள வெள்ளூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ள கோவில் ஆகும்.

ஸ்ரீரங்கம் வழியாக பயணித்து கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்திலேயே கோவிலை அடையமுடியும்.

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+