» »இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானங்கள்

இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் மைதானங்கள்

Posted By: Udhaya

உலகில் எந்த நாட்டிலும் இந்தியாவில் இருப்பது போல் கிரிக்கெட் மீது தணியாத ஆர்வம் கொண்ட ரசிகர்கள் கிடையாது. இங்கு கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பார்க்கப்படுகிறது. அதை மெய்யாக்கும் விதத்தில் தற்போது பீகார் மாநிலத்தில் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கருக்காக ஒரு கோயிலே கட்டப்பட்டு வருகிறது. இப்படி கிரிக்கெட்டை தீவிரமாக காதலிக்கும் ரசிகர்கள் அதிகமாக இருப்பதால் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவே நிறைய கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுகின்றன. இதற்கு தகுந்தாற்போல் இந்தியாவில் கிரிக்கெட் மைதானங்களுக்கும் பஞ்சமில்லை. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கிரிக்கெட் மைதானங்களை கொண்ட நாடு இந்தியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈடன் கார்டன், கொல்கத்தா

ஈடன் கார்டன், கொல்கத்தா

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் 2-வது பெரிய கிரிக்கெட் மைதானமாக ஈடன் கார்டன் மைதானம் அறியப்படுகிறது. அதோடு இந்தியாவின் மிகப்பழமையான கிரிக்கெட் மைதானமாகவும் கருதப்படும் ஈடன் கார்டன் மைதானம் இந்திய இராணுவத்திற்கு சொந்தமானது என்பது நிறைய பேருக்கு தெரியாத செய்தி. தற்போது டெஸ்ட், ஒருநாள், 20-20 என்று அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளும் நடத்தப்படும் ஈடன் கார்டன் மைதானத்தில் 66,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதி உள்ளது.

PC: JokerDurden

நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராய்ப்பூர்

நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராய்ப்பூர்

சத்தீஸ்கரின் நயா ராய்பூர் (புதிய ராய்பூர்) பகுதியில் அமைந்திருக்கும் ராய்பூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்தான் இந்தியாவில் அண்மையில் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானமாகும். இது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக கட்டப்பட்டிருந்தாலும் இதுவரை கனடா மற்றும் சத்தீஸ்கர் மாநில அணிகள் பங்கேற்ற ஒரே ஒரு போட்டி மட்டுமே இங்கு நடந்துள்ளது. இந்த மைதானம் 65,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது.

PC: MohitSingh

ஜவாஹர்லால் கிரிக்கெட் மைதானம், கொச்சி

ஜவாஹர்லால் கிரிக்கெட் மைதானம், கொச்சி

கொச்சியில் அமைந்திருக்கும் கலூர் சர்வதேச மைதானம் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் என்ற பெயரிலும் அறியப்படுகிறது. 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானம் முதலில் கால்பந்து ஆட்டத்துக்காக கட்டப்பட்டாலும் எண்ணற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் இங்கு நடந்துள்ளன. அதோடு அரசியல் பேரணிகள், பொருட்காட்சிகள் போன்றவற்றுக்காகவும் கலூர் சர்வதேச மைதானம் பயன்படுத்தப்படுகிறது.

PC: Bittuspeeding

ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்

ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானம், ஹைதராபாத்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் முன்னர் விசாகா சர்வதேச கிரிக்கெட் மைதானம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. தற்போது 60,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்ட இந்த மைதானத்தின் இருக்கை வசதியை இன்னும் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக தகவல்.


PC: Jms1241

திருவனந்தபுரம் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

திருவனந்தபுரம் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள இந்த கிரிக்கெட் மைதானம் கால்பந்து விளையாடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

முதலில் கால்பந்து மைதானமாக இருந்த மைதானத்தை பின்னர் கிரிக்கெட்டுக்கும் ஏற்றவாறு அமைத்துள்ளனர். 55000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த ஸ்டேடியத்தில் உள்ளூர் போட்டிகள் நடக்கின்றன.


PC: Arsenal'

மகாராஷ்டிர சர்வதேச கிரிக்கெட் மைதானம்

மகாராஷ்டிர சர்வதேச கிரிக்கெட் மைதானம்

மகாராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானம் என்ற பெயரிலும் அறியப்படும் சுப்ரதா ராய் சஹாரா ஸ்டேடியம் புனே நகரின் மையத்தில் அமைந்திருக்கிறது. இந்த மைதானம் 55,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது. இங்கு மழைநீர் வடிகால், ஸ்குவாஷ் மற்றும் பேட்மிட்டன் கோர்ட்டுகள், நீச்சல் குளம், ஸ்பா, உணவகம், மது விடுதி போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதால் இந்த மைதானம் இந்தியாவின் மேம்படுததப்பட்ட கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.


PC: BPositive -

பெரோஷா கோட்லா மைதானம், டெல்லி

பெரோஷா கோட்லா மைதானம், டெல்லி

நாட்டின் தலைநகர் டெல்லியில் மைந்துள்ள பெரோஷா கோட்லா மைதானம் 55000 பேர் ஒரே நேரத்தில் அமரும் வசதி கொண்டது. அதிக சாதனைகள் நிகழ்த்தப்பட்ட மைதானம் என்னும் பெருமைக்குரியது இந்த மைதானம்.

PC: Bill william compton

நவி மும்பை கிரிக்கெட் மைதானம்

நவி மும்பை கிரிக்கெட் மைதானம்

இம்மைதானத்தின் கொள்ளளவும் 55000 தான். இங்கு சர்வதேச போட்டிகள், உள்ளூர் போட்டிகள், ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன.

Pc: Sankarshan Mukhopadhyay

சர்தாய் படேல் குஜராத் ஸ்டேடியம்

சர்தாய் படேல் குஜராத் ஸ்டேடியம்

குஜராத்தின் அஹமதாபாத் நகரில் அமைந்திருக்கும் சர்தார் பட்டேல் ஸ்டேடியம் மோட்டேரா ஸ்டேடியம் என்றும் அறியப்படுகிறது. இந்த கிரிக்கெட் மைதானம் 54,000 பேர் அமர்ந்து பார்க்கும் வசதிகொண்டது.

PC: Helfmann

விதர்பா கிரிக்கெட் மைதானம், நாக்பூர்

விதர்பா கிரிக்கெட் மைதானம், நாக்பூர்

45000 பேர் அமரும் வசதிகொண்ட விதர்பா கிரிக்கெட் மைதானம் நாக்பூரில் அமைந்துள்ளது.

PC: Ashwinikalantri

Read more about: cricket travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்