• Follow NativePlanet
Share
» »பிப்ரவரி மாத கிளைமேட்டை அனுபவிப்பதற்கு ஏற்ற இந்தியாவின் டாப் 10 மலை பிரதேசங்கள்

பிப்ரவரி மாத கிளைமேட்டை அனுபவிப்பதற்கு ஏற்ற இந்தியாவின் டாப் 10 மலை பிரதேசங்கள்

இந்தியாவில் கோடை காலமான ஏப்ரல் - மே மாதங்களில் தான் மக்கள் குளுமையை அனுபவிக்க மலை பிரதேசங்களுக்கு அதிகமாக செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரியிலேயே வெயில் வாட்டி வதைக்க துவங்கி விட்டது. பகலில் வெயில், மாலையில் குளிர் என இரண்டும் கலந்த ஒரு க்ளைமேட்டை பிப்ரவரி மாதத்தில் தான் அனுபவிக்க முடியும். இந்த மாதத்தின் க்ளைமேட்டை அனுபவிப்பதற்காக கண்டிப்பாக பார்க்க வேண்டிய 10 மலைவாசஸ்தலங்களை பற்றி இங்கே பார்ப்போம்.

Hill Station

குல்மார்க்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ளது குல்மார்க். இங்கு பிப்ரவரி மாதத்தில் பனி மூடிய சரிவுகளை பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். இயற்கை காட்சியின் கொள்ளை அழகை நமக்கு வாரி வழங்குகிறது. பனிச்சறுக்கு விளையாட்டுக்கள், கோண்டோலா சவாரி போன்றவை இங்கு மிகச் சிறப்பானதாக இருக்கும். தால் ஏரியில் படகு சவாரி செய்ய ஏற்ற மாதம் இதுவாகும்.

அவுலி

உத்தரகாண்ட் மாவட்டத்தில் உள்ளது அவுலி. அவுலியில் இந்த பிப்ரவரி மாதத்தில் அழகிய பனிப்பொழிவுகளும், பரந்த இமயமலை காட்சிகளும் பார்ப்பதற்கு அத்தனை சுகமான அனுபவமாக இருக்கும். இந்தியாவின் சிறந்த பனி சறுக்கு மையமாகவும் இது விளங்குகிறது. பிப்ரவரி மாதத்தில் வீசும் இதமான காற்று, பனிச்சறுக்கிற்கு ஏற்றவாறு சூழ்நிலையை அமைத்து தருகிறது. எனவே இங்கு பிப்ரவரி மாதத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் சென்று அவுலியின் இயற்கை அழகை ரசிக்கின்றனர்.

மணாலி

மணாலியில் உள்ள பனிமூட்டமான நிலப்பரப்புகள் பிப்ரவரி மாத சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளன. சோலாங் பள்ளத்தாக்கில் உள்ள பனி சறுக்கு மிகவும் அதிகமான சுற்றுலா பயணிகள் வரும் இடமாக உள்ளது.

Manali

டார்ஜிலிங்

தெளிவான பிப்ரவரி மாத வானிலை அற்புதமான கஞ்சான் ஜங்கா மலைகளின் காட்சிகளை பார்ப்பதற்கு ஏற்றதாக உள்ளது. பசுமையான தேயிலைத் தோட்டங்களை பார்ப்பதற்கும், மிக நீண்ட ரயில் பயணத்திற்கும் இனிமையான மாதமாக பிப்ரவரி மாதம் உள்ளது.

மூணாறு

மூணாறில் பிப்ரவரி மாதத்தில் தேயிலைத் தோட்டங்கள் முழுவதும் முடிவில்லாமல் நீண்டு ஒரு அழகான இயற்கை காட்சியை நமக்கு வழங்குகிறது. பிப்ரவரி மாதத்தின் குளிர்ந்த காற்றும், மூடுபனி நிறைந்த நீர்வீழ்ச்சியின் அழகும் அனைவரும் கண்டு களித்து ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.

ஊட்டி

ஊட்டியில் பிப்ரவரி மாதத்தில் மூடுபனியின் காரணமாக பரந்து விரிந்த மலைகளும் தேயிலைத் தோட்டங்களும் ஒரு அமைதியான சூழ்நிலை உருவாகின்றன. இது மனதிற்கு இதமான ஒரு அனுபவத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்துகிறது. கூட்டம் குறைவாக இருப்பதால் பல இடங்களை அவசரம் இல்லாமல் நிதானமாகவும் பார்க்க முடியும்.

சிம்லா

பிப்ரவரி மாதத்தில் சிம்லாவில் பனிப்பாறைகள் மற்றும் பணிச்சறுக்குகள் அதன் அழகை மேலும் மெருகூட்டுகின்றன. இங்குள்ள சாகச விளையாட்டுக்கள், மலைகளில் விளையாடும் திரில்லிங்கான அனுபவத்தை உண்டாக்குகின்றன.

Shimla

தவாங்

தவாங்கின் பணி மூடிய சிகரங்களும், பழங்கால கோயில்களும் பிப்ரவரி மாதத்தை ஒரு மயக்கும் இடமாக மாற்றுகின்றன. கோயில்களில் அமைதியை அனுபவிக்க பிப்ரவரி மாதத்தில் சென்று அங்குள்ள புத்தமத ஆலயங்களில் வழிபடுவது சிறப்பு. மேலும் சேலா பாஸின் உறைந்த அழகையும் வியந்து கண்டு களிக்கலாம்.

பெல்லிங்

பிப்ரவரி மாதத்தில் பெல்லிங்கில் உள்ள கஞ்சன்ஜங்கா மலையின் காட்சிகள் மனதை மயக்கும் வண்ணமாக உள்ளது. இங்கு உள்ள புத்த மத கோயிலில் ரம்மியமான இயற்கை காட்சி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் உள்ளது.

கொடைக்கானல்

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் குளிர்ந்த பிப்ரவரி வானிலை படகு சவாரிக்கு ஏற்றதாகவும், கோக்கர்ஸ் வாக்கில் அழகான பள்ளத்தாக்கின் அழகை ரசிக்கலாம்.அதன் மேல் தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்களின் ரம்மியமான காட்சியை பார்ப்பதற்கு மனதிற்கு மிகவும் இனிமையாக இருக்கும்.

More News

    Read more about: hill stations
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+