Search
  • Follow NativePlanet
Share
» »டைகர் ஹில்ஸ் - ஊட்டி

டைகர் ஹில்ஸ் - ஊட்டி

By Staff

தமிழ் நாட்டில் எத்தனை மலைவாசஸ்தலங்கள் இருந்தாலும் இன்றும் அதிகளவு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பது மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகின்ற ஊட்டிதான். அந்தக் காலம் தொட்டு இன்று வரை புதுமணத் தம்பதியருக்கு விரும்பி வரக்கூடிய இடம் ஊட்டி. சில்லிடவைக்கும் குளிர், சுற்றி பசுமை பொங்கும் மரங்கள், செடிகள், உயிரியல் பூங்கா, ஊட்டி ரயில், பைகாரா படகு தளம் என்று தேனிலவுக்கு உகந்த இடம் ஊட்டி.

hills

ஊட்டி ரயில், உயிரியல் பூங்கா, ஏரிகள் என பலவித சுற்றுலா தலங்கள் கொண்ட ஊட்டியில் அதிகம் தெரியாத இடம் டைகர் ஹில்ஸ்.

ஊட்டியின் கிழக்குப் பகுதியில், நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் இருக்கிறது டைகர் ஹில்ஸ்.

Tiger
சமீப காலமாக, சுற்றுலா பயணிகள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாகி டைகர் ஹில்ஸை நோக்கி படையெடுக்க‌ ஆரம்பித்திருக்கின்றனர். இந்த மலை உச்சியிலிருந்து நீங்கள் பார்க்கும் காட்சி, அது தரும் அனுபவம், வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஒரு நல்ல தொலை நோக்காடி(Binocular) மூலம், நீங்கள் மேலிருந்து சுற்றியும் பார்க்கும் காட்சிகள் பெரும் பரவசத்தைத் தரும். மேலும் எந்தவித இரைச்சல், சத்தங்கள் இல்லாமல், பறவைகளின் கீச்சொலியும், காற்றின் சல சலப்பும் மட்டுமே கேட்கும் ஒரு அற்புதமான இடம்.
Tiger

மலையின் உச்சியில் இருக்கும் நீர்த்தேக்கம் மூலமாகத்தான் ஊட்டி நகருக்கு தண்ணீர் வருகிறது. கண்ணாடி போல் தெளிவான நீரூற்றுகளும், சுற்றியிருக்கும் அடர்த்தியான காடுகளும், தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் மேகங்களும் எவரையும் மயக்கிவிடும். இதுதவிர, அரிய காளான் செடிகளை இங்கு பார்க்க முடியும்.

தனிமை விரும்பிகள், புகைப்பட ஆர்வலர்கள், புதுமண தம்பதிகள் அவசியம் செல்ல வேண்டிய இடம்.

Read more about: tiger hills ooty
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X