Search
  • Follow NativePlanet
Share
» »டாப் 10 ஆடம்பர ஹோட்டல்கள்!!!

டாப் 10 ஆடம்பர ஹோட்டல்கள்!!!

By Super Admin

ஒரு ஆடம்பர ஹோட்டலில் பொழுதைக் கழிப்பதென்பது சொர்கத்தில் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும். அதற்கு காரணம் இன்று உலகம் முழுக்க உள்ள ஆடம்பர ஹோட்டல்களில் இல்லாத வசதிகளே இல்லை என்றே சொல்லலாம்.

இந்த ஹோட்டல்களில் உள்ள வசதிகள் மட்டுமின்றி அவற்றின் அமைவிடமும் கூடுதல் அழகையும், ஆடம்பரத்தையும் கொடுக்கிறது.

அதாவது பனிமலைக்கு மேல் உள்ள ஹோட்டல்கள், ஏரிக்கு மத்தியில் உள்ள ஹோட்டல்கள் என்று இயற்கையோடு கைகோர்த்து உங்களை சொர்கத்தில் மிதக்கச் செய்துவிடுகின்றன. அந்த வகையில் இந்தியாவிலுள்ள டாப் 10 ஆடம்பர ஹோட்டல்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

தி லீலா பேலஸ், உதைப்பூர்

தி லீலா பேலஸ், உதைப்பூர்

ராஜஸ்தானின் உதைப்பூர் நகரில் அழகிய பிச்சோலா ஏரிக்கு மத்தியில் மத்தியில் அமைந்துள்ள தி லீலா பேலஸ் ஹோட்டல் சில நேரங்களில் கிழக்கின் வெனிஸ் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு லேக் வியூ ரூம் 26,000 ரூபாயும், மகாராஜா சூட் ஒன்று 2 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தி ஓபராய் அமரவிலாஸ் ஆக்ரா ஹோட்டல், ஆக்ரா

தி ஓபராய் அமரவிலாஸ் ஆக்ரா ஹோட்டல், ஆக்ரா

தி ஓபராய் அமரவிலாஸ் ஆக்ரா ஹோட்டல், தாஜ் மஹாலிலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் வெகு அருகிலேயே இருப்பதால் நீங்கள் உங்கள் அறையின் ஜன்னல் கதவுகள் வழியாக எப்போதும் தாஜ் மஹாலை பார்த்து ரசித்துகொண்டே இருக்கலாம். மேலும் இந்தியாவின் மிகச் சிறந்த ஸ்பாக்களில் ஒன்றாக இந்த ஹோட்டலின் ஸ்பா கருதப்படுகிறது. இங்கு ஒரு ப்ரீமியம் ரூம் 35,000 ரூபாயும், கோஹினூர் சூட் ஒன்று 2.5 லட்ச ரூபாயும் ஆகும்.

தி தாஜ் மஹால் பேலஸ், மும்பை

தி தாஜ் மஹால் பேலஸ், மும்பை

மும்பையின் அடையாளமாக கேட் ஆஃப் இந்தியாவுக்கு அருகிலேயே அமைந்திக்கும் தி தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் இந்தியாவின் ஆடம்பரமான ஹோட்டல் மட்டுமல்லாமல் பாரம்பரியமான ஹோட்டல்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு ஒரு சுப்பீரியர் ரூம் 21,500 ரூபாயும், கிராண்ட் சூட் ஒன்று 1.7 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தி லீலா பேலஸ், புது டெல்லி

தி லீலா பேலஸ், புது டெல்லி

புது டெல்லியின் காஸ்ட்லி பகுதிகளில் ஒன்றான சாணக்யபுரியில் தி லீலா பேலஸ் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் உள்ள புல்லட் ஃப்ரூப் (துப்பாக்கி குண்டு துளைக்காத) ஜன்னல் கண்ணாடிகள் 1800 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு டீலக்ஸ் டபுள் ரூம் 25,000 ரூபாயும், மகாராஜா சூட் ஒன்று 4.5 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தி ஓபராய், குர்காவ்ன்

தி ஓபராய், குர்காவ்ன்

புதுடெல்லியிலிருந்து 33 கி.மீ தொலைவில் உள்ள ஹரியானா மாநிலத்தின் குர்காவ்ன் பகுதியில் தி ஓபராய் ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் டிராவல் அண்ட் டூரிசம் துறையின் ஆஸ்கார் என்று கருதப்படும் 'வேர்ல்ட் டிராவல் அவார்ட்ஸ்' குழுமத்தால் '2011-ல் உலகின் முன்னணி ஆடம்பர ஹோட்டல் என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு டீலக்ஸ் டபுள் ரூம் 30,000 ரூபாயும், பிரசிடென்ஷியல் சூட் ஒன்று 3 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தாஜ் லேக் பேலஸ், உதைப்பூர்

தாஜ் லேக் பேலஸ், உதைப்பூர்

இந்தியாவின் மிகச் சிறந்த ஆடம்பர ஹோட்டலாக அறியப்படும் தாஜ் லேக் பேலஸ், ராஜஸ்தான் மாநிலம் உதைப்பூரில் பிச்சோலா ஏரியின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த ஹோட்டல் அதிக அளவில் காதலர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் வந்து செல்லும் இடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு ஒரு டீலக்ஸ் டபுள் ரூம் 36,000 ரூபாயும், கிராண்ட் பிரசிடென்ஷியல் சூட் ஒன்று 6 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தி ஓபராய், மும்பை

தி ஓபராய், மும்பை

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஒரு முறை இந்தியா வந்தபோது இந்த ஹோட்டலில் தங்கினார் என்று சொல்லப்படுகிறது. இங்கு ஒரு டீலக்ஸ் டபுள் ரூம் 25,000 ரூபாயும், பிரசிடென்ஷியல் சூட் ஒன்று 3 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தாஜ் லேண்ட்ஸ் எண்ட், மும்பை

தாஜ் லேண்ட்ஸ் எண்ட், மும்பை

மும்பையின் பாந்த்ரா பகுதியில் அரபிக்கடலின் கரையோரத்தில் அமைந்திருக்கும் தாஜ் லேண்ட்ஸ் எண்ட் ஹோட்டலில் இருந்தவாறு நீங்கள் அற்புதமான சூரிய அஸ்த்தமனக் காட்சியை கண்டு ரசிக்கலாம். இங்கு ஒரு டீலக்ஸ் ரூம் 23,000 ரூபாயும், பிரசிடென்ஷியல் சூட் ஒன்று 2.5 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தி ஓபராய் ராஜ்விலாஸ், ஜெய்ப்பூர்

தி ஓபராய் ராஜ்விலாஸ், ஜெய்ப்பூர்

இந்தியாவின் ராஜபுதன அரசின் ராஜரீக நினைவுகளை தூண்டியெழுப்பும் விதமாக தி ஓபராய் ராஜ்விலாஸ் ஹோட்டல் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வீற்றிருக்கிறது. இங்கு ஒரு ப்ரீமியம் ரூம் 35,000 ரூபாயும், கோஹினூர் வில்லா ஒன்று 2.3 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

தாஜ் ஃபலக்னுமா பேலஸ், ஹைதராபாத்

தாஜ் ஃபலக்னுமா பேலஸ், ஹைதராபாத்

ஹைதராபாத்தில் அமைந்துள்ள தாஜ் ஃபலக்னுமா பேலஸ் முன்பு நிஜாமுக்கு சொந்தமான அரண்மனையாக இருந்தது. இதை தற்போது ;தாஜ் க்ரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்' இடம் நிஜாம் வம்சாவழியினர் குத்தகைக்கு விட்டுள்ளனர். இந்த ஹோட்டல் மேகங்களின் ஊடாக கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரத்தில் அமைந்திருப்பதால் 'மிரர் ஆஃப் தி ஸ்கை' என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒரு டீலக்ஸ் ரூம் 33,000 ரூபாயும், கிராண்ட் ராயல் சூட் ஒன்று 1.95 லட்ச ரூபாயும் ஆகும்.

படம்

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+